Thursday, 4 April 2013

தமிழனாக இருங்கள் !! தமிழிலேயே பேசுங்கள் !! இது இன்று மிக மிக முக்கியம் !!

உண்மையாகச் சொல்லுங்கள் !!

நீங்கள் தமிழனா ?  



அனைவருக்கும் எனது இனிய பணிவான தலை 

தாழ்ந்த வணக்கங்கள். 


நேற்று முதல் எனது அனைத்து பதிவேடுகளிலும்

நீங்கள் பார்த்திருப்பீர்கள் தலைப்பின் பதிப்புகளை. 

நான் ஏன் இந்த அவசரகால முடிவுக்கு வந்தேன் 

என்றால் இன்னைக்கு உலகம் அந்த அளவிற்கு மிக 

மோசமாக தமிழைப் பேச,தமிழைஉச்சரிக்க,தமிழை 

நேசிக்க,சுவாசிக்க,அதன் உண்மைத் தன்மைதனை 

பூஜிக்க! மறந்து விட்டனர் நம் தமிழ் இன மக்கள்.


ஏன். என்ன காரணம். எல்லாம் தலைமுறை 

இடைவெளி மட்டுமே.   நாற்பது,ஐம்பது 

ஆண்டுகளுக்கு முன்னர் என்னைப் போன்றவர்கள் 

எல்லாம்படித்தது தமிழ் பள்ளியில் மட்டுமே. 

நாங்கள்  ஆங்கிலம் என்ற மொழிதனை கற்றுத் 

தெரியஆரம்பித்ததே ஆறாவது படிக்கும்போதுதான். 

அப்போது எங்களுக்கு வயது ஏறத்தாழ 12 

இருக்கும்.ஆனால் இன்னைக்கு என்ன நிலைமை? 

வீட்லே தாய்குலம் நிம்மதியா வேலை 

செய்வதற்கும் சமைப்பதற்கும் தூங்குவதற்கும் 

பெத்த பிள்ளைகள் இடைஞ்சலா 

இருக்கானுவன்னுட்டு 3 வயசிலேயே ஆங்கில 

பள்ளிக்கு நர்சரிஸ்கூல்அனுப்பியதன்விளைவுஇது.

பள்ளி சென்று வந்த பிள்ளைகள் தன்னைபார்த்து 

"மம்மி " என்றும் அப்பாவை "டாடி " என்றும் கூப்பிட 

வில்லை என்று வச்சுக்கிடுங்க. அம்மாவுக்கு வர்ற 

கோவத்தை பார்க்கணுமே. அப்பப்பா . ஆனால் அவுக  

இந்த மம்மி எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சா 

அம்புட்டுதாங்க. செத்த பிணத்துக்கு பேருங்க மம்மி 

என்பது. அது பொம்பளை ஆளுகளுக்கு 

தெரியல்லை. ஆனால் அப்படியே கூப்பிடட்டும் 

என்று ரசித்துக் கொண்டு இருக்குறாக அப்பா 

காரங்க.


என்னய்யா அநியாயமா இருக்கு பேசுற பத்து 

வார்த்தைகளில் ஒன்பது வார்த்தைகள் 

ஆங்கிலமா.ஐயா தாங்க முடியலையா.தாங்க 

முடியல்லை. இப்ப நான் இருக்கிற தலைநகர் 

சென்னையில் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் 

நான் எனது சட்டை ஒன்று தைத்திட கொடுத்து பின் 

அது எப்போது அம்மா கிடைக்கும் என்று அந்த இள 

நங்கையிடம் நான் கேட்டவுடன் அந்த பெண் :-


"சார்,ப்ளீஸ் டெல் மீ யுவர்செல் போன் நம்பர் ப்ளீஸ்"

அப்டீன்னு கேட்டாங்க அந்த பெண்..  

உடனே நான் குறிச்சிகிடுங்கன்னு சொல்லிட்டு 

சொன்னேன்.


பெண்ணே எனது கை பேசியின் எண்கள் 
ஏழு,ஏழு,சுழியம்,எட்டு,ஆறுஆறுஆறு,இரண்டு,எட்டு, 
ஓன்பது. அப்படின்னு சொன்னேன்.7708666289.

 ஐயோ அவ்வளவுதான். அந்த பெண் " சார் நானும் 

இந்த ஷாப்பில  மோர் தேன் எய்ட் இயர்ஸ்க்கும்  

மேலாக ஒர்க் பண்றேன் சார். நோபடி டெல் லைக் யூ
  

அப்படின்னு சொல்லிட்டு அதிர்ந்து போச்சுய்யா 

அந்தபொண்ணு.



