Friday, 15 March 2013

விதை யார் போட்டது ?


ஆனால் விதை நான் போட்டது!!


ஒரு வழியா உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தனது அரசிதழில்  காவேரி நதி நீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பை வெளியிட்டதாக  கூறி அந்த அறிவிப்பையும் உச்ச நீதி மன்றத்தில் சமர்பித்தாகிவிட்டது.

 வழக்கம்போல் இதற்கு நமது  அரசு முழு முயற்சியும் நாங்கதான் எடுத்தோம்.எங்களுக்கு கிடைத்த இமாலய வெற்றி அப்படி இப்படி என போட்டி போட்டுக்கிட்டு சந்தோசம் கொண்டாடிகிட்டு வரத்தை பாத்தா சிரிக்கறதா அழறதா சத்தியமா தெரியல்லை எனக்கு. 

இந்த காவேரி நதி நீர் ஆணையம் என்பது  முழுக்க முழுக்க மறைந்த முன்னாள் பிரதமர் V.P.சிங் காலத்தில் கலைஞர் அவர்களின் மிக மிகத் தீவிர முயற்சியால் அமைக்கப்பட்டது என்பது ரொம்ப பேருக்கு தெரிய நியாயம் இல்லை. 

அன்று அந்த முயற்சி எடுத்து கலைஞர் அதை அமைக்க வில்லை என்றால் இன்று இது சாத்தியம் ஆகியிருக்குமா என்பது தான் பகுத்தறிவு சிந்தனையாளர்கள் கேட்கும் கேள்வி.

மத்திய அரசிதழில் வெளிவர தடை இருந்தது என்னவோ உண்மைதான்.அதற்கு  பல்வேறு காரணங்கள் உண்டு. பல்வேறு வழக்கு விசாரணைகளால் நிலுவையில் இருந்ததால்  வெளிவர இயலவில்லை மேலும் உச்சநீதி மன்ற நீதிபதிகள்தான். இந்த கேள்வியை கேட்டது. காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் ஏன் வெளியிடவில்லை என்று கேட்டதும்  அவர்களே!!

கடந்த ஆறு ஆண்டுகளாக.உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் தான் இருந்தது.நான்  இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக இந்த வெற்றி முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்று கூறும்  அரசின் கூற்றை ஏற்றுகொள்ளவும் இயலவில்லைஇதுதான் உண்மை.

ஒரு கப்பல் நிறைய தெக்கம் பாக்கு வந்ததாம். ஒருவன் அந்த கப்பலில் ஏறி சென்று தனது பையில் உள்ள ஒரே ஒரு தெக்கம் பாக்கில் ஒரு பாதியை பிரித்து எடுத்து அந்த கப்பல் நிறைய உள்ள பாக்கு குவியலில் போட்டு விட்டு இந்த கப்பலில் உள்ள மொத்த பாக்கில் பாதி பாக்கு என்னுடைய பாக்கு என்று சொன்னால் அது எப்படியோ அப்படிதான் இதுவும் உள்ளது.பகுத்தறிவாளர்களே சிந்திப்பீர் ஒரு நிமிடம்.

மரம் வளர்ந்து இருக்கலாம்.கனிகள் பல  தந்து இருக்கலாம். ஆனால் விதை கலைஞர் போட்டது.அதுதானே உண்மை.

என்ன நான் சொல்றது. சரியா இல்லை தப்பா? நீங்களே சொல்லுங்க!!

No comments:

Post a Comment