ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்!!
உலக மகளிர் தினம் -- சிறப்பு ஆய்வுக் கட்டுரை !!
இன்று 08.03.2013 உலக மகளிர் தினத்தினை ஒட்டி ஒரு சிறப்பு கட்டுரை ஒன்றினை மகளிர் மற்றும் ஆடவர்கள் கவனத்திற்காக இங்கே படைப்பதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிடும் விஷயம் பொதுவானவை என்பது மட்டும் அல்ல தனிப்பட்ட எவரையும் குறிப்பிடுவனவும் அல்ல. பொதுவாக இன்றைய தினம் ஆடவர்களில் எத்தனை சதவிகிதம் பேர்கள் அவரவர்கள் மனைவியர்களுக்கு உண்மையாகவும் விசுவாசிகளாகவும் நம்மில் வாழ்ந்து கொன்டு இருக்கிறோம் என்பதனை அருள்கூர்ந்து இந்த உலகமகளிர் தினத்தன்று நாம் அனைவரும் சிந்தித்துப் பார்த்திட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக ஆடவர்கள் இனத்திற்கு என்று தனியாக ஒரு சட்டத்தினை அவர்களுக்கு அவர்களாகவே வகுத்துக் கொண்டு செயல்படுவது என்பது நமது பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டே தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வரும் ஒரு விஷயம் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான் என்பதனை இங்கே நான் மெத்த வேதனையுடன் குறிப்பிட்டே ஆகவேண்டும். அது என்னவென்றால் நாம் எல்லாம் ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.யாருடனும் எவருடனும் வாழலாம். அதிலே எந்த தவறும் இல்லை என்பதே அந்த ஆதிக்கசக்தி படைத்தோரின் கொள்கை முழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இது இன்று நேற்று அல்ல சிலப்பதிகாரம் காலம் தொட்டு இந்த நிலைதான்.
1964 ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி அவர்களது கை வண்ணத்தில் உருவான " பூம்புகார் " திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.அதில்கோவலனாகநடித்துசிறப்பித்ததிரு எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் கண்ணகியை கைவிட்டு மாதவியிடம் அடைக்கலம் ஆகி பின் கோவலனும் மாதவியும் பூம்புகார் கடல்கரையிலிருந்து ஒரு காதல் பாடல் பாடுவது போன்ற ஒரு காட்சி. கவிஞர் திரு மாயவநாதன் அவர்களது சீரிய கற்பனையில் பாடல் உருவாகி திரு சுதர்சனம் அவர்களின் மெல்லிசையில் வெளிவந்த பாடல் தான்
"காவிரிப் பெண்ணே வாழ்க.உந்தன்காதலன் சோழ வேந்தனும் வாழ்க" எனும் பாடலில் இவர்களிருவரும் பிரிந்திட காரணமாக இருப்பது இந்த வரிகள்தான்.
" உன்னருங்கணவன் கங்கையை அணைத்தே -கன்னிக்குமரியையும் தன்னுடன் இணைத்தான். என்று மாதவி பாட
ஆயினும் உன்நெஞ்சில் பகையேதும் இல்லை.அதுவே மங்கையரின் கற்புகோர் எல்லை.என்று கோவலன் பாட
ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்.அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்."
இப்படி மாதவி பாடியதும் கோவலன்கோபித்துக்கொண்டு அவளை விட்டு பிரிந்துவிடுவதாக அந்த திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது நான் எதற்காக இந்த காட்சியை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்இன்றும் நம்மிடையே இது போன்ற ஏராளமான கோவலன்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் தத்தமது நிலைகளை இந்த உலக மகளிர் தினத்திலாவது தம்மை திருத்திக்கொண்டு மாற்றிக்கொண்டு மனைவியை உளமார மனமார மெய் அன்புடன் நேசிக்கதொடங்குங்கள் என வேண்டி விரும்பி கேட்டு கற்பு என்பது ஏதோ மகளிருக்கு மட்டும் உள்ள அணிகலன் என்று நினைத்திடாமல் அது இரு பாலருக்கும் பொதுவானதுஎன்றுஎண்ணிஅதன்படிவாழ்க்கைவாழ்ந்திடல்வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.நன்றி.வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு .
No comments:
Post a Comment