இலங்கை நிலையில் இவ்வளவு இளக்காரமா ?
சொல்ல வெட்கம் ஆகுதே! செந்தமிழன் நிலைதனை உலகிற்கு சொல்லிட
என் அன்பிற்கு உரிய உலகெங்கும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் இனிய தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும் வணக்கம். ஒருவனுக்கு
கண் இருக்கிறது. ஆனால் குருடனைப்போல நடிப்பான். அவன் யார்? காது நன்றாக கேட்கும் செவிடனை போல நடிப்பான்.அவன் யார்? வாய் அழகாக உள்ளது.ஆனால் ஊமை போல இருப்பான்.அவன்யார் ?
மேலே சொன்ன அவன்யார் என்ற கேள்விக்கு இன்று நமது தாய்த்திருநாட்டில் கேட்கப்படும் கேள்விக்கு இன்றுபிறந்த குழந்தையை கேட்டால் கூட பதில் சொல்லிடும். அதுதான் நமது இந்திய தேசத்தினை ஆண்டு கொண்டு இருக்கும் காங்கிரஸ் அரசு என்று. தமிழன் என்றொரு இனம் உண்டு.தனியே அதற்கொரு குணம் உண்டு என்பதனை அறிந்திடாத அறிந்திட மறுக்கும் சூடு சொரணை மானம்கெட்ட மதி கெட்ட ஒரு கேடு கெட்ட சர்க்கார் இன்றைய தினம் தமிழர்களுக்கு மத்திய அரசாக உள்ளது இதைபோல கேவலம்நிறைந்த ஒரு சூழ்நிலை தமிழனது கடந்த கால வரலாற்றில் என்றும் இருந்தது இல்லை. தாடி தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தபோது பீடிக்கு நெருப்பு கேட்ட கதை போல அங்கே சிங்களத்தில் நமது முன்னாள் வரலாற்று உறவு முறை கொண்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிகொண்டிருக்கும் நிலை கண்டும் மனம் இறங்காத அரசும் ஒரு அரசா. உனக்கு இதயம் என்பதே கிடையாதா.நீ என்ன களிமண்ணால் செய்த ஒரு பொம்மையா. அல்லது மரத்தால் செய்தவிட்ட செப்புசிலையா. அவைகள் கூட இதுபோன்ற ஒரு நிலை கண்டால் மனம் நொந்து கண்கள் கண்ணீர் குளம் ஆகுமே. உனக்கு ஒன்றுமே தோணவில்லையா.இல்லை தோன்றாதது போல நடிக்கிறாயா.கிழக்கு பாகிஸ்தானில் இதே இனப்பிச்சினை வந்தபோது பொங்கி எழுந்த மைய அரசே நீ மவுனம் காப்பது ஏன்? பழிக்கு பழி என்பது முறையான அரசியல் ஆகுமா. கேட்டால் அது அவர்கள் உள்நாட்டு பிரச்சனை என்று ஒதுங்குவாயோ. பரவாயில்லை.அப்படியே ஒதுங்கிவிடு உன்னை தமிழர்கள் ஒதுக்கிடும் நாள் வெகு தொலைவினில் இல்லை மகனே. எவர்க்கும் ஒரு காலம் வரும் அதுவரை பொருமனமே !பொறு!! நீதியும் நியாயமும் மேகங்களால் மறைக்கப்படும் கதிரவன் போல.மேகம் விலகட்டும்.உங்கள் சாயம் வெளுத்திடும்.மக்கள் துணிந்து விட்டால் மாநிலம் தாங்காது அன்னையே.தாங்காது.அதை மட்டும் நீ கவனத்தில்கொள் நிச்சயம் அதுவே உண்மை.மொத்தத்தில் தூங்கும் எவரையும் நாம் உசுப்பி விடலாம்.ஆனால் தூங்குபவன் போல பாசாங்கு செய்பவனை எப்படி எழுப்ப முடியும். அதுதான் நமது மத்திய காங்கிரஸ் அரசாங்கம். வாழ்க! அதன் தமிழ் தொண்டு. வளரட்டும் அவர்களது தமிழ் பற்று. காலம் வரும்.சந்திப்போம்.அதுவரை சிந்திப்போம்.
No comments:
Post a Comment