இனத்தை பகைப்பது இனமே!!
அடர்ந்த காட்டு பகுதியில் ஒரு மரம் வெட்டுபவன் தனது வயிற்று
பிழைப்பு நடத்தவேண்டி கோடரிகொண்டு மரத்தை பிளந்து சிறுசிறு
துண்டுகள் ஆக்கி அதை தனது தலையில்சுமந்து ஊருக்கு கொண்டு
சென்று அதனை விற்று தன்பிழைப்பை நடத்தி வந்தான். அன்றுதான் வெட்டிய
மரத்துண்டுகளையும் இரும்புகொடாலியையும் தனது தலைக்கு அருகில்
வைத்து தூங்கிடும்போது மரத்துண்டுகள் அந்த கோடலியைப் பார்த்து
கேட்டதாம்.ஏனப்பாகோடாலி,நான் உனக்கு என்ன கெடுதல்செய்தேன்என்னை
இந்தமாதிரி பிளந்து வேதனை செய்கிறாயே இது ஞாயமா என கேட்டதாம்.
அதற்கு கோடாலி பதில் சொன்னதாம்.நான் எங்கே அப்பா உன்னை பிளந்து
வேதனை செய்வது. உனது கூடப்பிறந்தவந்தான் கைபிடியாக மாறி எனக்குள்
புகுந்து உன்னை வெட்டி பிளக்கிறான் என்று பதில் சொன்னதாம். எதற்காக
நான் இந்த கதை சொல்கிறேன் என்றால் தமிழ் ஈழ விடுதலை போர் நடந்த
போது அதன் தலைவர் பெருமைமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை வேறு
யாரும் வீழ்த்திடமுடியாத சூழலில் அவனிடம் தளபதியாக இருந்த துரோகி
கருணா என்ற கேடுகேட்டவனை வைத்துதானே சிங்கள அரசாங்கம் நமது
வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்ல முடிந்தது.அதனால்தான்சொல்கிறேன்
இனத்தை பகைப்பது கொல்வது இனத்தான் ஒருவனால் மட்டுமே முடியும் என
புரிந்ததா நேயர்களே. மீண்டும் சிந்திப்போம்.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment