Friday 31 January 2014

சிரிப்புத்தான் வருகுதய்யா !! விஜயகாந்த் செயலைப் பார்க்கும்போது !!







உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான 



அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே!! 



உங்கள் அனைவருக்கும் வணக்கம். 



     "  சிரிப்புத்தான் வருகுதய்யா  "!!    



அன்பர்களே !!                                             



இன்றையதினம் தேசிய முற்போக்கு 



திராவிட கழகத்தின் நிறுவனரும் 



கருப்பு M.G.R. என்று தன்னைத்தானே 



குறிப்பிடுபவரும் திரைப்படநடிகரும் 



ஆன திரு A. விஜயகாந்த் அவர்கள் 



(த/பெ. மறைந்த அழகர்சாமி நாயுடு, 



மதுரை) விழுப்புரம் மாவட்டம், 



உளுந்தூர்பேட்டையில் அவர்களது 



கட்சியின் ஊழல் எதிர்ப்பு மகாநாடு 



நடைபெற இருப்பதாகவும், (இவர் 



சினிமாவில் நடிப்பதற்கு வாங்கும் 



பணம் முழுவதுமே 



வெள்ளைதானா? மேலும் இவரது 



கட்சியை  நடத்துவதே கடந்த 



தேர்தலில் செல்வி J  ஜெயலலிதா 



அவங்கட்டே இருந்து வாங்கின 



பலநூறுகோடிகள் 



இலஞ்சப்பணத்தில்தான் என்று 



ஊரில் பேசிக்கொள்கிறார்கள்) இந்த 



மாநாட்டிற்கு வருகை தர வேண்டும் 



என்று இந்த நாட்டினை ஊழலில் 



நனைத்துக் காயப்போட்டகாங்கிரஸ் 



கட்சி, மதவாதத்தை முன்வைத்து, 



வரலாற்றுச் சின்னமான அழகான 



பாபர்மசூதியை  இடித்து இந்தியத் 



திருநாட்டை கெடுத்த லஞ்ச 



லாவண்யத்தில் திளைத்திட 



பெரிதும் உதவி செய்த பாரதிய 



ஜனதா கட்சிக்கும் அழைப்பு 



விடுத்திருப்பதாக செய்தித் தாளில் 



படித்துடனே எனக்கு வந்ததுதான் 



கட்டுரைக்கு நான் தலைப்பாக தந்து 



உள்ளேன்.அந்த தலைப்பு இதோ இது 





      "  சிரிப்புத்தான் வருகுதய்யா   "     





அறிவும் ஆற்றலும் உள்ள 



தமிழர்களே !!  



கசாப்பு கடைக்காரன் 



ஜீவகாருண்யத்தைப் பற்றி பேசுவது 



போலத்தான் இதுவும்.                           



காமக்கொடூரன் பெண்களின் கற்பு 



பற்றிய மாநாட்டிற்கு அழைப்பு 



விடுவது போலத்தான் இதுவும்.             



விபச்சாரிகள் ஒன்றுகூடி 



ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வது 



எப்படி என்று புத்தகம் 



வெளியிட்டதுபோலத்தான் இதுவும். 



மாமியார்களை மதித்து அவர்களது 



பாதத்திற்கு பூஜைபண்ணியே 



அன்றாடம் எங்களது பணிகளைத் 



துவக்குவோம் என்று நாட்டில் உள்ள 



அனைத்து மருமகள்களும் ஒன்று 



கூடி சூளுரைத்தது போலத்தான் 



இதுவும்.                                                             



நாட்டில் உள்ள அனைத்து 



மாமியார்களும் ஒன்றுகூடி எங்கள் 



வீட்டிற்கு வந்த மருமகளும் 



எங்களுக்கு நான்பெற்ற மகளைப் 



போன்றவர்கள்தான்  அவர்கள்மீதும் 



அவர்கள் செய்திடும் வேலையில் 



எந்த ஓட்டை உடைசலும் சொல்லிட 



மாட்டோம் என்று மாமியார்கள் 



சொல்வதுபோலத்தான் இதுவும் !!       



