நல்ல
நேரம் இருந்தா எப்படி இருக்கும்?
கெட்ட
நேரம் இருந்தா எப்படி இருக்கும்?
பாருங்க.நம்ம மனித வாழ்கையில் யாருக்கும் எதுவும் நிரந்தரம் என்பது
கிடையாது.ஆனால் இதைநம்மில்ரொம்பபேர்ஏன்புரிந்துகொள்ளதெரியாமல் இருப்பதுதான்
உண்மை.
ஒருவருடையஜாதகத்தில்அவருக்கு நடக்கும் கிரகநிலை,தசா,மற்றும்புத்திகள் சிறப்பாக
இருக்குமேயானால் அவருக்கு நடப்பது எல்லாமே நல்ல நேரமாகவே இருக்கும்.ஆனால் அதே
நேரம் கிரகநில தசா,புத்திகள் மோசமா இருந்தா நடப்பது எல்லாமே கெட்டவையா
இருக்கும்.இதுதாங்க உண்மை.இதுக்கு உள்ள பாட்டை பாருங்க:-
ஆங்காலம் மெய் வருந்த
வேண்டாம்!
போங்காலம் காட்டானை தின்ற கனியது போலாம்தேட்டாளன் தேடிய
திரவியம்!!
.
இந்த பாட்டுக்கு என்ன பொருள் என்றால் நல்லகாலம் ஒரு மனிதனுக்கு
நடக்கும்போது அவன் (மெய்)தனது உடல்
வருந்தி உழைக்க வேண்டாம் வளம் செல்வம் சொத்து சுகங்கள் தானாகவே தேடி வரும்.அனால்
அதேநேரம் கெட் டவையாக இருப்பின் யானை தின்ற விளாம்பழம் போலஇருக்குமாம். அதாவது யானையின் கழிவுப்பொருளில் வந்து விழும் இந்த விளாம்பழம் பார்ப்பதற்கு உடைக்காதது
போலத்தோன்றும் ஆனால் உடைத்துபார்த்தா உள்ளே ஒன்றுமிருக்காது.
இதுதாங்க மனிதன் நிலை.அது புரியாமல் நம்மில் மிகப் பெரும்பான்மையோர் தமது
முயற்சியால் தான் செல்வம் சேருது! சொத்து
சேருது! என பித்தர்கள் போல எண்ணுவதை பார்த்தால் ஜோதிடர் என்ற முறையில் எனக்கு சிரிப்புதான் வருது
.நடப்பது எல்லாம் அவன் (இறைவன்)செயல் நம் வாழ்க்கை போன ஜென்ம பலன்களின் அடிப்படையே! இதுவே உண்மை! புரிபவர்கள் புரிந்துகொண்டால் சரி.மற்றவர்களை பற்றி கவலை இல்லை. வணக்கம்..நன்றி.மதுரை T.R.பாலு
No comments:
Post a Comment