“திருமண வாழ்க்கை!!” –
சம்பிரதாயமா? அல்லது
சாஸ்வதமா?
அனைவருக்கும் வணக்கம். என்ன இது
காலங்காத்தாலே இவருக்கு என்ன ஆச்சு என நீங்கள் நினைப்பது எனக்கு புரியாமல் இல்லை.
இருந்தாலும் ஒரு ஐந்து நிமிடங்கள் எனக்காக ஒதுக்கிட வேண்டுகிறேன்.நன்றி.
நம்மில் அனைவரும் பருவ வயதினை அடைந்ததும்
செய்திடும் அல்லது செய்திட நினைப்பதும் எது என்றால் இந்த திருமணம் தான்.
ஜோதிட ரீதியாக பார்த்தால் அவரவர் பிறந்த ஜாதகத்தில் ஏழாம் இடம் எனப்படும் களத்திர ஸ்தானம் அதன்
அடிப்படையில் சுப கிரகங்கள் பார்வை பெறுகிறதா செவ்வாய் தோஷம் உள்ளதா இதுபோல பல
ஆய்வுகள் பல ஆராய்ச்சிகள் இன்னும் பல
கணக்குகள் கடைசியில் அதன் முடிவில்
திருமணம் கணிக்கப்படுகிறது. நான் அந்த
இடத்திற்கு வரவில்லை.
நமது முன்னோர்கள் மிகமிக புத்திசாலிகள்
சிக்கனவாதிகள்.சுயநலப் புலிகள் இதில் எள்ளின் முனை அளவு கூட எனக்கு மாற்று கருத்து
கிடையாது.
ஏன் எனில் இப்பொது நமது வீட்டை பராமரிக்க பாதுகாக்க
வேண்டுமென்றால் அதற்கு ஒருவரை வேலைக்கு நியமனம் செய்திடவேண்டும்.இதிலே பல வேலைகள்
உள்ளடங்கி இருக்கிறது.வீட்டைக் கூட்டி பெருக்குதல்,நமது துணிகளை துவைத்து சுத்தம் செய்தல்,பின் அதனை மடித்து தேய்த்து அடுக்குதல் ஒழுங்காக எல்லா விஷயங்களையும் கவனித்து அவரவர் தேவைகளை உடனுக்குடன்
நிறைவேற்றுதல் இதுபோல இன்னும் பலப் பல விஷயங்களை மேற்பார்வை செய்து அதனை நிறைவேற்றிட
அது போல நமக்கு சமைத்துபோட. அப்படி சமைத்த
உணவினைப் புன்னகைதனை தம் உதட்டினிலே லேசாக நெளியவிட்டு வெளிப்படுத்தி பாலோடு பழம்
யாவும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்து பசி ஆற வேண்டும்அந்தக்கால பெண்களின் உணர்வுகளைப் பற்றிச் சொல்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது) என பாடிச்
சென்றானே அந்த கவியரசனின் வரிகளுக்கு உயிர்கொடுப்பதுபோல பரிமாறிட ஒருவரை பணி
நியமனம் செய்திட வேண்டும்.
அதுபோல நமக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் உள்ளுணர்வுகளை ஆசை
அந்தரங்கங்களை புரிந்துகொண்டு நமக்கு இணையாக பரிமாற்றம் செய்திட
நமக்கு சட்டப்படி வாரிசுகள் வேண்டும்
மட்டிலும் பெற்றுத்தர
அதுபோல நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு மேலே உள்ள அலுவலர்கள் நம்மை எதாவது மனம் பாதித்திடும்
வகையில் பேசிடும்போது அப்போது ஏற்படும் கோபதாபங்களை வீட்டிற்கு வந்து அவரை
திட்டுவது போல திட்டுவதற்கு ஒருவர் வீட்டில் இருந்திட வேண்டும்
இதுபோல ஒவ்வொன்றுக்கும் ஒருவரை நியமனம்
செய்தால் அது நமது பொருளாதாரத்தை பாதித்திடாதா?அது கட்டுப்படி ஆகுமா? அப்படியே
பலரை வேலைக்கு அமர்த்தினால் அவர்கள் நமக்கு உண்மையாக இருப்பார்களா?
இப்படி எல்லாம் சிந்தித்த நம் முன்னோர்கள்
எடுத்த முடிவுதான் திருமணம் என்பது என நான் நினைக்கின்றேன்.
மேற்சொன்ன அனைத்து விஷயங்களையும் மனைவி
என்று வரும் ஒரே ஒரு பெண்ணால் நிறைவேற்றிட முடியும் நம்மைசரி செய்துவிட முடியம் என கருதியே சம்பிரதாயத்தின்
அடிப்படையில் சாஸ்வதமாக பெண் ஒருத்தியை பார்த்து நமக்கு மணம் செய்துவைகின்றனர்.
சரி அப்படி வரும் மனைவிக்கு நாம் என்ன
செலவு செய்கிறோம் அவளை எப்படி மதிக்கிறோம்.கொஞ்சம் நினைத்து பாருங்கள் அன்பர்களே! அவள் செய்யும் சேவைகள் அனைத்திற்கும் சம்பளமா
தருகிறோம் என்றால் நிச்சயமாக இல்லை.
சரி அந்த தொகையில் ஒரு கால் பங்காவது நாம் அவளுக்கு செலவு செய்கிறோமா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.ஏதோ தீபாவளி பொங்கல்
அவள் பிறந்த நாள் இதுபோன்றவைபவங்களுக்கு அரை மனதுடன் அவளுக்கு ஒன்றோ இரண்டோ சேலை வாங்கிதருவதோடு சரி அத்துடன் நமது கடமை
முடிந்தது என எண்ணும் . நாம் நம்மில்
பாதிபேருக்கு மேல் அவளுக்கு சம உரிமைகூட
வழங்குவது இல்லை.
நீ பேசாமல் இரு எல்லாம் எனக்குதெரியும் நீ வாயை மூடு.நீ ஒன்னும் எனக்கு யோசனை
சொல்லதேவைஇல்லை இப்படி மட்டுமே நாம் பேசுகிறோம் இது முழுக்க முழுக்க ஆண் ஆதிக்க
உணர்வுகளின் வெளிப்பாடுதானே!.
ஆனானப்பட்ட சிவ பெருமானே சக்தி இல்லையெனில் சிவம் இல்லை
என ஒத்துண்டுட்டார்.நீங்க என்ன ஜுஜுபி! இதுதான்
உண்மை.
ஆண்களாகிய நாம் அனைவரும் இனி முதல்கொண்டாவது மனைவியை உயிருக்குயிராக
நேசித்திடல் வேண்டும்.அவள் தரும் ஆலோசனைகளை கேட்டு அது சரியாக உள்ளது எனில் அவளை
பாராட்டி மகிழ்ந்திட வேண்டும் உண்மையை
அவளிடம் மறைக்காமல் சொல்லி அவளை இல்லற தெய்வமாக வணங்கி வாழ்ந்தால் நாம் எடுத்த
பிறவி முழுநிறைவு பெரும் என்று சொல்லி பொறுமையுடன் படித்த அனைவருக்கும் எனது
நெஞ்சார்ந்த நன்றிதனை காணிக்கையாக்கி விடைபெறுகிறேன்.வணக்கம்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment