எவை எல்லாம் நமக்கு மூத்ததாக இருக்க கூடாது –தெரியுமா உங்களுக்கு?
அனைவருக்கும் வணக்கம். பொதுவாக சங்க கால இலக்கியங்கள் நமக்கு
கிடைத்திட்ட அரும்பெரும் பொக்கிஷங்கள்.அவைகளில் குறித்துள்ள கருத்துகள்
எக்காலத்தும் பொருந்துபவையாக அமைந்து உள்ளதுதான் அதன் சிறப்பு.அந்த வகையில் இன்று
நான் உங்கள் சிந்தனைக்கு தரும் விருந்துதான் மேலேசொன்ன கருத்து. முதலில் பாடலை
பாப்போம்.
பிள்ளைதான் வயதில் மூத்தால்
பிதாவின் சொற்புத்தி கேளான்!
கள்வனில் குழலாள் மூத்தால்
கணவனைக் கருதிப்பாராள்!!
தெள்ளற விதை கற்றால்
சீடனும் குருவை தேடான்!!!
உற்றதோர் பிணிகள்
தீர்ந்தால் உலகோர் பண்டிதரை தேடார்!!
இது தாங்க பாடல். இதுலே என்ன கருத்து
பாருங்க.
நாம பெத்த பிள்ளை பெரியவனாக ஆகிவிட்டால் அப்பாவின் பேச்சை கேட்க
மாட்டான்.
அதுபோல மனைவியாகவருபவள்கணவனைவிடஅழகு,அறிவு,அந்தஸ்து,ஆஸ்தி,வயது, முதலியவைகள்
அதிகம் உடையவளாக இருந்தால் புருஷனை மதிக்க மாட்டாள். அய்யா போய்ட்டு வாங்க என
கூறிவிடுவாள்.
அதுபோல் எல்லா வித்தைகளையும் குரு சீடனுக்கு கற்று கொடுத்துவிட்டால்
சீடன் குருவை தேட மாட்டான்.
அதேபோல் நமக்கு வந்த வியாதி மருத்துவர் தந்த மருந்தில்
சரியாக ஆகிவிட்டால் யாரும் மருத்துவரைத் தேடுவது கிடையாது.
இதுதாங்க உலகம்.என்ன புரிந்து
கொண்டீர்களா.எக்காலத்துக்கும் பொருந்தும் நமது அந்த கால பாடல்களின் மகிமையை.நன்றி
வணக்கம். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment