Tuesday, 12 March 2013

விளம்பரத்தினில் புதுமை பாரீர் !!


 சிரிக்க! சிந்திக்க!! 


பொதுவாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடைய வேண்டும் என நாம் விரும்பும்போது அதற்கு என்று ஏற்பட்ட விளம்பர நிறுவனங்களை அணுகுவது என்பது இயல்பான ஒன்று.  

அதற்கேற்ப ஒரு மருத்துவமனை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை/நோயாளிகளஅதிகப்படுத்த வேண்டும் என்று எண்ணி ஒரு விளம்பர நிறுவனத்தை அணுகியது. பொருள் பொதிந்த வாசகங்கள் அடங்கிய 
விளம்பரம் ஒன்றினை தந்திட வேண்டும் என கேட்டு ! 

இரண்டு வரிகளில் விளம்பரம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நிறுவனமும் கீழ்க்கண்ட விளம்பரத்தை வழங்கியது:- 
 
       “கூட்டிக்கிட்டு வாங்க!  தூக்கிகிட்டு போங்க!!

        “பணம் எங்களுக்கு! பிணம் உங்களுக்கு !! ” 

இது எப்படி இருக்கு? (பதினாறு வயதினிலே கமல் டயலாக்) 

நன்றி! வணக்கம்!! அன்பன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment