உங்கள்
சிந்தனைக்கு!
அனைவருக்கும் வணக்கம்.!
இன்று நான் உங்களில்
அனைவரின் சிந்தனைக்கும் தரும் விஷயம் யாதெனின்:-
அனைத்து ஆண் பிள்ளைகளும் திருமணம்
ஆகும் வரை மட்டிலுமே தாய்மேல் பற்றும் பாசமும் வைத்து வாழ்பவர்கள் திருமணத்திற்கு பிறகு மனைவி
மீதும் அவர்கள் வீட்டை சேர்ந்தோர்கள் மீது மட்டும் அதிக
பற்றும் பாசமும் காட்டி வாழ்கிறார்கள் என்பது நீண்ட
நாளைய குற்றச்சாட்டு. இது உண்மையா? ஆராய்ந்து பார்த்திடுவோம்!!இதுஉண்மையாஇல்லையாஎன்று!
இதுவே இன்றைய சிந்தனை மேடையில் நாம்
வைக்கும் கேள்வியும் அதன் விளக்கமும்.
தாய் என்பவளும் பெண்தான்! மனைவி என்பவளும்
பெண்தான்!.இதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
ஆனால் இங்கு பிரச்சினை வருவதற்கு யார்
காரணம். அதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.
அதற்கு முன்பாக நான் பழைய பழமொழி ஒன்றை
இங்கு குறிப்பிட விழைகிறேன்.அது என்னவென்றால்:-
ஆதி உறவு அடியோடு அத்துபோய்விடும் ஆனால்
பொஞ்சாதி உறவு கொழுந்துவிட்டு
எரியும்!!
.. .. .. .. .. .. ..
அதாவது அன்பர்களே! அம்மா, அப்பா, அண்ணன்,அண்ணி,. தம்பி, அக்கா, தங்கை, இதுபோல ஆதி உறவுகள் அடியோடு அத்துப்போய்விடுமாம்.அதாவது ஆண் பிள்ளையை விட்டுவிட்டு விலகிப் போய் விடுமாம். எப்போது ?
மனைவி என்று ஒரு பெண் வரும்போது. ஆனால்
அதே சமயம் பெண்சாதி உறவு என்று சொல்லப்படும் மச்சினன், கொழுந்தியாள், மாமா, அத்தை,
மச்சான்.மச்சான்மனைவி,சகலர், இதுபோன்ற பொஞ்சாதி உறவுகள் மட்டுமே கொழுந்து விட்டு எரியுமாம்.அதாவது நம்ம பையனின் மனம் அவர்களது உறவோடு மட்டுமே இரண்டறக் கலந்து விடும்.
இதற்காக நாம் கவலைப்பட்டு கண்ணீர்விட்டு எந்த பலனும் நமக்கு கிடைக்க போவது இல்லை
இதுதான் உலக நியதி.
தாயால் முடிந்தது தாரத்தாலும் முடியும்.ஆனால் தாரத்தால்
முடிவது தாயால் முடியாது என்பது உலகம் அறிந்த விசயம்! .
நான் எதை குறிப்பிடுகிறேன்
என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதுதான் உலகம் இதற்குள்தான் நாம் வாழ்ந்து
தீர வேண்டும். அதற்கு தகுந்தாற்போலநாம்நம்மைமாற்றிகொண்டுவாழ்ந்திடபழகிக்கொள்ள
வேண்டும். நன்றிவணக்கம்.நேயர்களே.மீண்டும்
அடுத்த விளக்கத்தில் சந்திப்போம்
அன்பர்களே.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு
No comments:
Post a Comment