சாஸ்திரங்கள் (ஜோதிடம்) எல்லாம் பொய்யா?
அன்பிற்கினிய எனது முகபுத்தகத்தில்/எனது பக்கத்தை விரும்பி
படிக்கும்/பார்க்கும் வாசகப்பெருமக்களுக்கு முதற்கண் எனது வணக்கம்.
இன்றையதினம்
பகுத்தறிவு சிந்தனைகள் நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் பரந்துவிரிந்து கிடக்கும்
ஒரு கால கட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அது
மிகையில்லை.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடவுள் இல்லை சாமி இல்லை
சாஸ்திரங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும்
ஒரு மூட பழக்கவழக்கம் என்னும் சிந்தனைமட்டுமே
முற்போக்கு சிந்தனை என தனக்கு தானே கருதி வாழ்ந்து கொண்டிருக்கும்
நபர்களுக்கு மத்தியில்தான் எங்களைப்போல பழம்பெரும் ஆன்மீக கொள்கைகளை உயிர் மூச்சாக
கொண்டு வாழ்ந்துவரும் சிலரும் இருக்கின்றோம்.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று
கூறும் பகுத்தறிவு நபர்களை பார்த்து நான் கேட்பதுதான் இன்றைய கேள்வி?
சாமி பொய்
சாஸ்திரங்கள் பொய் என்று கூறும் அன்பர்களே! பசு மாடு வெளியேற்றும் கழிவுப்பொருளை
சாணி என்று சொல்கிறோம். அதை ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில குவித்து வைத்திருப்போமேயானால் அதில் பலவகை பூச்சிகள்
பூரான் தேள் இதுபோல குடிஇருக்குமிடமாக அது மாறிவிடும். அந்த சாணியையே சிறிதளவு எடுத்து
பிள்ளையார் எனகூறி பிடித்து வைப்போமேயானால் எந்த பூச்சியும் வருவது கிடையாத
அதுபோல சாஸ்திரம் பொய் என்றால் வானத்தில் இன்ன நேரம் கிரகணம் வரும் அது இந்த
நிமிடம் முதல் இந்த நிமிடம்வரை சூரியனையோ அல்லது சந்திரனையோ பிடிக்கும் என்று பற்பல
மாதங்களுக்கு முன்பே கணிப்பது என்பது எப்படி சாத்தியம் ஆகும்
.
எனவேதான் நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள்
அல்ல! அவர்களால் நமக்கு வழங்கப்பட்ட சாஸ்திரங்கள் ஏமாற்றும் வித்தை அல்ல
சாமி
((((கடவுள்) இருக்கின்றார் என்பதை எதிர்கால சந்ததியினர் ஏற்றுகொநண்டுதான் ஆக வேண்டும்
என்பதற்காகவே இந்த பழமொழியினை நமக்கு விட்டு சென்றுள்ளனர்.
அது:-
சாமிதான் பொய் என்றல் சாணத்தில் பார்!சாஸ்திரம்தான் பொய்
என்றால் வனத்தில் பார்!! என்னும் அறிய கருத்து. அதன்படி நாமும் நம் வாழ்வில்
கடைபிடிப்போமாக.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு
No comments:
Post a Comment