Saturday, 2 March 2013

பாவனை செய்கிறதா? பழி வாங்குகிறதா ?

பாவனையா? அல்லது பழி தீர்ப்பதா?

 
 
எனது அன்பிற்கு என்றும் உரிய உலகத்தின்பல்வேறு நாடுகளில் வாழ்ந்திடும்  
 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!! முதற்கண் உங்கள் அனைவருக்கும் நான் எனது 
 
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 
இன்று சானல் நான்கு தொலைக்காட்சி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பாக 
 
ஒளிபரப்பியஒலி ஒளி காட்சிகள் கொண்டபதிவேடுகளை கண்ட பிறகே இங்கு 
 
இந்தியாவில் உள்ள கட்சிகளும் சரி உலகநாடுகளும் சரி ஒரு சொல்லிட 
 
இயலாத உத்வேகத்துடன் இலங்கை இனப்படுகொலைகள் பற்றிய சிந்தனை 
 
அவர்களுக்கு மேலோங்கி ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது என்றால் 
 
அது மிகையான சொல் அல்ல.  இதுவரை இந்த விஷயத்தில் வாய் மூடி 
 
மௌனம் காத்து வந்த பாரதிய ஜனதா கட்சி ஆகட்டும் போது உடமை 
 
கட்சிகள் ஆகட்டும் இனிமேலும் நாம் இதை பற்றி பேசாமல் இருப்போமே
 
ஆனால் நாம் தமிழகத்தில் வணிகம் செய்திட முடியாது என்ற நிலைக்கு 
 
அவர்கள் தள்ளப்பட்டதன் பிறகு தான் அவர்கள் திருவாய் மலர்ந்து உள்ளனர் 
 
இதுவே உண்மை.இதுவே யதார்த்தம். ஆனால் இந்தியாவை ஆண்டுகொண்டு 
 
இருக்கும் மத்திய காங்கிரெஸ் அரசாங்கம் இதுவரை இலங்கை தமிழர் 
 
பிரச்சனையில் என்னசெய்து விட்டது.இனிமேல்என்னசெய்ய காத்திருக்கிறது  
 
இதுதான் தற்போது  தமிழகத்தில் வாழ்ந்து வரும்  மக்கள் முன் உள்ள கேள்வி.
 
இலங்கையில் இனப்படுகொலைகள் மிகமிகக் கொடூரமாக 2009ம் ஆண்டு 
 
மத்தியில் நடைபெற்றுகொண்டிருந்த போது அந்த கொலைகளை செய்து 
 
முடிப்பதற்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் அது அறிவுரைகள் 
 
சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் சரி அழித்து கொல்ல உதவிடும் 
 
ஆயுதங்கள் வழங்கிய விஷயங்களாக இருந்தாலும் சரி மத்திய காங்கிரெஸ் 
 
அரசாங்கம் மிக மிக நேர்த்தியாக திறம்பட தமிழினம் முற்றிலும் வேரோடும் 
 
வேரடி மண்ணோடும் அழிக்கப்பட அனைத்து உதவிகளையும் மிக மிக 
 
தாராளமான மனதோடுதான் செய்துகொடுத்ததுஅதில் எனக்கு எள்ளின முனை 
 
அளவு கூட சந்தேகம் இல்லை.அந்த தருணத்தில் மத்தியில் உள்ள ஆளும் 
 
கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக கட்சிகள் கூட இந்த விஷயத்தை 
 
கண்டும் காணாமலும் என நடந்து கொண்டது தான் இலங்கைதமிழர்களின் 
 
தலை எழுத்து. விதி இவர்களது உருவில் (தமிழ்நாட்டை ஆண்ட கட்சி) 
 
இலங்கை தமிழர்களின் உடமையையும் உயிரையும் இலங்கை கொடுங்கோல் 
 
மன்னன் இராஜ பக்சே சூரையாடிட தமிழ் பெண்களின் கற்பு அழிப்பதற்கு 
 
மற்றும்  வேலு பிள்ளை பிரபாகரன் அவரது மகன்கள் அதிலும் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் ஆகியோர் அடைந்த கொடூர மரணம் இவை எல்லா 

வற்றிலும் மிகப்பெரிய பங்கு நிச்சயமுண்டு/அதை யாரும் மறுக்கவோ 
 
மறைத்திடவோ முயல்வது புண்ணுக்கு புனுகுதடவும் வேலையை போன்றது.
 
அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த கட்சி சரியான முறையில் இலங்கை 
 
தமிழர் விஷயங்களை அணுகிஇருந்தால்இன்று டெசோவும்வேண்டாம் 
 
போராட்டமோ முற்றுகையோ எதுவும் தேவைப்பட்டு இருக்காது.சரி அது 
 
முடிந்துபோன விஷயம்.பேசிப் பயன் ஏதும் இல்லை. போன உயிர்கள் என்ன
 
மீண்டும் திரும்பி வரவா போகிறது. கிடையாதே. சரி இப்பொழுது தலைப்பு 
 
சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு வருவோம். ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு 
 
வர உள்ள தீர்மானக்தை இந்தியா ஆதரிக்க போகிறதா இல்லையா என்பது 
 
அல்ல கேள்வி.  மத்தியில் உள்ள அரசாங்கத்தை காப்பாற்ற காங்கிரெஸ் 
 
கட்சி கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செய்யபோவது 
 
என்னவென்றால் போர்குற்ற தீர்மானத்தில் ஏற்கனவே இதற்குமுன்னர் 
 
செய்தது போல இலங்கைக்கு ஆதரவாக சில திருத்தங்களை செய்து அந்த 
 
தீர்மானத்தினை முழுவதுமாக அர்த்தம் அற்றதாக ஆக்கி தி.மு.க. விற்கு 
 
ஆதரவாக இருப்பது போல பாவனை காட்டபோகிறதா இல்லை  தனது 
 
குடும்பத் தலைவர் இலங்கை இயக்கத்தினரால் குண்டு வைத்து கொடூரமாக 
 
கொலை செய்யப் பட்டதற்கு பழி வாங்கப் போகிறதா?  எதை மைய அரசு 
 
செய்தாலும் பண்ணிய பாவத்திற்கு அவர்களுக்கு பரிகாரம் கிடைத்திடப் 
 
போவது இல்லை.  காங்கிரெஸ் பேரியக்கம் அந்த பாவத்திற்கான தண்டனை 
 
தனை பெறப் போவதுதான் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலின் 
 
முடிவகள் என்பது இறைவன் மட்டுமே அறிந்த உண்மை. கொல்லப்பட்ட 
 
தமிழர்களின்ஆன்மாசொர்க்கத்திலாவதுஅமைதிஅடைந்திடநாம்அனைவரும்  
 
பிரார்த்தனை செய்திடலாம். ஏன் என்றால் நம்மால் அது மட்டுமே முடியும்!!.
 
நன்றி.வணக்கம்.
 

No comments:

Post a Comment