Wednesday, 27 March 2013

காமராஜர் நேர்மைக்கு ஒரு எடுத்துக் காட்டு!!

சத்தியத்தின் மறு பெயர்தான் காமராஜர் !!



 என் உயிரினும் மேலாக நான் போற்றி வணங்கிடும் 

எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! முதற்கண் 

உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 

நல் வாழ்த்துக்கள்.


இன்றைய தினம் எனது  " எண்ணத்தில் 

தோன்றியவை " பக்கத்தில் நான் உங்களது 

சிந்தனைக்கு தரும் விருந்து என்னவென்றால் 

எளிமை,நேர்மை,உண்மை,வாய்மை,சத்தியம்,

உள்ளத்தில் என்ன உள்ளதோ அதைமட்டும் 

பேசுவது, மக்களின் நலன் மட்டுமே தனது 

வாழ்கையின் இலட்சியமாக வாழ்ந்து மறைந்திட்ட 

ஒரு தியாக தீபத்தின் வாழ்வினில் நடந்தவைகளில் 

நான் கேட்டதை,படித்ததை இன்றைய இளைய 

சமுதாயத்தினர் அறிந்திடல் வேண்டும் என்ற எனது 

தணியாத ஆசை மட்டுமல்ல அவர்களுக்கு எங்கே 

இதுபோன்ற நல்லதொரு  வாய்ப்பு கிடைக்குமோ 

இல்லையோ 

எனக்கு தெரியாது. ஆனால் இது உண்மையிலேயே 

ஒரு நெடுந்தொடர் கட்டுரையாக அமைய உள்ளது 

(நீங்கள் விரும்பினால்). வர இருக்கின்ற அந்த 

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரன் பெருந்தலைவர் 

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை நீங்கள் 

படித்திடும்போது நான் உண்மையிலேயே 

சொல்கிறேன்  ஒவ்வொருவரது கண்களில் 

இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடப்போவது 

என்னவோ நிச்சயம்தான். இந்த கட்டுரையை  ஒரு 

முன்னோட்டமாக ( TRAILER)  நீங்கள் தவறாமல் 

எடுத்துக் கொள்ளுங்கள் அன்பர்களே.


 பொதுத் தொண்டு ஒன்று மட்டுமே தமது 

வாழ்க்கைப் பணி என்று நினைத்து,பேசி,வாழ்ந்து 

மறைந்திட்ட ஒரு தியாக தீபத்தின் வரலாறு அது.


நாம் அனைவரும் படித்து கர்ம வீரரை வணங்கி 

அவருக்கு நமது இதய அஞ்சலியை காணிக்கை 

செய்திடுவோம் அன்பர்களே !!



நன்றி வணக்கம்.

அன்புடன் மதுரை T.R.பாலு.








No comments:

Post a Comment