உன்னையைத் தவிர வேறு எந்தப் 



பெண்ணையும் நான் எனது 



இருகண்களால்கூட பார்த்திட 



மாட்டேன்  என்று திருமணம் ஆன



அனைத்து ஆண்கள் இனமும் 



தங்களது மனைவிமார்களிடம் 



சத்தியம் செய்வது போலத்தான் 



இதுவும்.                                                             



அண்ணே சத்தியமாச் சொல்றேன் 



இந்த சாமானை நான் உங்களுக்கு 



மட்டும் அசல் விலைக்கே தாரேன் 



என்று ஒரு வணிகர் 



சொலவதுபோலத்தான் இதுவும் !!



கலப்படமே செய்வதில்லை எங்கள் 



சரக்குகள் அனைத்துமே சுத்தமான 



பலசரக்குகளே என்று அண்ணாச்சி 



கடைக்காரர்கள் அனைவரும் 



ஒன்றுகூடி முழங்குவது 



போலத்தான் இதுவும் !!                                                              



டாஸ்மாக் கடையில் உள்ள "சரக்கு" 



விற்பனையாளர் இன்முகத்துடனும் 



மரியாதையுடனும் நம்மை 



அன்புமுகத்துடன் வரவேற்று சரக்கு 



விற்பது போலத்தான் இதுவும் !!



ஏங்க , இந்தாங்க, போன மாசம் நீங்க 



செலவுக்குத் தந்த பணத்தில் நான் 



மிச்சம் செய்து சேர்த்தபணம் என்று 



இல்லத்தரசிகள் கணவனிடம் 



சேமித்த பணத்தினைத் திருப்பிக் 



கொடுப்பதுபோலத்தான் இதுவும் !!



திராவிட இனத்தின் உண்மையான 



தோழர்களே !! என் அருமைத் தமிழ் 



இனமே !! நீங்கள் அனைவரும் 



அமைதியாக அமர்ந்து தவறாமல் 



சிந்திப்பீர் !! செயல்படுவீர் !! தோழர் 



விஜயகாந்த் அவர்கள் செய்வது 



அழகா ? முறையா ? சரியா ? 



தர்மம்தானா? 



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன் மதுரை T.R.பாலு.

தொடர்ச்சி....பாகம்எண்.. 2. தி.மு.க.தலைவர் (எங்களுக்கும் நீங்கதான் தலைவர்)திரு. மு. கலைஞர் அவர்களே !!ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்றால் என்ன ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



இதை உரக்கச் சொல்வோம் 



இவ்வுலக்கு !!



இனம் ஒன்றாக, மொழி வென்றாக 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!



நம் வெற்றிப்பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!



எங்களின் இனமானத் தலைவர் 



கலைஞர் அவர்களே!!                    



என் பெயர் மதுரை T.R. பாலு. எனது 



வயது 6௦. தங்களை விடவும் நான் 



வயதில் ஏறத்தாழ 31 ஆண்டுகள் 



சிறியவன். நான் ஒரு தி.மு.க.வாக



இருந்தாலும்கூட  நான் இளம் 



வயதிலேயே " ஜோதிடம் "  என்னும் 



ஒரு அரிய கலையை கற்றவன். 



அதன்படி சில விஷயங்களை நான்



தங்களுடன் பகிர்ந்து கொள்ள 



விரும்புகிறேன் தலைவா.உத்தரவு 




தர தங்களை நான் வேண்டுகிறேன்.



