மது விலக்கு
அனைவருக்கும் வணக்கம். இன்றைய தினம் தமிழகம்எங்கும் பேசப்படும் ஒர்
மிக மிக முக்கியமான விஷயமாக மேலே சொல்லப்பட்ட தலைப்பு உள்ளது
என்றால் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.
முதலில் இந்த மதுவிலக்கு விஷயத்தில் தமிழகம் எப்படி எல்லாம் பாதிக்க
பட்டுஇருந்ததுஎன்பதனைவரலாற்றினை நாம் சற்று பின் நோக்கி பார்த்தோம்
என்றால் மட்டுமே உங்களுக்கு புரியும். 1970 1971 ஆண்டுகளில் அதுவரைபூரண
மதுவிலக்கு அமலில்இருந்தமாநிலங்களில்தமிழ்நாடும் ஒன்று முதல்வராக .
இருந்த மாண்பு மிகு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இரு வேறு
காரணங்களுக்காக மதுவிலக்கு கொள்கையை கைவிடுவது என்று முடிவு
எடுத்த நேரம் அது.ஒன்று அப்போது தமிழகத்தில் நிகழ்வுற்ற பல்வேறு
கள்ளச்சாரய மனித மரணங்கள். மற்றொன்று தமிழ்நாட்டை சுற்றி உள்ள
மாநிலங்களான கேரளம் ஆந்திரம் கர்நாடகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய
நான்கிலும் அமோகமாக மதுவிற்பனை நடைபெற்றுகொண்டிருந்த காலம்
அது. தமிழகத்தின் பொருளாதாரம் ஏனைய மாநிலங்களுக்கு செல்வதை
தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற உணர்வு. இந்த இரண்டு காரணங்களுக்காக
அந்நாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் மதுவிலக்கு கொள்கையை தமிழ்
நாட்டில் கைவிட்டு விடலாம்என ஆலோசனைசெய்துகொண்டிருக்கும்போது
மூதறிஞர் மறைந்த சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜகோபால ஆச்சாரியார் அவர்கள் இது
விஷயமாக கலைஞரை அவரது இல்லத்தில் வந்து சந்தித்தார். கலைஞரின்
கையைப் பிடித்து கேட்டுகொண்டார். எந்த சூழ்நிலையிலும் இந்த மதுவிலக்கு
கொள்கையை கைவிட்டு விடாதீர்கள்.ஏறத்தாழ ஒருதலைமுறை இடைவெளி
காலஅளவுகளாகமக்கள் மறந்திருந்தஒருகெட்ட பழக்கம்.எனவே உங்களுக்கு
வருமானம் இழப்பு காரணம் எனில் அதை பெருக்க ஆயிரம் வழிகள் உள்ளன
அதனை நான் உங்களுக்கு வழங்கிட தயாராக உள்ளேன் என்று எவ்வளவோ
மன்றாடி போராடி கேட்டும் மறைந்த மூதறிஞரின் வேண்டுகோள் அன்றைய
தினம் கலைஞர்அவர்களால்புறக்கணிக்கப்பட்டது என்பதை இன்றைய இளம்
தலைமுறையினர் அறிந்திருக்க நியாயம் இல்லை. வேண்டுகோளை ஏற்க
கலைஞர் மறுத்துவிட்ட காரணத்தால் வேதனை நிரம்பிய நெஞ்சத்துடன்
ஆச்சாரியார் வீடு திரும்ப முனைந்த போது மழை குறுக்கிட இராஜாஜி
அவர்கள் நனைந்து விடக்கூடாது என்பதற்காக கலைஞர் குடை பிடித்து கூட
வர நினைக்கும்போது இராஜாஜி அவர்கள் அதனை மறுத்து சொன்ன வாசகம்
இன்றளவும் நினைவில் உள்ளது. என்பேச்சினை ஏற்க மறுத்த நீங்கள்
இந்த குடை பிடிப்பதை என்னால் ஏற்க இயலவில்லை. எதிர்காலத்தில் இந்த
தமிழகம் கெட்டு சீரழிந்து போகப்போவதை விட இந்த மழை ஒன்றும் என்னை
பெரிதும் பாதித்திடப்போவது இல்லை என்று கண்ணீர் மல்கிட கூறி சென்றது
இன்றளவும் யாராலும் மறந்துவிடமுடியாது. அதன் பிறகு தமிழகத்தில்
தாராளமாக கள்ளுக்கடைகள்,சாராயக்கடைகள்,அந்நிய மதுபானக் கடைகள்
என ஒவ்வொரு சிற்றூர் பேரூர்,நகராட்சி,மாநகராட்சி எனஅங்கிங்கு எனாதபடி
தமிழகம் முழுவதும் ஏலவிற்பனை மூலமாக திறக்கப்பட்டு அரசின் கஜானா
நிரம்பி வழிய ஆரம்பித்தது. அதற்கு பிறகு சாராய ஆலை அதிபர்களின்
வற்புறுத்தலை அடுத்து கள்ளுக்கடை சாராயக்கடை இவைகளுக்கு மூடுவிழா
நடத்தப்பட்டு வெறும் அந்நிய நாட்டு மதுவிற்பனை மட்டும் ஏகபோகமாக
மாநிலம் முழுதும் ஏலவிற்பனை மூலம் நடைபெற்றுவந்தது. ஆட்சி மாற்றம்
ஏற்பட்டு அதன் பின்னர் வந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அனைத்து
மதுபான கடை உரிமையாளர்களும் அதனை ஏலம் எடுத்தவர்களும் யார்யார்
என அவர்களது பூர்வீகத்தை அராய்ந்து பார்த்த போது முதல்வர் ஜெயலலிதா
அவர்கள் மதுபான கடை ஏலம் எடுத்தவர்கள் தி.மு.க.வினர் என்பதனை
அறிந்தது மட்டும் இன்றி இந்த ஏல முறை மூலம் அரசுக்கு பெரும் வருவாய்
இழப்பு ஏற்படுவதால் இதனை மாற்றி அரசாங்கமே மது விற்பனை செய்வது
என்று முடிவெடுத்து டாஸ்மாக் என்ற நிறுவனத்தை தொடங்கிய பெருமை
அவரயே சாரும். வருவாய் முப்பதாயிரம் கோடிகளை தொட்டது.அரசாங்கமே
அந்த வருவாயில் நடந்திடும் சூழல் உருவானது. இந்த வருவாயை இழக்க
எந்த அரசால் இயலும். அதனை ஈடுகட்ட எந்த வரியும் போடமுடியாத நிலை
இன்று உள்ளது. ஆகவேதான் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று அளித்த
பேட்டியில் பூரணமது விலக்கு என்பது தமிழ்நாட்டில் இயலாத காரியம் என்று
கூறி உள்ளார். மது பிரியர்கள் எவர் சொன்னாலும் குடிப்பதை விட்டுவிட
போவது கிடையாது, கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் சொன்னார்
திருடனைபார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று.
அதையே நானும் கூற விரும்புகிறேன்குடிகாரனாக பார்த்து திருந்தா விட்டால்
குடியை ஒழிக்க முடியாது.பூரண மதுவிலக்கு என்பது அப்போது மட்டுமே
சாத்தியம் அதுவரை நடைபெற போவது குடிகாரர்களின் சாம்ராஜ்யமே என்று
சொல்லி அன்புடன் விடை பெறுகிறேன்.
.
No comments:
Post a Comment