நினைத்து நிற்கும் காதல் எது? இன்று !!
ஜெயிக்கும் காதல் எது ?
உண்மையில் ஜெயிக்கும் காதல் எது ? உண்மைக் காதலா? உறவுக்காதலா? பண்புக் காதல்லா? இல்லை !
பார்த்தவுடன்வரும் பந்தா காதலா ?
அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள் பல. என் இனிய உலகத் தமிழ் அன்பு நெஞ்சங்களே!!
இன்றைய தினம் ஒரு சிறப்புமிகு ஆனால் அதே நேரம் இன்றைய இளைய தலைமுறையினர் உலகத்தினைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் எனது நெடுநாள் ஆசை கனவுகளின் வெளிப்பாடுகளை மேலே குறித்த கேள்விக்கருத்துக்களால் உங்கள் அனைவரது நெஞ்சுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காதல் என்னும் வேள்வி யாகத்திருக்கு நான் இட்டு தெளிக்கும் நெய்யின் சொட்டுக்களாக இந்த கட்டுரை அமையும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை அன்பர்களே!
பொதுவாக காதல்வயப்படுபவர் யார் என்று கேட்டால் இன்றைய இளைய சமூகத்தினரில் அதிலும் பெரும்பான்மையோருக்கு இந்த பாழாய்ப்போன காதல் எப்படி வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் சினிமா ஒன்றில் தான். இவர்கள் அனைவரும் அதில் வரும் காட்சிகளை பார்த்தே மனம் லயித்து நாமும் காதலித்தால் என்ன எனும் மனமதில் ஏற்படும் ஒரு உத்வேகத்தின் வெளிப்பாடு இந்த காதலாக அமைகிறது எனில் அது மிகை அல்ல.
இன்றைய தினம் நாம் எதிர்நோக்கும்,அனுபவிக்கும் இந்த அவசரகால உலகமதில் நிச்சயம் பார்த்தவுடன் வரும் காதல் பரிமளிப்பது என்பது இல்லவே. ஏன் என்றால் அது எல்லாம் இலக்கியங்களிலும் புராண சரித்திரங்களில் வேண்டுமானால் சாத்தியம் உள்ளதாக இருந்திருக்கலாம்.தற்போது உள்ள நடைமுறைக்கு அது சரி வராது. பந்தா காதல் பாரில் நிலைத்து நிற்காது. என்ன சரியா!! நான் சொல்றது !!
அடுத்து நாம் பார்க்க இருப்பது உண்மைக் காதல். அட ஏனுங்க நீங்க ஒன்னு! இங்கே இன்று யாரிடம்,எவரிடம் உண்மை இருக்குது.நாக்கினில் ஒன்னும் வெளியினில் ஒன்னும் மனதிலே ஒன்றும் மருகி உரைப்பதில் ஒன்றும் சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக எல்லா மனிதர்களும் வாழ்ந்து வரும் இந்த சமுதாயதினில் உண்மைக் காதல் எல்லாம் வெறும் உவமைக் காதலாக மட்டுமே இருக்க முடியுமே தவிர அவர்களுக்கு உதவும் காதலாக இருக்க வாய்ப்பே கிடையாது. அதனாலே உண்மைக் காதலும் அவுட் !!
அடுத்து நமது பட்டியலில் இடம் பெறுவது எதுன்னு பார்த்தீங்கன்னா உறவுக் காதல்தானுங்க. இது எப்படின்னு பார்த்தோமுன்னா இதுவும் சரிப்பட்டு வரலைங்க. உறவுகள் என்றாலே ஆயிரம் ஆயிரம் கருத்துவேறுபாட்டு குவியல்களுக்குள் வளரும் செடியாகவே நான் பார்கிறேன் ஒன்னு ஒத்து வந்தால் மற்று ஒன்னு ஒத்து வருவது இல்லை. யாராவது ஒருவர் சொந்த பந்தங்களுக்கு உள்ளாக அந்த காதலை மலர விடுவது கிடையாது.வளர விடுவதும் கிடையாது.எனவே இந்த உறவுக் காதலும் குளோஸ்தான்!!
