உருப்படாது ஏன் ?
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கங்கள்.
இன்றைய தினம் நான் உங்களுக்கு தர உள்ள எனது "எண்ணத்தில் தோன்றியவை " பக்கமதில் என்ன கூற விழைகிறேன் என்றால் அதுதான் :-
" ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படவே உருப்படாது."
என்ற கருத்து பொதுவாக நம்மில் அனேக நபர்கள் இதற்கு எடுத்துகொள்ளும் விளக்கம் என்னவாக இருக்கும் என்றால் எந்த ஒரு வீட்டில் ஆமை என்றொரு பிராணி புகுந்தாலோ அல்லது
நீதிமன்றதின்மூலமாக கடனோ அல்லது அடமானமாகவோ வைக்கபட்ட எந்த ஒரு சொத்தும்/பொருளும் சரியான முறையில் பணம் செலுத்தி திருப்பவில்லைஎனில் அது ஏலம் அல்லது ஜப்தி இவைகளைப்பற்றிய அறிவிப்பு தருபவர் அமீனா என்பவர் அவர் எந்த ஒரு வீட்டில் நுழைந்தாரோ
ஆக இந்த இரண்டும் உருப்படாது என்று சொன்னார்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மை பொருள் அதுவன்று. ஆமை என்று சொல்லப்படுவது யாதெனின்:-
கல்லாமை,இல்லாமை,இயலாமை,பொறாமை,இதுபோன்ற ஆமைகள் புகுந்தவீடுகள் என்றுதான் சொல்லப்பட்டதே ஒழிய வெறும் ஆமை என்ற நான்கு கால் பிராணியைப்பற்றி மட்டிலும் சொல்லவில்லை என்பதே கற்று அறிந்த ஆன்றோர்கள் நமக்கு அருளிசென்ற உண்மையான விளக்கம்.
மீண்டும் நாளை அடுத்த "எண்ணத்தில் தோன்றியவை " பக்கத்தில் சந்திப்போமா நேயர்களே!
நன்றி! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
அமீனா என்பதை பற்றி ஏதாவது உள்ளதா?
ReplyDelete