மனிதன் நோய்வாய் படுதலுக்கு காரணம் யார் ?
என் உயிரினும் மேலான அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய
அன்புநிறைந்த வணக்கங்கள்
.
பொதுவாக மனிதகுலம் நோய் தொற்றுக்கு
ஆளாக முக்கிய காரணம் எது ?
வாதம்,கபம்,பித்தம் ஆகிய மூன்றின் பங்களிப்பு
மட்டுமே !! ஆகும்.
இந்த மூன்றும் சம பங்காக இருக்கும்வரை
மனிதன் எந்தநோயிலும் வீழ்ந்திடுவது
இல்லை. ஏன் என்றால் இந்த மூன்று அம்சங்களின்
ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த உருவம் தான்
மனித உடம்பு என்பது.
இந்தக் கருத்தினையே திருவள்ளுவரும் தமது
குறளில் வலியுறுத்திக் கூறுகிறார்.
அதிகாரம் :- மருந்து
குறள் எண் :- 941.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று '
அதாவது இதற்கு பொருள் என்னவென்றால்
மருத்துவ நூல்களில் சொல்லயுள்ளபடி வாதம்,
பித்தம் மற்றும் சிலேத்துவம் என்று சொல்லப்படும்
கபம் (சளி) இந்த மூன்றும் அளவு கூடினாலும்
குறைந்தாலும் மனிதனுக்கு நோய் என்பது
கண்டிப்பாக ஏற்பட்டே ஆகும்.
சரி இந்த மூன்றில் ஏதாவது ஒன்று கூடுவதற்கும்
குறைவதற்கும் என்ன காரணம் என்று ஆராய்ந்து
பார்த்ததில் அந்த கால சித்த வைத்திய முறையில்
மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூறிடும்
கண்டுபிடிப்பு யாதெனின் நாம் நமது
உணவு வகைகளில் ஆறு சுவைகளையும் சரிவர
உண்ண மறுப்பதே ஆகுமாம்.
எனவே நாம் நமது உடல்நிலைதனில்
உண்மையான அக்கறையும் ஆர்வமும்
உள்ளவர்கள்என்றால் முதலில் நாம் உண்ணும்
உணவு வகைகளில் ஆறு சுவைகளையும்
ஒருங்கிணைந்து சேர்த்து உண்ண பழகிக்
கொள்ள வேண்டும்.
அவை எது என்றால்:-
உப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்,கசப்பு,துவர்ப்பு.
முதலியன.
மேற்சொன்னவைகளில் நாம் முதல் நான்கு
வகைகளை (உப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்) மட்டுமே
சாப்பிட்டுபழகிவிட்டோம். கசப்பையும்
துவர்ப்பையும் தொட்டுக் கூட பார்ப்பதே
இல்லை. நமக்கு வியாதியே அங்குதான் ஆரம்பம்
ஆகின்றது நேயர்களே.
இது உண்மை.இது சத்தியம். இது சித்த
வைத்தியர்கள் நமக்கு தரும் அறிவுரை.
துவர்ப்புக்கு வாழைப்பூ துவரமும்,கசப்புக்கு
பாகற்காய் துவரமும் ஒழுங்காக நாம்
நமது தினசரி உணவு வகைகளில் கஷ்டப்பட்டு
மருந்தாகவாவது நாம் அனைவரும் உட்கொண்டே
ஆகவேண்டும். அப்போதுதான் வியாதி நம்
அருகில் வர யோசிக்கும்.
ஆகவே நேயர்களே நீங்கள் அனைவரும் இனிமுதல்
கொண்டாவது ஆறு சுவையுடன் கூடிய உணவு
வகைகளை சாப்பிட்டு நூறாண்டுகள் நோய்
நொடிகள் ஏதுமின்றி வாழ்ந்திட எல்லாம் வல்ல
இறைவன் நமக்கு அருள் புரிவானாக !!
மிக்க நன்றி!! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment