Friday, 15 March 2013

ஒலியை தடுத்து செவியை காப்பீர் !!




இன்று ஒலி மறுப்பு தினம் !!




அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள் 

உரித்தாகுக !!


இன்று ( 16-03-2013 ) சனிக் கிழமை  நாள் முழுவதும்

 ஒலி மறுப்பு தினமாக 

அனுசரித்திட வேணுமாய்  தமிழக காவல் 

தறையின் போக்குவரத்து பிரிவு

( FACE BOOK ) முகப் புத்தகத்தில் அனைத்து வாகன 

ஓட்டிகளையும் 

வேண்டிக் கேட்டுக் கொள்வதாக தினசரி நாளிதழில்

 விளம்பர அறிவிப்பு 

ஒன்றினை நான் கண்டேன்.


நான் 2௦௦8ம் ஆண்டு முதல் 2௦12ம் ஆண்டு வரை 

ஏறத்தாழ ஐந்து 

ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய நாட்டின்

 தலைநகரான கோலாலம்பூர் 

நகரில் வாழ்ந்து,வசித்து வந்தவன்\
.  

அநேகமாக அந்த நாட்டின் அனைத்துபகுதிகளுக்கும் 

 (வடக்கு முதல் தெற்கு-மேற்கு முதல் கிழக்கு  வரை 

)சென்று வந்தவன்.  அந்த நாட்டின் சட்ட திட்டம் 

என்னவெனில் எந்த வாகன ஓட்டியாக இருந்தாலும்

 ஒலிப்பான் உபயோகித்தல் என்பது கூடாது. இதை 

மீறி யாரேனும் ஒலிப்பானை 

பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டு அந்தகுற்றம் 

நிரூபிக்க பட்டால் இந்திய நாணய மதிப்பிற்கு சுமார் 

7,௦௦௦ ரூபாய் வரை முதல்முறை மட்டும்  அபராதம் 

செலுத்துவதுடன் அவர்களது ஓட்டுனர் உரிமம் 

துறை அலுவலர்களால் சிவப்பு முத்திரை இடப்

 பட்டு எச்சரிக்கை செய்யப் படும். 


முதல் முறை என்பதால் மன்னிக்கப் படுவார்கள்

.மீண்டும் அதே தவறை செய்வார்களேயானால் 

நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப் படுவதோடு 

பதினைந்து ஆயிரம் ரூபாய்க்குமேலாக அபராதமும்

 வசூல் செய்யப்படும். 


 இவைகள் எல்லாம் அந்த நாட்டில் மட்டும்தான் 

அமல் செய்திட முடியும். ஏன் என்றால் அங்கே 

உண்மையான, நேர்மையான,இலாவண்யங்களில்

 சிக்கி சீரழிந்திடாத காவல்தறை அலுவலர்கள் 

இருப்ப தனால் சாத்தியப் படுகிறது. நம்ம நாட்டில் 

எப்படி சார்....

முக்கியமான விஷயம் என்ன வென்றால்

 தண்டனைகள் கடுமையாக 

இருந்தால் மட்டுமே குற்றங்களின் எண்ணிக்கை 

குறைவாக இருக்கும் என்ற கொள்கையில் முழு 

பற்றும்பாசமும் வைத்திருக்கும் அதி உன்னத நாடு

அது. 


 சட்டத்தை மீறி எந்த காரியமும் அங்கே செய்திட

 முடியாது. அனைத்து 

அரசியல்வாதிகளின் பற்களும் பிடுங்கப்பட்டு 

நிர்வாக சீர்திருத்தத்தில் 

அவர்களது தலையீடு என்பது அங்கே சுத்தமாக 

கிடையாது, 


அதனால் தான் அந்த நாடு அனைத்து துறைகளிலும்

 முன்னேறிய சக்தி படைத்திட்ட நாடாக திகழ்கிறது.


நம்ம நாடு அந்த மாதிரி எப்ப சார் ஆகும்.  ஊகும்

எனக்குகொஞ்சமும் நம்பிக்கை இல்லை.


அந்தநாடு மாதிரி நாமளும் மாறிப்போய் கெட்டு 

குட்டிச்சுவர்  ஆகவே மாட்டோமையா.!! 

நம்பிநால்நம்புங்கள்.நம்பாவிட்டா;ல் போங்கள் . 


நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.



No comments:

Post a Comment