Wednesday, 13 March 2013

தவறுகள் பலரகம்!!


தவறுகள் பலரகம்!!....... உணருபவர்கள் எந்தரகம்!!

அனைவருக்கும் வணக்கம்!

நாம் நம்முடைய தினசரி வாழ்க்கை நடைமுறையில் எத்தனையோ தவறுகள் செய்துகொண்டுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.ஆனால் அவற்றுள் திருத்திகொள்ளகூடிய தவறுகள் எது என என்று பாப்போம்.

காலையில்எழுந்தவுடன்பற்களைசுத்தம்செய்யா-
மல் காபி அல்லதுதேனிர் குடிப்பது மாபெரும் தவறு.
ஏன் என்றால் ஏறத்தாழ எட்டு மணி நேரத்திற்கும் மேலாக அசைவு இல்லாது இருக்கும் நமது வாய் பகுதி மற்றும் ஈறுகள் இவைகளில் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் பெரும் அளவில் காணப்படுகின்றன. இவைகளை சுத்தம் செய்திடாமல் வயிற்றுக்குள் நாம் காபி அல்லது தேனிர்  மூலமாக அனுப்புவோமேயானால் நாமே வியாதிகளை எந்த விலையும் இன்றி உடம்புக்குள் செல்ல அனுமதிப்பதற்கு சமம்.

நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு  பேர்கள் உணவு உண்டபின் நன்கு வாய்  கொப்பளிப்பது என்பது கிடையவே கிடையாது.அப்புறம் எப்படி.கிருமிகள் வாய்க்குள் உருவாகாமல் இருக்கும்.

இரண்டாவதாக நம்மில் அநேகர் எப்படி பல் தேய்ப்பது என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டுஇறுக்கிறார்கள் பிரஷ் மேலே பேஸ்ட்டை வைத்து கடனே என்று பல்தேய்த்து வருகின்றனர்.இதனால் இளம் வயதில் பற்களை இழந்தோர் ஏராளம் ஏராளம். முதலில் பேஸ்ட்டை இடது உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு வலது கை ஆள்காட்டி விரலால் சிறுது சிறுதாக எடுத்து பற்களையும் ஈறுகளையும் மசாஜ் செய்வதுபோல் ஐந்து நிமிடம்வரை தேய்த்த பின் பிரஷ் கொண்டு விளக்கினால் பற்கள் ஆரோக்யமாக இருக்கும்.வாரம் ஒருமுறையாவது உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் மிக  மிக அவசியம்.

உணவு உண்ணும்போது தண்ணீர் குடிப்பது மாபெரும் தவறு. சங்க கால பாடல் என்ன சொல்கிறது என பார்ப்போம்:-
      நீர் சுருக்கி நெய் உருக்கி மோர் பெருக்கி
      உண்டுவந்தோம் எனில் ஆண்டு நூறு வரைவாழ்வு உனக்கு இங்கு உண்டு..

இந்த பாடலுக்கு என்ன பொருள் என்றால் உணவு உண்ணும் போது  தண்ணீர் குடித்திடகூடாது நெய்யை கட்டியாக விடாமல் உருக்கி சோற்றின் மேல் இட வேண்டும்.தயிராக சாபிடாமல் கடைந்து மோராக நன்கு நீர் சேர்த்து உணவு எல்லாம் உண்டபிறகு கடைசியில் நீர் அருந்தும் பழக்கம் நாம் வளர்துகொண்டோமேயானால் நூறாண்டுகள் வாழ்ந்திட முடியும் என்பதே அந்த பாடலுக்கு உள்ள விளக்கம். .. ..
இரைப்பையில் அரை பாகம் உணவு கால் பாகம் தண்ணீர் மீதி கால் பாகம் வெற்றிடமாகஇருப்போருக்குவயிறுசம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வருவது கிடையாது. என மருத்துவ ஆலோசனை மையங்கள் கூறுகின்றன
.
இதை படித்தபிறகாவதுமீண்டும்  அந்த தவறுகளை செய்யாமல் இருபதுதான் நீங்கள் எனக்கு அளிக்கும் மரியாதை என சொல்லி நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.வணக்கம்.மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment