எதை எல்லாம் காப்பாற்றவேண்டும் ?
அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் சீரிய சிந்தனைகளோடும் சிறந்த நல்அறிவுத்திறனோடும் எல்லோரும் வாழவேண்டும் நாமும் வாழவேண்டும் என்னும் ஒப்பற்ற கருத்துச் செறிவு கொண்டு தமது உழைப்பின் பயனை அந்தந்த வாழும் நாட்டிற்கே முழு- வதுமாய் அற்பணித்துக்கொண்டு வாழ்ந்து வரும் தியாக தீபங்களே! உங்கள் அனைவரின் பொற்கமல பாதங்களைப் பணித்து வணங்கி வாழ்த்தி என் சிந்தனை கட்டுரையை உங்கள் அனைவரின் அறிவுத்திறனுக்கு சமர்பிக்க ஆசைப்- படுகிறேன்.
பொதுவாக இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் தத்தமது வாழ்வில் மறந்திடாமல்கடைப்பிடித்து வாழ்ந்திட நம் முன்னோர்கள் சிற்சில அறிவுரைகளை நமக்குத் தந்து அருளிச் சென்றுள்ளனர். அவைகளை எல்லாம் நாம் மறந்து வாழ்வதன் விளைவு என்னவென்றால் கிடைப்பது நமக்கு கெட்டபெயர் மட்டுமே. சரி அப்படி எவரிடமும் கூறக்கூடாத நமக்குள் மட்டுமே வைத்து காப்பாற்ற வேண்டிய விஷயங்கள் எவை எவை என்று உங்களுக்கு சொல்கிறேன். கீழே நான் சொல்லப்போகும் நம்மைத்தவிர (கணவன்என்றால் மனைவியிடமும் மனைவி என்றால் கணவனிடமும் கூட சொல்லகூடாது )வேறு எவரிடமும் சொல்லாமல் நாம் மறைத்து வாழ்ந்துவருவோமேயானால் சமூகத்தில் நமது கவுரவம் புகழ் அந்தஸ்த்து இவை என்றென்றும் நிலைத்து நிற்கும். அவைகள் எது என்று நாம் பார்ப்போமா!!
1) நமது வயது. 2) நமது வருமானம். 3) நமது சொத்தின் மதிப்பு. 4) நமது சொத்தின்மேல் உள்ள கடன். 5) நமக்கு உள்ள வியாதி. 6) அந்த வியாதியை தீர்க்கும் மருந்து. 7) நமக்கு உள்ள பாலியல் தொடர்புகளின் விபரங்கள்.
மேலேசொன்ன ஏழு விஷயங்களையும் எவர் ஒருவர் தனக்குள் வைத்து காப்பாற்றி வாழ்கிறாரோ அவர் மட்டுமே என்றென்றும் சமூகத்தில் சிறந்தவர் என்றும் நல்லவர் என்றும் போற்றி பாராட்டப்படுவார்கள் என்பது நமக்கு நமது மூதாதையர்கள் அருளிச் சென்ற அரும்பெரும் தத்துவ முத்து. நாமும் நமது வாழ்வில் இதனை கடைபிடித்து வாழ்ந்திடுவோம்.நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment