Wednesday, 27 March 2013

இன்பம் எங்கே இருக்கிறது? தெரியுமா உங்களுக்கு !!

இன்பம் எங்கே ! இன்பம் எங்கே !! என்று தேடு !!



உலகமெங்கும் வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ் 

நெஞ்சங்களே!!


உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி 

கலந்த வாழ்த்துக்கள். முதலில் வணக்கம். அதுதான் 

தமிழர் பண்பாடு !


இன்றைய தினம் நான் உங்கள் அனைவரின் சீரிய 

சிந்தனைக்கு விருந்தாக படைத்திருக்கும் தலைப்பு 

"இன்பம் எங்கே"! என்பதாகும்.


எங்கே சார்  சொல்லுங்கள் பார்ப்போம்.  யார் இதை

சரியாக  சொல்கிறார்கள் என்று.  மன்னிக்கவும்.

அநேகமாக யாராலும் இதற்கு சரியான விடை தர 

இயலாது என்றே நான் கருதுகிறேன்.


ஏன் என்றால் இன்றைய தினம் நாம் வாழ்ந்து 

கொண்டு இருக்கும் உலகமும்  வாழ்க்கை 

நடைமுறைகளும் நம்மை அவ்வளவு விரைவாக 

பதில் சொல்லிட இயலாத ஒரு சூழலுக்கு நம்மை 

தள்ளிவிட்டது என்பது மட்டுமே உண்மை.  


ஆம் அன்பர்களே நீங்களே உங்கள் ஒவ்வொருவரது 

மனச்சாட்சியையும் தொட்டு சொல்லுங்கள். நான் 

சொல்வது சரியா அல்லது தவறா என்று.



எனக்கு மிக நன்றாகத் தெரியும் உங்களது பதில் 

சரி என்று தான் வரும்.  ஏன் என்றால் இங்கே 

நிலைமை அப்படி சார்.



முதலில் நீங்கள் நீங்களாக வாழ்கிறீர்களா?

இல்லையே. காலையில் எழுந்து அவசரம் 

அவசரமாக குளித்து,பின்  உணவு பறக்க பறக்க 

உண்டு வாகனத்தில் ஏறி அலுவலகம் சென்று 

அங்கும் ஒரு இயந்திரத்தைப் போலப் பணியாற்றி 

பிறகு வீட்டில் இருந்து காலையில் தயாரித்து தந்த 

அந்த ஆறிப்போன உணவை கடனே என்று 

சாப்பிட்டு அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் 

பெண்களிடம் தேவை இல்லாமல் அசடு வழிய 

சிரித்து அரட்டை அடித்து இதற்குள் மணி ஆறு 

ஆகிவிடும்.  மீண்டும் வாகனத்தில் ஏறி 

போக்குவரத்து இடியாப்ப சிக்கலில் மாட்டி வீடு 

வந்து சேருவதற்குள் மணி எட்டு ஆகிவிடும். பிறகு 

தொல்லைகாட்சி பெட்டியில் கழுத்தை நெறிக்கும் 

நம்ப முடியாத நெடுந்தொடர்களை பார்த்து முடிப்ப-

தற்குள் மணி கிட்டத்தட்ட பத்து ஆகிவிடும். 

மனைவியிடம் மனம் விட்டு பேச உங்களுக்கு 

நேரம் இருக்கிறதா இல்லை குழந்தைகளிடமாவது 

கொஞ்சி மகிழ்ந்திட உங்களால்தான் முடிகிறதா?

சொல்லுங்க சார் பதில். என்ன சார் பேச்சையே 

காணோம்.  உண்மையிலேயே நான் கேட்கிறேன் 

இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? இல்லை சார்.

இல்லவே இல்லை. அப்புறம் எப்படித்தான் சார் 

வாழ்கிறது என்று என்னை கேட்கிறீர்களா?


சொல்றேன் பதில் சொல்றேன் உங்களுக்கு.

ஆனா அதுக்கு முன்னாடி இந்த அந்தக் கால 

திரைப்பட பாடலை கொஞ்சம் படிங்க சார்.



இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு !!
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!