தலைவரே தாங்கள் கடக இலக்னம்



இரிஷப ராசி. லக்னாதிபதி சந்திரன் 



உச்சபலம்பெற்றுருப்பதினால்தான் 




தாங்கள் மாநிலத்தில் மாபெரும் 



பதவியைவகித்தவர், வகித்திட




இருப்பவர். இராசியில் சந்திரன் 



உச்ச பலம் பெற்றதனால்தான் 



தாங்கள் இந்த 91 வயதிலும்கூட 



அழகாக மேலும் இளமையாகக் 



காட்சி அளிக்கிறீர்கள் தலைவா. 



தாங்கள் அமாவாசை 



அன்று பிறந்துள்ளீர்கள்.தங்களது 



ஜாதகத்தில் தனம்,வாக்கு,குடும்ப 



ஸ்தானாதிபதியாகிய சூரியன் அந்த 



ஸ்தானத்திற்கு 11ம் இடமாகிய 



இலாபஸ்தானத்தில் அமர்ந்து 



உள்ளதால்தான் தாங்கள் எதைத் 



தொட்டாலும் அதில் தங்களுக்கு 



ஏதாவது ஒருவகையினில் இலாபம் 



கிட்டாமல் போகவே போகாது. 



தங்களது ஜாதகக் கட்டத்தில் 



திரிதிய, விரையஸ்தானாதிபதியான 




புதன் லக்னத்திற்கு பத்தாம்இடத்தில் 



பகை  ஷேத்திரத்தில் 



அமர்ந்திருந்தாலும்கூட



நீசன் நின்ற இராசிநாதன் உச்சம் 



பெறின் நீசபங்க இராஜ யோகம் 




என்ற ஜோதிட முதுமொழிக்கு 




இணங்க தாங்கள் 




தமிழகத்தின் இராஜாவாகவே இறுதி 



மூச்சு உள்ளவரை வாழ்ந்திடுவீர்கள்.



சப்தம,(நான்காமிடம்)இலாப 



(பதினோராமிடம்)இவ்விரண்டிற்கும் 




ஸ்தானாதிபதியாகியசுக்கிரன் 



தங்களது ஜாதகக் கட்டமதில் 



பன்னிரெண்டாம் இடத்தில் தனது 




நட்பு வீட்டில் ஜோராக ஜம்மென்று 




அமர்ந்து உள்ளான். இந்த இடத்தை 




விரைய ஸ்தானம்என்றுஅரைகுறை 




ஜோதிடர்கள் கூறிடுவார்கள்.




ஆனால் அது உண்மை அல்ல.அந்த 




இடம் வெறும் விரையம் 




தருகின்ற இடம் மட்டும் அல்ல.



அயன (உணவு) சயன( நல்ல ஒய்வு )




ஸ்தான இடமும் அதுவே. 



இதுவும் ஒரு அதிபயங்கர 



ராஜ யோகமே. ஓரு மாநிலத்தில் 



வாழ்ந்திடும்  அத்தனை கோடிப் 



பேர்களுள் ஒருவர் அல்லது 




இருவருக்கு மட்டுமே 




இந்த யோகத்தை இறைவன் 



அளித்துள்ளான். 



அடுத்து தங்களது ஜாதகக் 



கட்டத்தில் ஐந்தாம் இடம் மற்றும் 




பத்தாம் இடத்தை பற்றி 




பார்த்திடுவோம். 




அதன் அதிபதி அங்காரகன் என்றும் 




பூமிகாரகன் என்றும் 




அழைக்கப்படும் செவ்வாய் ஆகும். 




