Sunday, 17 March 2013

அன்பு மட்டுமே உலகில் சிறந்தது !!


உயர்வானது எது?

அன்பா அல்லது கோபமா ? 



எது உண்மையில் உயர்வானது என எனக்குள் ஒரு
வேள்வியை நடத்தினேன்.விடை என்ன தெரியுமா?
அன்பு!! இதை நாம் யார் மீதுவேண்டுமானாலும்  காட்டலாம்!!
ஆனால் கோபம்?
இதை நம் உயிரினும் மேலான உரிமை உள்ளவர்கள்
மற்றும் நமது உறவினர்கள் இந்த இருவேறு பிரிவினர்கள் மீது
மட்டுமே நாம் காண்பிக்கமுடியும்.ஆதலால்
கோபம் ஒன்றும் அன்பை விட
உயர்வானது அல்ல!!

 ஆம்.

அன்புதான் இன்ப ஊர்தி.!
அன்புதான் உலகஜோதி !!
அன்புதான் உலகமகா சக்தி!!!

முன்னொரு காலத்தில் சிவாஜி கணேசன் நடித்து 
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் 
முரசொலி மாறனின் கை வண்ணத்தில் 
உருவான " அன்னையின் ஆணை "
திரைக்காவியத்தில் வரும் 
ஓரங்க நாடகமான
அசோக சக்கரவர்த்தியில் 
புத்த பிட்சு பேசும் வசனம் இது.


அன்பே சிவம்.வணக்கம்.  

No comments:

Post a Comment