Friday, 15 March 2013


முப்பத்தி ஒன்று மற்றும் 
முப்பத்தி இரண்டாவது இலட்சணங்கள்.


ஒரு தேசத்தின் சக்கரவர்த்தி தனது புதல்விக்கு திருமணம் செய்ய எண்ணும் போது மந்திரியை அழைத்து தனது மகளுக்கு மணவாளனாக வருபவனுக்கு ஆண்களுக்குரிய முப்பத்தி இரண்டு இலட்சணங்களும் இருந்தாகவேண்டும் 

அதற்குரிய மாப்பிள்ளையை தேர்வு செய்து வர பற்பல நாடுகளுக்குசென்று தேடிவர வேண்டும் என்று மந்திரியை பார்த்து ஆணையிட்டார் சக்கரவர்த்தி
.
ராஜ ஆணை அல்லவா.மந்திரியும் பல்வேறு நாடுகளுக்கு சென்று மாப்பிள்ளை தேட புறப்பட்டார் மந்திரி. ஏறத்தாழ ஒருமாத காலம் கழித்து நாடு திரும்பிய உடன்   சக்கரவர்த்தியை சந்தித்து கருத்து வெளியிட்டார். 

மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி அவர்களே தாங்கள் குறிப்பிட்ட மொத்த இலட்சணங்கள் முப்பத்தி இரண்டில்  இருபத்தி ஒன்பது, முப்பது இலட்சணங்கள்  மட்டுமே தேறுவதாக சொன்னார்.

உடனே மன்னர் அப்படியா சரி இல்லாத/கிடைத்திடாத  அந்த முப்பத்தி ஒன்று மட்டும் முப்பத்தி இரண்டாவது இலட்சணங்கள் எவை எவை என வினவ,மந்திரி சொன்னார்:-

   31)  எந்த ஒரு விஷயமும் தனக்காக தெரியும் அறிவு இல்லை.
   32)அந்சூழ்நிலையில்விஷயம்தெரிந்தஒருவர்சொல்லுவதையும்கேட்பதும்
      கிடையாது

உடனே ராஜா முக்கியமான இந்த இரண்டு விஷயமும் தெரிய வில்லை என்றால் தெரிஞ்ச முப்பது விஷயங்களையும் வைத்து என்னையா பிரயோ ஜனம்? என்று கேட்டாராம். எனது தந்தை அவர்கள் நான் சிறுவனாக இருந்த போது கூற கேட்ட கதை இது.

நன்றி.வணக்கம்.மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment