Thursday, 14 March 2013

ஒரு இரகசியத்திர்கான விடை இதோ !!

பரம இரகசியம் !!


அனைவர்க்கும்  வணக்கம்.ஐயா முதலில் என்னை 

பற்றிய சில புள்ளிவிபரங்கள் :-

பெயர் :- மதுரை T.R.பாலு 

வயது 59 

பிறந்தது:மதுரை.

வளர்ந்தது:மதுரை 

வாழ்ந்தது:மதுரை.

தற்போதைய இருக்கும் இடம் சென்னை.(  ஏறத்தாழ பத்து மாதங்களாக)

மிகவும் பிடித்தது: தென்மாவட்ட மின்தடை சூழலில் 

சிக்காமல் இரண்டு மணி நேரம் மட்டும் மின்தடை  

என்ற இனிப்பான நிலையில் வாழ்ந்து வருவது.

பிடிக்காதது:-  இடியாப்ப போக்குவரத்து சிக்கல்.

புரியாதது: மக்கள் யாரும் யாருடனும் இணைந்து

வாழாமல் தனியே இருப்பது.பக்கத்துக்கு வீட்டுகாரர் 

கூட யாரும் நம்முடன் பழகாமல் இருப்பது. மனித 

வாடையே பிடிக்காமல் பணம்,பணம் என்ற ஒரே 

குறிக்கோளுடன் எல்லோரும் இயந்திர கதியில் 

அலைவது.

 அறிந்திட முடியாதது:-   தகவல் தொழில் நுட்பம்,     

பொறிஇயல் ஆகிய துறைகளில் பணியாற்றிடும் 

உள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு 

வந்து பணி செய்திடும் இளம் யுவதிகள்  கண்களை 

மட்டும் வெளியில் தெரியும்படி இடம் விட்டு ஏனை

அனைத்து பகுதியையும் தாவணி துணியினால் 

மறைத்துக்கொண்டு வெளியிலும் சரி வாகனங்கள் 

இவற்றில் செல்லும்போதும் சரி ஏன் இவ்வாறு 

மறைந்து வாழ்கிறார்கள் என்பது,உண்மையிலேயே 

அறிந்திட முடியாதது மட்டும் அல்ல. சிந்தனைக்கு 

உட்பட்டதாகவேநான் நினைக்கிறேன். ஏன் என்றால் 

இவர்கள் இரு வேறு காரணங்களுக்கு மட்டுமே 

இதுபோல வாழ்வதற்கு தங்களை உட்படுத்தி 

இருக்கலாம்.

 ஒன்று;- தங்களின் வனப்பு மிகுந்த மேனி புற ஊதா 

கதிர்களின் தாக்குதலுக்கு உட்படாமல் தோலின்

நிறம் கருப்பாக ஆகா கூடாது என்ற 

முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக்கூட 

இருக்கலாம்.

மற்றொன்று:- தாங்கள் யார்? யாரோடு,எங்கே  

எப்போது போகிறோம் வருகிறோம் என்பதனை 

எவராலும் எப்பொழுதும் கண்டுபிடித்திடாமல் 

இருக்க உதவும் முகக் கவசமாகக் கூட இருக்கலாம்.

இவை இரண்டில் எது உண்மை? 

வாக்கெடுப்பு  தேவை. வாக்கெடுப்பு தேவை.

நடைபெற்றது வாக்கெடுப்பு. 

முடிவுகள் அறிவிப்பது எப்போது ?  

அது இப்போது !!

ஆனால் அது இரகசியமானது !! 

பரம இரகசியமானது !!   சரியா:-சரி !!

முடிவுகள் :-  வெறும் 1௦ சதவிகித வாக்குகள் மட்டும்

 பெற்றது முதலில் சொன்ன மேனியின் எழில்தனை 

காப்பாற்ற துணி போட்டு மறைப்பது !! 

மீதி 9௦ சதவீத வாக்குகள் இரண்டாவதாக குறிப்பிட்ட  

விஷயம் மட்டிலுமே !! யார் யாரோடு எங்கே 

எப்போது சென்றார் என்பது தெரிந்து விடக்கூடாது 

என்பதற்கு மட்டுமே!! வருத்தமாகத்தான் உள்ளது !!

தயவுசெய்து யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் ஐயா.

 பாவம் இளம் யுவதிகள்.

நான் வரட்டுமா. நன்றி.வணக்கம். 

அன்புடன் மதுரை T.R.பாலு.









No comments:

Post a Comment