இவன் உச்சம் பெற்று தனது 




நான்காம் பார்வையாக 




(தனது சொந்த வீடான மேஷத்தை)



லக்கினத்திற்கு பத்தாம்இடத்தையும் 




தனது ஏழாம் பார்வையாக 




லக்கினத்தையும் 



எட்டாம் பார்வையாக இரண்டாம் 



வீட்டினையும் பார்க்கின்ற 




யோகத்தைப் பற்றிச் சொல்ல 




வேண்டும் என்றால் அதற்கு இந்த 




நாளும் பத்தாது பல 




பொழுதுகளும் நிச்சயமாக பத்தவே 




பத்தாது தலைவா. எனவே 




தற்போதுள்ள தங்களுக்குப் 




பிரச்சனையே தங்களது 




மூத்த புத்திர பாக்கியம் ஆகிய 



திரு மு.க.அழகிரிதான். இந்தப் 




பிரச்சனை ஏன்,எப்படி, எதற்காக 




வந்தது என்பதைப் 




பற்றி எனது அடுத்த கட்டுரையில் 




நான் தங்களுக்கு விரிவாக, 




விளக்கமாகக் கூறிடக் கடமைப் 




பட்டு உள்ளேன் தலைவா. தயவு 




செய்து தாங்கள் அதுவரைபொறுத்து 




இருங்கள்.




நன்றி தலைவா !!



வணக்கம் தலைவா!!



அன்புடன் தங்கள் உண்மைத் 



தொண்டன் 



மதுரை T.R.பாலு.



(இருப்பு @ துரைப்பாக்கம் சென்னை 



6௦௦௦97). 



Sunday 26 January 2014

பெட்டி போனால் என்ன ? தாக்கோல் ( சாவி) என்கிட்டே தானே இருக்கு ? இது எப்படி இருக்கு !!








                   JUST FOR LAUGH ONLY


          சிரிப்பதற்கு மட்டும்!!


இரண்டு சேர நாட்டு 


நண்பர்கள்(மலையாளிகள்)பாண்டி 


நாட்டுக்கு (தமிழகம்)வந்தனர் 


வணிக விஷயமாக.வந்த வேலை 


முடிந்ததும் ஊர் திரும்பினர் 


தத்தமது பெட்டிகளுடன் அடுக்கு 


தொடர் வண்டியில்(ரயிலில்). அந்த 


ரயில் செங்கோட்டை வழியாக 


திருவனந்தபுரம் செல்ல உள்ளது. 


செங்கோட்டையில் ரயில் சிறிது 


நேரம் நிற்கும் போது இருவரும் 


தத்தமது பெட்டிகளை ரயிலில் 


வைத்துவிட்டு காபி அருந்த 


இறங்கி இரயில் நிலையத்தில் 


உள்ள கடைக்கு சென்றனர். பேச்சு 


சுவாரஸ்யத்தில் ரயில் கிளம்பி 


சென்றதை கவனிக்க மறந்த 


அவர்கள் காபி கடையை விட்டு 


வெளியே வந்து பார்த்தால் 


ரயிலை காணோம்.உடனே 


அவர்களில் ஒருவன் அவன் பெயர் 


கோவிந்தன்.


கோவிந்தன் :- எடோ சேட்டாஎந்தா 


இ அந்யாயம். ரயில் 


போயி.அதோட நம்ம பெட்டியும் 


போயி எண்ட குருவயூரப்பா.எந்தா 


இ மனுஷாளுக்கு வந்த 


சோதனை.இப்ப எந்து செய்யு? என 


வினவினார்.அதற்கு உடன் வந்த 


ரஷீத் பதில் சொன்னார்.எப்படி?


இப்படி:-


அப்பு மேனன் ”- எடோ எந்தா 


குழப்பம்


கோவி :- பெட்டி போயி.


அப்பு :- ஓ ! பெட்டி போயி.அது 


தன்னே குழப்பம். எந்தா ஒன்னும் 


பேடிக்க வேண்டா.பெட்டி போயி 


எந்தா தாக்கோல்இவ்விடந்தன்னே 


உண்டு!!

என சொன்னாராம். அதாவது 


பெட்டி போனால் என்ன.சாவி 


நம்மகிட்டதானே இருக்கு என 


சொன்னாராம்.


என்ன மதி நுட்பம்?


சிரித்து மகிழ்வோம்.


நன்றி வணக்கம்.



அன்புடன் மதுரை T.R.பாலு.