எனக்கு ஒரே மனக் கவலை வந்துடுச்சு எங்கடா 

போச்சு நம்ம தமிழ். அந்த பொண்ணு பேசின 16 

வார்த்தைகளில் 12 வார்த்தைகள் ஆங்கிலமா? 


போதும்டாசாமி. இனியும்நாமபேசாமவாயை மூடிக் 

கிட்டு கிடந்தோம்னா என் பேரப்பயல் கேப்பான் 


என்கிட்டே தாத்தா தாத்தா தமிழ்,தமிழ் என்று ஒரு 

மொழி இருந்தச்சாமுல்ல  அது எந்தக் கடையில் 

கிடைக்கும் என்று கேட்டுவிடுவான் ஒருநாள்.கீழே 

குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைக் கோர்வைபோல்

இது சத்தியம்.

" Grandpa Grandpa there is one language termed as 

TAMIL,TAMIL. Please tell me Grandpa in which shop it will be 

available . Please Tell me "

இது என்னடா கொடுமை அப்படின்னு நினைச்சு 

கிட்டே நடந்து வந்துட்டு இருந்தேன். இரண்டு 

கல்லூரி மாணவிகள் எனக்கு முன்னாலே சும்மா 

ஆங்கிலத்தையும் தமிழையும் பொளந்து கட்டிட்டு  

என்கூடநடந்துவந்துகொண்டுஇருந்தனர்.அப்படியே 

அவர்கள்பேசியதைஅப்படியே உங்கள் பார்வைக்குத் 

தருகிறேன்.

 " ஹாய் லில்லி ஹவ் ஆர் யூ டி .

   ஹாய் ப்ரியா ஐ ஆம் ஓகே ஹவ் ஆர் யூ பிளீஸ்.

 நோ பிராப்ளம்டி  பட் யூ சீ நம்ம பரத் இருக்கானே 

ஹீ இஸ் அ நாட்டி பாய்டி என்ன பாக்ர பார்வை 

கம்ப்ளீட்டா ஐ டோன்ட் லைக்டி. வாட் யு தின்க் 

 அபவுட் ஹிம்.  

சில்லி பெல்லோடி அவன். ரியலி பாஸ்ட் டைம் 

வென் ஐ சா ஹிம்  அப்பவே நான் கேம்  டு ய டிசிசன்.

இனி ஐ டோன்ட் ஹாவ் எனி டச் வித் ஹிம்யா 



பார்த்தேன் ஒரு மர நிழல் கிடைச்சுது.அப்படியே 

கண்ணில் நீர் வழிய உக்காந்துட்டேன்.

பாரதி இப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு ஏன் நீ உயிர் 

துறந்தாய் என இதுபோல தமிழை கொன்று 

குவித்திடுவதைக் கேட்டு விடக்கூடாது என்று 

தானே ஐயா பாரதி நீர் மறைந்தீர்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் 

வந்து பாயுது காதினிலே என்று அல்லவா பாடினாய் 

எங்கள் அய்யா இன்று பார்த்தீர்களா இந்த 

தமிழகத்தில் நடைபெறும் தமிழ் கொலைகளை. 

அதனால் தான் என்போன்ற உண்மைத் தமிழ் 

நேசர்கள் கிளம்பி விட்டோம். இனி எங்கள் கோஷம் 

இது ஒன்று தான்.

தமிழனாக இருங்கள்.  தமிழர்களிடம் தமிழில் 

மட்டுமே பேசுங்கள்.சொல்லி பாப்போம் இவர்கள் 

திருந்து வார்களா இல்லையா என்று. சொல்லி 

சொல்லி பாப்போம். 

கேக்கலையா  அப்புறம் திருப்பாச்சிக்கு அவங்களை 

எல்லாரையும் கூட்டிட்டு போக வேண்டியது தான். 

ஏன்னா எனக்கு வேற வழி தெரியல்லை.  நான் இப்ப 

மனசளவில் ரொம்ப காயப்பட்டு கிடக்குறேன். 

என்னைக்கு ஆறப்போகுதோ.தெரியலை. 

திருச்செந்தூர் முருகன் தான் வழி கட்டனும். சரிங்க 

ராத்திரி ரொம்ப நேரம் ஆயிட்டுது. தூங்கப் 

போறேன். வரட்டுமா.

காலையிலே உங்க எல்லோரையும் பாக்கிறேன்.


நன்றி.வணக்கம். 

அன்புடன் மதுரை TR.பாலு.



தமிழனாக இருங்கள் !!         தமிழர்களிடம் தமிழில் 
                                                         மட்டுமே பேசுங்கள் !!

    இது இப்போது அவசியம் மட்டும் அல்ல!!
              அவசரமும் கூட !!




No comments:

Post a Comment