Sunday, 17 March 2013

பேரறிஞரின் நினைவு அலைகள் !!


பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையில்!!



மறைந்த திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் பேரறிஞர்  அண்ணா அவர்களது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதை நான் நினைத்து பாராத நாள் இல்லை.

ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக அமர்ந்து இருந்த  போது அப்போதைய  எதிர்க்கட்சி (தற்போது உள்ளதுபோல எதிரிக்  கட்சி அல்ல) தலைவராக இருந்த திரு  P.G.கருத்திருமன் அவர்கள் அண்ணாவை பார்த்து மாண்புமிகு முதல்வர் அவர்களே நான் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.உங்களது நாட்கள் எண்ணப்பட்டு விட்டது எனபதை அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.

HONOURABLE CHIEF MINISTER! I AM SORRY!! YOUR DAYS ARE NUMBERED!!

என்று. அதற்கு அண்ணா அவர்கள் சிரித்துகொண்டே புன்னகை தவழ்ந்த முகத்துடன்                பதில் சொன்னார்:-

IS IT SO MY DEAR OPPONENT LEADER 

MR. P.G.KARUTHIRUMAN , PLEASE NOTE

MY STEPS ARE ALWAYS MEASURED!!

இதற்கு என்ன பொருள் என்றால் அப்படியா அன்புமிகு எதிர்கட்சித் தலைவர் திரு.கருத்திருமன் அவர்களே.தயவுசெய்து குறித்துகொள்ளுங்கள்  எனது காலடிகள் எப்போதுமே அளந்துதான் எடுத்து வைக்கப்படுகிறது என மிக அழகாகவும்  அவை நாகரீகத்துடனும் கண்ணியத்துடனும் சொன்னார்.

(ஆனால் அப்படிப்பட்ட அரசியல் நாகரீகங்கள் இன்றைய தினம் எங்கும் காணப்படாததுதான் என்போன்ற அந்தக்கால   நபர்களின் வேதனை, மிகுந்த மனஉளைச்சல்.

நன்றி வணக்கம்..

No comments:

Post a Comment