குழந்தைகளை நன்கு வளர்ப்பதில் பெரிதும் அக்கறை
உள்ளவர்
தாயா
அல்லது தந்தையா?
அனைவருக்கும் வணக்கம் இரு தினங்களுக்குமுன் பொதிகை தொலைக் காட்சியில்
அன்புமிகு எனது ஆருயிர் அண்ணன் திரு.நெல்லை கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு நடுவராக
கடமை ஆற்றிய பட்டிமண்டபம் பார்த்தேன். அதில் தந்தையே என்ற அணியில் பேசியவர் சொன்ன கதை என்னை மிக
கவர்ந்தது. என்னவென்றால்:-
ஆசிரியர்(பையனை பார்த்து): ஒரு ஆட்டுக்கு ஒருவயசில் நாலு கால்
அப்படின்னா,நாலு வயசிலே அதுக்கு எதனை கால்?
பையன்:-அய்யா.ஆட்டுக்கு பதினாறு கால்.
ஆசிரியர்(தந்தையை பார்த்து):-என்னவோய் பிள்ளை வளர்த்திருக்கீர்?இப்படி
தப்பு தப்பா சொல்லின்டு இருக்கான்?
தந்தை:-அவன் சரியாத்தானேவே
சொல்லுதான். பதினாறு கால் நாலு தானேவே.
அதாவது 16 x 1/4= 4தானே. என்ன சரிதானே வாத்தியாரே?(இது எப்படி
இருக்கு)
எந்த சூழ்நிலையிலும் மகனை விட்டிடுகொடுக்காத தந்தையை பற்றி அந்த
பட்டிமண்டபத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து என்னை கவர்ந்தது.நன்றி வணக்கம் மதுரை
T.R.பாலு.மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment