பயன் தருமா முழு அடைப்பு ???
அனைவருக்கும் வணக்கம்!!
இன்றைய தினம் (12-03-2013) செவ்வாய்க் கிழமை
இலங்கை வாழ் தமிழர்கள் துயர் துடைத்திடவும்
ஐ.நா.மனித உரிமை மகாநாட்டில் அமெரிக்க
அரசால் கொண்டுவரப்பட்ட மனிதஉரிமைகள்
இலங்கையில் நடந்த போரின்போது மீறப்பட்டது
என்ற தீர்மானத்தை கருத்துக் குருடான காது கேளா
மத்திய அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ப-
தனை வலியுறுத்தியும் நடை பெற உள்ள வேலை
நிறுத்தம் எந்த அளவிற்கு பயன்தருவதாக அமை-
யும் என்பதனை பற்றிய கருத்து ஆய்வு மட்டுமே
இன்றைய தினம் நான் உங்களது சிந்தனைக்கு
எனது "எண்ணத்தில் தோன்றியவை " பக்கமதில்
தரும் சிந்தனை விருந்து.
நாம் இதில் முதலில் கவனிக்க வேண்டிய கருத்து
என்னவெனில் இது முழக்க முழுக்க அரசியல் சுய
லாபத்திற்காக மத்திய அரசில் அங்கம் வகித்து
கொண்டும் ஏற்கனவே 2௦௦9ம் ஆண்டு நடைபெற்ற
இறுதி போரின் போது வாய்மூடி மௌனியாக
இருந்துகொண்டு ஒரு நான்கு மணி நேர உண்ணா
நோன்பு என்னும் உலகமே வியந்த ஒரு நாடகம்
ஒன்றினை அரங்கேற்றிய தமிழகத்தை இதற்கு
முன்னாள் ஆண்ட தி.மு.க.தலைமையினால்
நடத்தப் படுகிறது என்பதனை நாம் முதலில்
\
அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தமாதிரி இதற்கு
முன்பாக நாற்பது முழு வேலை நிறுத்தங்கள் இந்த
நாட்டில் நடை பெற்றுள்ளன. என்ன பயனை நாம்
கண்டோம். சிந்தித்து பாருங்கள். ஆட்சிக் கட்டிலில்
இதற்கு முன்னர் அமர்ந்து இருந்தவர்களும் சரி
இப்போது ஆண்டுகொண்டு இருப்பவர்களும் சரி
அவர்களுக்கு இந்த முழு பன்னிரெண்டு மணி நேர
வேலைநிறுத்தம் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தப்
போவது கிடையாது. ஆனால் தெருக் கோடியில்
அன்றாடம் வேலைக்குப் போனால் மட்டுமே
வீட்டில் அடுப்பு எறியும் நிலைமையில் உள்ள நமது
குப்பனையும் சுப்பனையும் பற்றி சற்று எண்ணிப்
பாருங்கள்.என்ன ஆகும் அவனது நிலைமை. இந்த
முழு அடைப்பு அறிவிப்பாளர்கள் தும்பை விட்டு
விட்டு இப்போது வாலைப் பிடித்துகொண்டு நமை
ஏமாற்றும் முயற்சியில் உள்ளார்கள். நான் இந்த
விஷயத்தில் ஒன்றை கேட்க விழைகிறேன்.
பந்த்அறிவிப்பாளர்கள்உண்மையிலேயே இலங்கை
பிரச்சனையில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால்
எதற்கு அந்த மானம் இழந்த மத்திய அரசில் நீங்கள்
பங்கு பெற்று இன்னமும் இருக்கிறீர்கள்? உண்மை
அக்கறை விசுவாசம் இவை எல்லாம் இலங்கை
தமிழர்கள் மீது ங்களுக்கு இருக்குமேயானால்
இப்போது நீங்கள் உங்களது ஆதரவை விலக்கிக்
கொண்டு பதவிகளை ராஜினாமா செய்து விட்டு
வெளியே வாருங்கள். நீங்கள் உண்மையிலேயே
தமிழர்கள் இனத்தை அவர்களது மானத்தை
காப்பாற்றும் தானைத் தலைவர் என்பதனை இந்த
நாடு ஏற்றுக்கொள்ளும். அந்த தைரியம் உங்களுக்கு
உண்டா ? அதுதான் கிடையவே கிடையாதே. இது
எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே. எங்கே
பதவி போனால் வாரிசின் நிலைமை என்னாகுமோ
என்ற கவலை மட்டும் தானே ஐயா தங்களுக்கு.
இந்த நாடகங்களை எல்லாம் தமிழன் நம்பி மோசம்
போன நாட்கள் எல்லாம் பறந்தோடி விட்டது
என்பது மட்டுமே உண்மை. பாலுக்கும் காவல்
அதே நேரம் பூனைக்கும் தோழன் இதுதானே ஐயா
உங்கள் நிலை இன்று. எப்படியோ வாழ்ந்து விட்டுப்
போங்கள் அதற்காக முதலைக் கண்ண்ணீர் வடித்து
தமிழர்களை ஏமாற்றும் செயல்தனைச் செய்திட
வேண்டாம் என்ற அகில உலக தமிழர்களது
உண்மை வேண்டுகோளை நான் இங்கே தெரிவித்து
கொள்ள கடமைப் பட்டுள்ளேன். எல்லாம் வல்ல
இறைவன் எல்லாவற்றையும்பார்த்துகொண்டுதான்
இருக்கிறான். நல்லதே நடக்கும். இலங்கை
தமிழர்கள் தலை எழுத்தினை யார் மாற்றிட
முடியும், கையால் ஆகாத தமிழ் இனம் இந்த தமிழ்
நாட்டினில் உள்ளவரை.
எனவே இந்த பன்னிரெண்டு மணி நேர முழு
அடைப்பு இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மைய
அரசாங்கத்தினை எந்த வகையிலும் நேர் செய்திட
உதவாது என்பதே நம் அனைவரின் கருத்து.
மீண்டும் எமது அடுத்த சந்திப்பில் உங்களை
சந்திக்கிறேன். அதுவரை நன்றி பாராட்டி விடை
பெறுகிறேன். வணக்கம்.
No comments:
Post a Comment