Monday, 18 March 2013
கோவிலில் இருப்பது தெய்வமா? இல்லை சிலையா?
அன்பிற்குரிய என் உயிரினும் மேலான
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!
உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்தகாலை
வணக்கங்கள் பல !!
இன்றைய தினம் உங்கள் அனைவரயும் எனது முகப்
பக்கமான(FACE BOOK)"எண்ணத்தில்தோன்றியவை"
இடுகைதனில் ஒரு வித்தியாசமான தலைப்பினில்
சந்திக்கிறேன்.
கோவிலில் இருப்பது தெய்வமா? அல்லது வெறும்
சிலையா? இதுவே இன்று நான் உங்கள் அனைவர்
முன்பாக வைத்திடும் விவாத மேடையின் தலைப்பு.
பொறுமையுடன் இதனைப் படித்திட வேண்டுமாய்
உங்கள் அனைவரையும் நான் கேட்டுகொள்கிறேன்.
பொதுவாக இன்றைய தினம் நமது இந்து மதத்தில்
உள்ளவர்களை விடுத்து பிற மதங்களான கிருஸ்து
மற்றும் இஸ்லாமிய மக்களைப் பார்கிறேன்.
கிறிஸ்துவ மதத்தினை சேர்ந்தோர்கள் அனைவரும்
தவறாமல் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில்
நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து
கொண்டு ஆண்டவனின் சன்னதியில் கூடுவது
வழக்கம்.
அதே போல இஸ்லாமிய நண்பர்கள்
தினம் ஐந்து வேளை தொழுவது என்பது அவர்களின்
கட்டாயக் கடமையாக இருந்தாலும் எல்லோராலும்
அதனை நிறைவேற்றிட இயலாத சூழ்நிலையில்
வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டுப்ரார்த்தனை
(கொத்துவா தொழுகை) நிகழ்வினில் தவறாமல்
கலந்துகொண்டு ஆண்டவனை வணங்குதல்
அவர்களிடம் நடைபெறுகிறது.
ஆனால் நம் இந்துக்கள் நிலை என்ன சற்று
பார்ப்போமா! ஏதாவது
நெருக்கடியான சூழ்நிலை,தாங்க முடியாத கஷ்டம்
வந்தால் ஒழிய நாம் யாரும் ஆலயம் செல்வது
என்பது கிடையவே கிடையாது.சரி ஒருவேளை
அப்படி போனதனால் கஷ்டம் நீஙகி காசு வந்து
விட்டாலோ நான்தான் கடவுள் என்று நினைத்திடும்
மனம்அனேகமாகநம்மில்பெரும்பான்மையோருக்கு
உண்டு அதை மறுப்பதற்கு இல்லை.
இப்போது விஷயத்திற்கு வருவோம். தெய்வம்
இருக்கிறதா இல்லையா.
பட்டுகோட்டை கவிஞர்
சொன்னார் கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு என்று.
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத்
தெரிகின்றதா? காற்றில் தவழுகின்றார் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா என்றார் கவியரசர்.
கவுரவம் திரைப்படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்
வேடத்தில் நடித்த நடிகர் திலகமோ இன்னும் ஒரு
படி மேலேபோய் கடவுள் பிரேம் போட்டு மாட்டிய
படத்தில் இல்லை நாம செய்ற தொழிலில் இருக்கி-
-ன்றார் என சொன்னார்.
இன்னும் இதுபோல எத்தனையோ உதாரணங்கள்
உள்ளது சொல்லிக்கொண்டே போகலாம். நீங்க
விஷயத்திற்கு வாங்க என நீங்கள் நினைப்பது
எனக்கு தெரிகிறது.
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றாள்
தமிழ் மூதாட்டி. மாதா,பிதா,குரு,தெய்வம் என்றனர்
முன்னோர்கள். இதற்கு நான் கேட்ட விளக்கம்
மாதா காட்டியதால் பிதா தெய்வம் மாதா பிதா
இருவரும் சேர்ந்து காட்டியதால் குரு தெய்வம்
இந்தமூவரும்சேர்ந்துகாட்டுவதுமட்டுமே உண்மை
தெய்வம் என்று.
தெய்வம் இருப்பது இங்கே வேறு எங்கே தெளிந்த
நினைவும்திறந்தநெஞ்சும்நிறைந்ததுண்டோ அங்கே
இதுவும் கவியரசரின் பாட்டுத் தான்.
பெற்ற தாய் தந்தையரை தவிக்க விட்டுவிட்டு மகன்
செல்லும் எந்த கோவிலிலும் தெய்வம் இருப்பது
இல்லை அங்கே வெறும் சிலை மட்டுமே இருக்கும்.
நன்மை செய்யும் எண்ணம் இல்லாதவர்கள்
செல்லும் கோவிலிலும் நிலைமை அது மட்டுமே
நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், அடுத்தவர் மனம்
வேதனைப்படும்படி நடப்பவர்கள்,இலஞ்ச லாவண்-
யத்தில் திளைத்து பணம்பெற்றோர்கள், பொதுப்
பணத்தினை கையாடல் செய்தவர்கள் தமது
உழைப்பினில் வாழாமல் ஊராரை எய்த்து பிழைப்பு
நடத்துவோர்கள், இதுபோல இன்னும் எத்தனை
எத்தனையோ சமூக விரோதிகள் நம்மிடையே
உண்டு.அவர்கள்சென்றுவணங்கிடும் கோவில்க-
-ளில் எல்லாம் தெய்வம் இருப்பது இல்லை. வெறும்
சிலை மட்டுமே உண்டு.
உள்ளதைச் சொல்லி நல்லதை மட்டுமே
செய்பவர்கள், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத
நல்ல மனம் படைத்தவர்கள் எல்லோரும் வாழ
வேண்டும் நாமும் வாழவேண்டும் என்று
நினைப்போர்கள் தனது உழைப்பினில் ஊதியம்
பெற்று அதைக் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள்
இதுபோல்எத்தனைஎத்தனையோ நல்ல உள்ளங்கள்
அனைத்தும் சென்று வணங்கிடும் கோவில்களில்
மட்டிலுமே தெய்வங்கள் உண்டு உண்டு என்று
சொல்லி என் காலை வேளைக்கட்டுரைதனை
நிறைவு செய்து நன்றி பாராட்டி முடிக்கிறேன்.
வாழ்வோம் நாம் அனைவரும் வளமுடன்.
நன்றி.வணக்கம்.
அன்புடன் மதுரை T.R.பாலு.
Labels:
உண்மை,
எண்ணம்,
கருத்து,
வேதனையின் வெளிப்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment