Sunday 2 March 2014

சென்னை என்று ஏன் பெயர்வந்தது ? காரணம் தெரியுமா உங்களுக்கு ?










        பிஸ்மில்லாஹ் ஹிர்ரெஹ்மானிர் ரஹீம் !!   



அஸ்ஸலாமு அலேக்கும் !!                                                 



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 



கொடையாளனுமாகிய எல்லாம் வல்ல 



இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரை 



உச்சரித்து அவனை மனதுக்குள் வணங்கி, 



அதன்பின் தொழுது, "பிஸ்மில்லாஹ் " என்று 



சொல்லி, இந்தக் கட்டுரையை நான் எழுதிடத் 



துவங்குகின்றேன். இந்தக் கட்டுரை முழுவதும் 



மிகவின்  சுவையாகவும் இனிமையாகவும் 



உங்கள் அனைவருக்கும் தருவேன் என்று 



எண்ணுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.                     



அன்பர்களே !!                                                                         



முன்பு ஒரு காலத்திலே இந்த சென்னை என்று 



பிற்காலத்தில் பெயர் மாற்றம் செய்திடப்பட்ட 



நகரமானது முன்பு மதராஸ் பட்டணம் என்றேநம் 



அனைவராலும் அழைக்கப்பட்டு வந்திருந்தது 



அன்பர்களே. அப்போது திருப்பதி நம் வசம் 



இருந்தது. இந்த மதராஸ் ஆந்திராவின் வசம் 



இருந்தது. அது போலவே கன்னியாகுமரி, 



நாகர்கோவில் போன்ற அனைத்து பகுதிகளும் 



மலைமாநிலமான கேரளாவின் வசம் இருந்தது. 



அதன் பிறகு மொழிவாரி மாநிலம் 



பிரிக்கப்படுகின்ற பொழுது திருப்பதி 



ஆந்திராவிற்கும் அதற்குப் பதிலாக மதராஸ் 



நமக்கும் இதே போல் கன்னியாகுமரி, 



நாகர்கோவில் நமக்கும், நம்வசம் இருந்த 



மூனார், தேவிகுளம் பீர்மேடு, குமுளி போன்ற 



நகரங்கள் கேரளாவிற்கும் தாரைவார்க்கப் 



பட்டது. எப்படி கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை 



வார்க்கப்பட்டதோ அதுபோல. தமிழன் என்று 




ஒரு இனம் உண்டு. தனியே அதற்கு ஒரு குணம் 



உண்டு என்று சொல்வார்கள். அது என்ன குணம் 



என்று கேட்டால் அது தான் இளிச்சவாய்த்தனம் 



என்று சொன்னால் அதுவே மிகவும் பொருத்தம் 



நிறைந்த ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாகும்.   



 அப்படி மதராஸ் என்ற பெயருடன் அந்த நகரம் 



இருந்து வருகையில் அந்த நகரசபையின் 



தலைவராக திரு சென்னப்ப முதலியார் என்று 



ஒரு தர்மிஷ்டன் இருந்தார். மிகவும் நல்ல 



மனிதர். கணக்கில் அடங்காத சொத்துக்கள் 



உள்ளவர். அதுபோலவே இல்லை என்று 



வருவோர் அனைவருக்கும் இல்லை என்று 



சொல்லிடாமல் அவரவர் தேவை அறிந்து 



மனமுவந்து தர்மம் செய்து வாழ்ந்து வந்தார். 



தனது சொத்துக்களில் பெரும்பகுதியை இவர் 



மதராஸ் நகரசபைக்கு தானமாக எழுதித் தந்தார். 



இவரது தார்மீக,தர்ம குணத்தை அறிந்த அந்த 



நகரசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு 



தீர்மானத்தை அந்த நகரசபையின் பொதுக்குழுக் 



கூட்டத்தில் கொண்டு வந்தனர். தீர்மானம் என்ன 



என்றால்  இனிமுதற்கொண்டு இந்த நகரம் 



சென்னை என்று அழைக்கப்படவேண்டும் என்று 



இதை அப்போதைய ஆங்கிலேய அரசாங்கமும் 



ஏற்றுக்கொண்டது. அன்று முதல் அது சென்னை 



என்றே பெயர் மாற்றம் செய்திடப்பட்டு அதன் 



நாடு  சுதந்திரம் பெற்ற பின் (இப்போது 



நடப்பதுபோலவே)நீ எப்படி மாற்றுவது பெயரை ? 



அதை நான் அல்லவோ செய்திடவேண்டும்என்ற 



அடிப்படையில் சென்னை என்பது மீண்டும் 



மதராஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் 



பின் மாநிலத்திற்கு மதராஸ் மாநிலம் என்று 



இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் 



செய்திடப்பட்டு இப்போதுதான் கடந்த ஒரு 



அநேகமாக பத்து ஆண்டுகளாக மதராஸ் என்பது 



சென்னை என்று பெயர் மீண்டும் மாற்றம் 



செய்திடப்பட்டது. இந்தத் தகவல் உங்கள் 



அனைவரின் கனிவான கவனத்திற்கு !!                     





நன்றி !! வணக்கம் !!                                                                 





அன்புடன் !! மதுரை TR பாலு.

No comments:

Post a Comment