பழமொழிகளா
அல்லது பிழைமொழிகளா?—சிறு விளக்கம்.
நான் ஏற்கனவே பல்வேறு பிழையான மொழிகள் பற்றி விளக்கம் தந்து
உள்ளேன்.அந்த வரிசையில் இன்று மேலும் ஒன்று.
சோழியன் குடுமி சும்மா
ஆடாது.
இந்த பழ மொழிக்கு நாம் இதுவரை கொண்ட பொருள்
யாதெனின் சோழியன் என்று ஒருவன் அவன் ஒரு காரியவாதி. அவன் குடுமி காரியம் இன்றி
ஆடாது.இப்படித்தான் நம்மில் பலர் இன்றுவரை பொருள் கொண்டு வந்துள்ளோம்.
ஆனால்
அதுவன்று உண்மை. இதற்கு சரியான பொருள் என்னவென்றால் சோழியன் என்று அழைக்கப்படுவோர்
கோவிலில் ஊழியம் செய்பவர்கள். அவர்கள் அனைவர்க்கும் குடுமி உண்டு.
கோவிலில்
குடமுழுக்கு என்று வரும்போது புனித நீரை கலசங்களில் தெளிப்பதற்கு கோபுர உச்சிக்கு
இவர்கள்தான் அந்த புனிதநீர் உள்ள குடங்களை தங்களது தலையில் வைத்து எடுத்து செல்லவேண்டும். ஆனால் அந்த புனிதநீர் உள்ள குடத்தை வெறும்
தலையில் வைத்து கொண்டு செல்லுதல் கூடாது.
அதற்கு என்று உள்ள சும்மாடு எனப்படும் வட்ட
வடிவில் உள்ள பிரிமனை மீது வைத்து தான் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லவேண்டும்.ஒரு
சோழியன் என்ன செய்தான் என்றால் சும்மாடு எதற்கு என்னிடம் நீண்ட குடுமி
உள்ளது.அதனால் அந்த குடுமியை வட்ட பிரிமனையாக சும்மடாக வைத்து கொள்கிறேன் என்று
சொன்னான். ஆனால் பெரியோர்கள் மறுத்து சொன்ன வாசகம்தான்:-
சோழியன் குடுமி சும்மாடு
ஆகாது
என்று சொன்ன சொல்லை
சோழியன் குடுமி சும்மா ஆடாது
என நாம் மாற்றி பொருள் கொண்டு வந்தோம்.
இனிமேல் திருத்தி பொருள்கொள்ள வேண்டுகிறேன்.நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை
T.R.பாலு.
No comments:
Post a Comment