Thursday, 7 March 2013

சர்வதேச மகளிர் தினம் !!

உலக மகளிர் தினம்!! 

 

 உலகத்தில் வாழும் அனைத்து தாய்க்குலத்தின் பெருமைமிகு (பெண் இனத்தின்)பிரதிநிதிகளே!அனைவருக்கும்எனதுஇதய-ங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள். வாழ்க.பல்லாண்டு!

 இன்றையதினம் மகளிர் அனைவரும் எடுத்துக் கொள்ளவேண்டிய சபதம் எதுவாக இருக்க வேண்டும் என்றால் மகளிர் நாங்கள் இன்று முதல் மகளிராக மட்டுமே வாழ்ந்திடுவோம் கடந்த காலங்களைப் போல இல்லாமல் பெற்ற தாய் தந்தையர் மனம் மகிழ்ந்திடும் வண்ணமும் கட்டிய கணவனின் மனம் கோணாமல் வாழ்ந்திடுவோம் எனவும் பெற்ற குழந்தைகளின் தேவைகளை ஆசைகளை நிறைவேற்றிடும்வண்ணம் வாழ்ந்திடுவோம் எனவும் பெண் குலத்தின் பெருமைகளை எதிர்கால சமுதாயம் எப்படி பின்பற்ற வேண்டும் என்பதற்கு நாங்கள் உதாரணமாக வாழ்ந்திடுவோம் என்று சூளுரைத்து வாழுங்கள். நீங்களும் மனம் மகிழ்வுடன் வாழ்ந்து உங்கள் குடும்பத்தாரையும் மனம் மகிழ்வுறச்செய்து வாழ்ந்தீர்களேயானால் வரலாறு உங்களை வாழ்த்தி வரவேற்கும்.

 எனவே நீங்கள் யாவரும் கடந்தகால வாழ்க்கை முறைகளை இன்றுமுதல் கைவிட்டு விட்டு  புதுமைப் பெண்களாக வாழ்ந்திடுங்கள் என்று மீண்டும் ஒருமுறை இருகரம் கூப்பி கேட்டுகொள்வதுடன் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்  இனிமேல் நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்று உலக மகளிருக்கு நல்ல வாழ்த்துக்களை மனத்தார வாழ்த்தி விடை பெறுகிறேன்.நன்றி,வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.





No comments:

Post a Comment