Friday, 1 March 2013

சொல்லுவது எல்லாம் சரியா?


சரியாகச் சொல்ளுங்கள் !!


               ஒரு நாள் ஒரு படித்தவனும் ஒரு முட்டாளும் சந்தித்து கொள்ளும் 

போது படித்தவன் அந்த முட்டாளிடம் கேட்டான்.  ஏனப்பா முத்தையா நீ 

காலையில் வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்? சாப்பிட 

முடியும் உன்னால்? என ஒரு அறிவு பூர்வமான கேள்வியை கேட்டான்.

பொதுவாக நீங்களானாலும் சரி நான் என்றாலும் சரி பத்து பேர்களில் 

ஒன்பது பேர் சொல்லும் பதில் என்னவாக இருக்கும். நாலு இட்லி,ஐந்து 

இட்லி இப்படித்தான் சொல்வோம்.  அது போலத்தான் முத்தையனும் 

சொன்னான். நான் நாலு இட்லி சாப்பிடுவேன் என்று. அதற்கு அந்த 

படித்தவன் கேட்டான் ஏனப்பா முட்டாள்தனமாக சொல்லுகிறாய்.

சரியாக சொல்லவேண்டும் பதிலை. எப்போது உன்வாயில் ஒரு துண்டு 

இட்லியை உனது வெறும் வயிற்ருக்குள் அனுப்புகிறாயோ அத்தோடு 

முடிந்துவிட்டது அந்த வெறும் வயிறு. அதன்பின்னர் அதுவெறும் வயிறு 

அல்ல.ஆகவே இனிமேல் யார் கேட்டாலும் வெறும் வயிற்றில் என்னால் 

நான்கு  இட்லி சாப்பிட முடியும் என்று சொல்லாதே என சொன்னான் 

அந்த படித்தவன். முத்தையவும் இதனை மனதில் வைத்து கொண்டு 

வரும்போது இவனது நண்பன் ராமையன் அங்கே வந்தான்.அவனிடம் 

முத்தையா கேட்டான்.ஏனப்பா நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி  

சாப்பிட முடியும் என கேட்டான். ராமையன் அதற்கு நான் ஒரு ஐந்து 

இட்லி சாப்பிடுவேன் என்று சொன்னான். முத்தையா முட்டாள்தானே 

ஆகா இவனும் நான்கு இட்லி என்று சொல்வான் நாமும் இவனை மடக்கி 

விடலாம் என்றால் ஐந்து இட்லி என்று சொல்லிவிட்டானே என்று இவன் 

அங்கலாய்த்தானம்! எப்படிப்பட்ட முட்டாள்கள் இந்த உலகினில் உள்ளனர் 

என்பதை நாமும் சிந்தித்து  பார்த்து செயல்படுவோம். யார் கேள்வி கேட்டா-

-லும் நாம் அதற்கு விடையை சரியாக சிந்தித்து சொல்வோமாக!! 





  

No comments:

Post a Comment