கலைவாணரின் கருத்துக்கள்!!
அனைவருக்கும் வணக்கம்.உலகெங்கும் சிறந்த சிந்தனையுடனும் சீர்மிகு
கருத்துக்களுடன் வாழ்ந்து வரும் என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே! உங்கள்
அனைவருக்கும் முதற்கண் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.இன்றைய
தினம்எனது "எண்ணத்தில்தோன்றியவை" வலைதளத்தில்நான் காலஞ்சென்ற
கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய சில நினைவுகளை
பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பகுத்தறிவுப்பகலவன் தந்தை ஈ.வெ.ரா.பெரியார் அவர்களது சுய மரியாதை
சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டு அந்த பேரியக்கத்தில் தன்னை இணைத்து
கொண்டவர் கலைவாணர் அவர்கள். அவர் நடித்து வெளிவந்த அத்தனை
திரைப்படங்களிலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திற்கும் அவரே
வசனம் ,பாடல்கள் எழுதும் வல்லாமை படைத்தவர் அவரது . யதார்த்தமான
நடிப்புத்திறன் இயல்பான அணுகுமுறை இவைகள் அவருக்கு மட்டுமே கை
வந்த கலை என்று சொன்னால் அது மிகையானது அல்ல.அப்படி ஒரு நடிப்பு
திறன்,தான் நினைத்ததை மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றல் இவைகள்
அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
அவரது மனைவி திருமதி மதுரம் அவர்களும் கலைவாணருக்கு இணையாக
நடிப்பதில் வல்லமை படைத்தவர். அவர்கள் இருவரும் இணைந்து அந்தக்
காலத்தில் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே காலத்தால் அழியாக்
காவியங்கள்.சொந்தக்குரலில் பாடிடும்வல்லமையும் படைத்தஅவர் பல்வேறு
நகைச்சுவைப் பாடல்கள் பாடி தமிழ் ரசிகர்களை வயிறு நோக சிரிக்க
வைத்தது மட்டும் அல்ல சிந்திக்கவும் வைத்தவர் அவர் ஒருவரே. அவர் பாடிய
பல்வேறு பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது:-
சம்பளத் தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்.....
கண்ணே!கண்ணே! உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா!
இதைக் கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா?.................
இதுபோன்ற எண்ணற்ற பாடல்களைத் தந்தவர் கலைவாணர் அவர்கள். அவர்
எப்போதும் கடவுள் மறுப்பு கொள்கையில் மாறாத பற்றுக் கொண்டவர்.அப்படி
இருந்த போதிலும் கூட தன்இறுதிக் காலபாடல்களில்அதனை மாற்றிகொண்ட
நிலைதனை விளக்கும் பாடல் இதுவே
கோழி இல்லாம முட்டையிலே இருந்து குஞ்சுகளை பொரிக்க வச்சான்
பாரு குஞ்சுகளை பொரிக்க வச்சான்
ங்கொப்பன் பாட்டன் காலத்தில் யார் இந்த கோளாறை கண்டுபிடிச்சான்
என்று கலைவாணர் பாடியதற்கு
மதுரம் பாடும் பதில் பாட்டு
அந்தக் கொளாருக்காரனை கோழி இல்லாம முட்டை ஒன்னு பண்ண
சொல்லுங்கபாப்போம்முட்டைஒன்னுபண்ண சொல்லுங்க
நம்ம அறிவுக்கு பொருத்தம் ஆறு கோவில் அரசமரந்தானுங்க !!
என்று பாடியதன் மூலமாக தம் கடவுள் மறுப்பு கொள்கைதனை கைவிட்டு
கடவுள் ஏற்புஇயக்கத்தில் இணைந்துவிட்டதனை மிக நாசூக்காக கலைவாணர்
வெளிப்படுத்திய விதம் இன்றளவும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
தமிழ் திரை உலகம் உள்ளவரை அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்லி இந்த "எண்ணத்தில்
தோன்றியவை" பக்கத்தை நான் நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.
அன்புடன் மதுரை T.R.பாலு.
:
No comments:
Post a Comment