அடுத்து பார்தீங்கன்னா நம்ம பட்டியலில் வருவது பண்பு காதல் தான். அட ஏனுங்க நீங்க ஒன்னு! பண்பாவது ஒரு மண்ணாவது !! பண்பு உள்ளவன் எவனாவது அல்லது எவளாவது காதல் கீதல் என்ற திசைப்பக்கம் போவாங்களா? நிச்சயம் கிடையவே கிடையாதுங்க. அதுதான் உண்மையும் கூட. பண்புடன் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அது ஆண் என்றாலும் சரி இல்லை பெண் என்றாலும் சரி சத்தியமா நான் சொல்றேங்க இந்த கண்றாவி பிடிச்ச காதலை பண்ணவே மாட்டாங்க இது சத்தியமான வாக்குங்க. அவங்க எல்லாம் அம்மா அப்பா பாத்து தேர்ந்து எடுக்கும் வாழ்கை துணையுடன் மனம் ஒத்து கடைசி வரை இணைந்து வாழ்ந்திடுவார்கள். அதிலே எனக்கு சந்தேகமே கிடையாதுங்க.
என்னயா சொல்றே? அப்படின்னா இந்த உலகத்திலே காதல் அப்படின்னு ஒன்னு இலைன்னு சொல்றியா.சொல்லு ஐயா!
இருக்குங்க. இருக்குங்க காதல் அப்படின்னு ஒன்னு இருக்குங்க.அதுதான் பணக்காரக் காதல். ஆண் பணகாரனாக இருந்தால் அவனைச்சுற்றி பல பெண்களும்,அதே சமயம் ஒரு பெண் பணக்காரியாக இருந்தால் அவளைச்சுற்றி வட்டமிட பலபல ஆண்களும் நடிப்புலக சக்ரவர்த்திகளாக வரும் காதல் ஒன்னு இருக்குங்க. அதிலே காதலிக்கப்படும் பொருள் அவனோ அவளோ இல்லைங்க. அந்த பணம் மட்டுமே. பணம் காலி என்று தெரிந்த அடுத்த நிமிடம் பறவை அது ஆண் பறவையோ இல்லை பெண் பறவையோ நிச்சயமாக வேறு இடம் தேடி ஓடிவிடும்.இதுதான் உண்மைங்க.
கடைசியா நான் நேயர்களுக்கு என்ன சொல்றேன் அப்படின்னா இளம் பருவ வயதில் படிக்க வேண்டிய வயதில் பொறுப்புடன் நல்லா படிச்சு முன்னேறுங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க அப்பா அம்மா உங்களை படிக்க வைக்கிறாங்க அபடிங்கிறதை கொஞ்சமாவது மனசிலே உங்க உள்மனசிலே நினைச்சுப் பார்தீங்கன்னா சத்தியமா சொல்றேங்க காதல் அப்படிங்கிற உணர்ச்சி வரவே வராதுங்க. என்னவோ நீங்க நல்ல படிச்சு பெரிய உத்தியோகத்துக்கு போய் நல்லா பணம் சம்பாதித்து பெத்தவங்க அவங்களை காப்பாத்துவீங்க என்ற அவுகளோட ஆசை மனக் கோட்டையை தயவு செய்து தகர்த்துவிடாதீங்க. இது ஒண்ணுதான் நான் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் கேட்டுக்கொள்ளும் வேண்டுகோள். கேட்டால் கேளுங்க.அப்புறம் உங்க இஷ்டங்க. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி என் தகப்பனார் சொல்வாருங்க.என்னானா
WE CAN TAKE THE HORSE TO TANK BEND !!
BUT WE CAN'T MAKE IT DRINK !!
அதாவது இதுக்கு என்ன அர்த்தமுன்னா குதிரையை தண்ணீர் நிறைந்து உள்ள தொட்டி வரைதான் நாம் இட்டுச் செல்ல முடியும். அதன் வாயினில் தண்ணீரை புகட்ட முடியாது என்பதுதான். பெரியவங்க சொல்றதை கேட்டா கேளுங்க.விட்டா விடுங்க.அது உங்க இஷ்டம்.சொல்லவேண்டியது எங்களோட கடமை. கேட்டு ஏத்துகிட்டு நடப்பதும் நடக்காம இருப்பதும் உங்உரிமைங்க.சரியாஅப்புறம்.போயிட்டு வாரேன். நாளைக்கு இதே நேரம் இதே இடத்திலே பாப்போமா நேயர்களே.நன்றி வணக்கம். அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment