பூணுல்
யார் போடுவது?
எதற்காக
போடுவது?
அன்புத் தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும்
வணக்கம் !
ஒரு
வித்தியாசனமான தலைப்பில் இன்று மீண்டும் உங்களைச் சந்திப்பதில்பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக
இன்று நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு நபர்களுக்கு மேல் தாம்
ஏன்,எதற்காக பூணுல் அணிந்து கொள்கிறோம் என்று தெரிந்து
கொள்ளாமலேயே பூணூல் அணிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
பூணுல்
என்பது ஒரு ஜாதியின் அடையாள சின்னம் அல்ல.அதுஒருகொள்கையின்
வெளிப்பாடு. அதுவே உண்மை.
அது என்ன
கொள்கை என்பதை அறிந்து கொள்வதற்கு முன் நமக்கு தெரிந்தவிஷயம்
இந்தபூணூலை அந்தணர்கள்மட்டும் தான் அக்காலத்தில் அணிந்திருந்தனர்.
அப்படிப்பட்ட
அந்தணர்கள் எப்படி இருக்க வேண்டும் எனவள்ளுவப்பெருந்தகை
சொல்லி உள்ளார்:-
அதிகாரம் :-
நீத்தார் பெருமை
குறள் எண் :- 3௦
அந்தணர் என்போர் அறவோர் மற்றஎவ்வுயிர்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலார் ..
.. .
. ..
அதாவது எந்த உயிர் இனத்துக்கும் கொடுந்தன்மை செய்யாமல்அறவழிப்படி வாழ்பவரே அந்தணர் என்பது வள்ளுவன்வாக்கு.(இன்று அந்த எண்ணம் கொண்டோர் யாரும் இல்லை அதுவேறு விஷயம்.)
முப்புரி நூலில் பின்னப்பட்டு வலதுகையை வழியே உள்நுழைத்து மார்பின் குறுக்கே அணிவதுதான் பூணுல் எனப்படுவது.
அது மனித உடலை இரண்டு கூறுகளாக பிரிக்கிறது.மேல்பகுதிஎன்பதுமூளை,இதயம்,முகம் சிந்தனை போன்றவைகளை உள்ளடக்கியது.
அடுத்து கீழ் பகுதிஎன்பதில் வயிறு, மற்றும் அதன் அடியில் உள்ள பகுதிமுதலியன அமைந்து உள்ளன.
பூணுலுக்கு மேலேயுள்ள பகுதிகளான சிந்தனை செயல்படஉதவும்மூளை,ஐம்புலன்களில் நான்கு இவைகளைஎல்லாம்மனிதன்நேர்மையான வழியில்/உண்மை வழியில்சென்றிட மட்டுமே செலவுசெய்தானேயானால்அவன்சொர்கத்திற்கு சென்றிட முடியும்.
ஆனால் அதேசமயம்மேலே சொன்ன வழிகளுக்கு மாறாக பூணுலுக்கு கீழே உள்ள பகுதிகளைகெட்டவழிகளில் மனம்போனபோக்கில் சென்று செலவழித்து நடப்பானேயானால்அவன் நரகத்துக்குத்தான் செல்வான் என்பதனை எச்சரிக்கையுடன்உணர்த்தும் ஒரு கருவியே பூணுல் என்பதாகும் என்றே நான் கருதுகிறேன்.
இதுவரை இந்த கருத்தை தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து கொண்டு உண்மையுடன்செயல்படவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி வணக்கம்
No comments:
Post a Comment