பணம்
பந்தியிலே! -- -- குணம் குப்பையிலே !!
எல்லோருக்கும் காலை வணக்கம்.இந்த கட்டுரையை
நான் எழுதுரச்சே மணி என்ன தெரியுமோ சரியா ராத்திரி 3 மணி 3௦ நிமிடம் 2௦
நொடிகள்.
என்ன அண்ணா இவ்வளவு கணக்கா இருக்கேள் அப்டின்னு நீங்க எல்லாம்
நினைச்சுண்டு இருக்கறது நேக்கு புரியறது. இந்த மாதிரி கணக்கா இருந்தால் தான் ஒய் பணம் பண்ண முடியும். என்ன நான் சொல்றது
புரியறதா நோக்கு.
அதாவது அந்த காலத்திலேயும் சரி இந்த காலத்திலேயும் சரி இனி வர
எந்த காலமானாலும் சரி பணம் கையில் வச்சுண்ட்ருக்க மனுஷாளுக்கு இந்த லோகம் தர்ற
மரியாதையே தனிதான் ஒய்.
அவ்வளவு மதிப்பு அந்த பணத்துக்கு உண்டுன்னேன். இந்த பணம்
இல்லாமே மண்டையில் நல்ல அறிவு படிப்பு திறமை பேச்சுவல்லமை இது எல்லாம் எவ்வளவு
இருந்தாலும் அவாளுக்கு எல்லாம் பணம் படைச்சவாளுக்கு கிடைக்கற அளவு உபசாரமும்
மரியாதையும் அறிவு மட்டுமே உள்ள இவாளுக்கு
கிடைகிறது இல்லைன்னேன்
அந்த காலத்து பாட்டுலே என்ன சொல்லிருக்கா
இதோ சித்த பாருங்கோ
:-
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்
வன் சொல்லினது வாய்திறவா
என் சொல்லினும் கைத்துடையான் கால் கீழ் ஒதுங்கும்
கடல்ஞானம் பித்துடைய அல்ல பிற
.. .. .. .. .. .. ..
என்ன ஒய் மணி ஐயர் நாம்பாட்டுக்கு
சொல்லின்றுக்கேன் நீர் என்னடானா ஊம் கொட்டிண்டு இருக்கேள். பாட்டுக்கு அர்த்தம்
புரியரதாங்கானும்
அதாவது நன்னா பேசறவன் பாடறவன் பழகுரவன் அதிர்ந்து நடை தெரியாதவன்
இந்த தகுதி எல்லாம் இருந்தாலும் அவனண்ட பணம் மட்டும் இல்லாட்டா அவனை இந்த லோகம் அவன் கிடக்கறான்
வெறும்பய அப்டிதான் சொல்வா
ஆனா அதே நேரம் பணம் உள்ளவாள் அவாளுக்கு ஒரு மண்ணும்
தெரியாட்டாலும் பேச வராது சமூகத்தல நன்னா பழக வறாது மண்ணாட்டம் இருப்பா .அப்டி
இருந்தாலும் அவாளண்ட பேசறச்சே அண்ணா உங்களைபோல யார் இருக்கா உங்க பேசும்திறன் பழகும்விதம்
அடடா அடடா நான் என்ன சொல்றது.மிராசுதார்
மிராசுதார்தான் நான் நான்தான் அப்டின்னு பேசிட்டு அவாளான்ட சில்லறையை வாங்கிட்டு போயடுவாளாம்
இந்தலோகத்திலே
உள்ளவா எல்லாம். அதலேதான் சொல்லிருக்கா பெரியவா எல்லாம் பணம் பந்தியிலே குணம்
குப்பையிலே அப்டின்னு சரி நேக்கு நாழி ஆறது அப்ரம்பார்க்ரேன் மணி ஐயர் வரட்டா.
நன்றி வணக்கம்.மதுரை T.R/பாலு.
No comments:
Post a Comment