இன்றிருப்போர் நாளை இங்கே 
இருப்பதென்ன உண்மை!இதை எண்ணிடாமல் 
சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை !!
இருக்கும்வரைஇன்பங்களைஅனுபவிக்கும் தன்மை 
இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது 
இனிமை !!                                                     (இன்பம் எங்கே)

கனிரசமாம் மது அருந்திக் களிப்பதல்ல இன்பம்!
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல 
இன்பம் !!
இணைஇல்லா மனையாளின் வாய் மொழியே 
இன்பம்!!
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத 
இன்பம்!!                                                     (இன்பம் எங்கே)

மாடி மனை கோடிப்பணம் வாகனம் வீண் ஜம்பம்!
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!!
மழலைமொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளைச்
செல்வம் !!உன் மார்மீது உதைப்பதுதான் அளவில்லாத இன்பம்!!                      (இன்பம் எங்கே)


அந்தக் காலத்தில் வெளிவந்த "மனமுள்ள 

மறுதாரம் " என்ற திரைப்படத்தில் முனைவர் 

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது வெண்கலக் 

குரலில் பாடப்பட்ட இனிமையும் உண்மையும் 

கலந்த தேனாக இனித்திடும் பாடல் அய்யா அது.


இப்ப அநேகமா நீங்க ஒரு தெளிவான முடிவுக்கு 

வந்திருப்பீங்கன்னு நினைக்கிறன். ஏன் சார் 

எப்பவும் பணம் பணம் என்று  அலைந்து நிம்மதியை 

இழந்து தவிக்கிறீர்கள். பிறக்கும் போதே தலையில்

எழுதிட்டான். இவனுக்கு இவ்வளுவுதான் என்று.

அப்புறம் நீங்க குன்னக்குடிக்கு அன்னக்காவடி 

எடுத்தாலும் ஒன்னும் நடக்காது சார்.


அதனாலே கவலையை விட்டுவிட்டு இருக்கிறதை 

போதும் என்று நினைத்து வாழப்  பழகுங்க சார்.

அப்ப தான் வாழ்க்கை இனிக்கும்.

அந்தக் காலத்திலே தொழிலாளி என்ற படத்தில்

ஒரு பாட்டு வரும் சார். அது எந்த பாட்டுன்னா 


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி 
உருக்குப் போன்ற தன் கைகளை நம்பி ஓங்கி 
நிற்பவன் தொழிலாளி ...........என்று வரும் 


அவன் வீடு கட்டிட்டான் இவன் வீடு கட்டிட்டான் 

அப்படி எல்லாம் நினைக்காதீங்க சார். எவனும் 

போறப்போ எதையும் தலையில் கொண்டு போகப் 

போறது கிடையாது. அப்ப பிள்ளைகளுக்கு நாம 

சொத்து பத்து சேத்துவைக்க வேண்டாமா? நீங்க 

கேட்கிறது எனக்கு புரியுது. ஏன் சார் அவங்களை 

நீங்களேசோம்பேறியாஆக்குறீங்கஅவங்க அவங்க-

ளுக்கு கை கால் இருக்கு சம்பாதிச்சு கட்டிட்டுப்

போராங்க சார். விடுங்க. வர்ற வருமானத்தில 

பொண்டாட்டியை நிம்மதியாய் வைச்சுகிட்டு 

கட்டியா சாப்பிட முடியலையா கரைச்சு சாப்பிட்டு 

போங்க சார். என்ன நான் சொல்றது.

இந்த உலகத்திலே உண்மையான பணக்காரன் 

யார் தெரியுமா சார். நீங்க சொல்வீங்க பில்கேட்ஸ் 

என்று அதுதான் சார் இல்ல.

எதை சாப்பிட்டாலும்  செரிமானம் ஆகும் வயிற்றை 

உடையவனும் படுத்தவுடன் மாத்திரை உதவி ஏதும் 

இல்லாமல் தூங்குபவனும் எந்த நோய்நொடியும் 

இல்லாதவனும்தான் சார் உண்மையான 

பணக்காரன்.  பெரிய பணக்காரன்னு சொல்றவன்

கிட்ட இருக்கிற பணம் அவனுக்கு இருக்கிற 

வியாதியாலே அதை இதை சாப்பிடாதே என்று 

சொன்னால் அது பணம் இல்லை சார் அது வெறும் 

அச்சடிக்கப்பட்ட காகிதம் தான் சார்.என்ன நான் 

சொல்றது சரியா.

நான் சொன்ன எல்லா கருத்துக்களையும் நல்லா

ராத்திரி பூரா யோசனைபண்ணிப்பாருங்கசார்புரியும்

அதுதான் சரின்னு காலையில் எனக்கு நீங்க LIKE

கொடுப்பீங்க. சரி அப்புறம் நான் போயிட்டு வரேன்.

இனிய இரவு வணக்கங்களுடன் நன்றி 

பாராட்டி விடைபெறுவது உங்கள் அன்பு 

சிந்தனையாளன் மதுரை T.R.பாலு.



No comments:

Post a Comment