Thursday 28 February 2013

மதுரை VS சென்னை.

பேச்சில் இத்தனை விதமா ? 


அனைவருக்கும் வணக்கம். எனக்கு வயது 59. எனக்கு நினைவு தெரிந்து புரிந்து கொள்ள ஒரு  பத்து ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் மதுரை மாநகரில் முத்தமிழ் வளர்த்த சங்கத்தமிழ் கண்ட மாமதுரை நகரிலே வாழ்ந்துவந்த காரணத்தினால் தமிழை சுத்தமாக பேசும் திறன் என்பது இயற்கையாகவே அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட நான் இங்கு சென்னை வந்து இங்கும் பேசப்படும் மொழி கண்டு நெஞ்சில் உதிரம் வடிய கண்ணீர் வடித்த நாட்கள் பல உண்டு. அந்த மதுரைத்தமிழ்  மற்றும்சென்னை தமிழ் இவை இரண்டையும் ஒருங்கே  ஒப்பிட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.கண்டு அகம் மகிழ்க!!


மதுரை தமிழ்                                                       சென்னை தமிழ்  

அன்னை                                                                              ஆத்தா 

அப்பா                                                                                    நயினா

வலது கை                                                                         சோத்தாங்கை 

இடது கை                                                                           பீச்சாங்கை

உட்கார்                                                                                 குந்து 

ஜலதோஷம்                                                                     ஜல்ப்பு 

தெரியவில்லை                                                               தெல்லை 

இத்துனூண்டு                                                                  தம்மாத்தூண்டு 

குழந்தை                                                                              கொயேந்தை 

காலி ஆகி விட்டது                                                         கால்யாபோச்சு 

அழுகை                                                                               ஒப்பாரி

செத்த ஆளு                                                                       சாவு கிராக்கி 

சட்டை                                                                                 சொக்கா 
      
கஷ்டகாலம்                                                                     கஸ்மாலம் 

பார்த்தா பிரமாதமாக                                                   பாத்தா பஜாமா 

இதனோடு                                                                           தொனோடு 

முகத்தை                                                                           மூஞ்சியை 

சோம்பேறி                                                                        சோமாறி 

கழுதை                                                                               கயிதே 

வீட்டிலே                                                                           வூட்டாண்டே 

அசிங்கம்                                                                            நாராசம் 

அன்பர்களே இன்னும் இதுபோல ஏராளமான தூய்மையான சென்னை தமிழ் 

உச்சரிப்புகள் உள்ளன.எங்கே அவற்றை நான் குறிப்பிட ஆரம்பித்தால் நான் 

கற்ற சங்க தமிழ் எனக்கு மறந்துபோய் விடுமோ என்ற அச்சத்தில் இந்த 

அளவுடன் விடைபெறுகிறேன்.வாழ்க சென்னை தமிழ்.!! வணக்கம். அன்புடன் 

மதுரை T.R.பாலு.

Wednesday 27 February 2013

தமிழனுக்கு இழைத்த அநீதி!

வாழ்க தமிழ் !!  வெல்க தமிழ் இனம் !! 

தமிழனுக்கு கிடைத்த அநீதி 



அனைவருக்கும் வணக்கம்.நேற்றைய தினம் நமது தலைநகர் புது தில்லியில் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை தமிழர் பற்றிய சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் மிகுந்த ஆவேசத்துடனும் மனம் நிறைந்த சோக வடிவுடனும் தத்தமது கருத்துக்களை விவாதத்தின்போது பதிவு செய்த காட்சியினை தொலைகாட்சியில் நேரடி ஒளி பரப்பு என்னும் நிகழ்ச்சியில் பார்த்தேன்.வழக்கம்போல இந்த நாட்டின் தற்போதைய வெளி உறவுத்துறை அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் அவர்கள் வெண்ணை நிறைந்த பாத்திரத்தில் விளக்கெண்ணையை விட்டு குழப்பியதை போல ஏதேதோ சொன்னார். என் மனம் கடந்த கால நிகழ்வுகளை காண சற்று பின்னோக்கிப் பயணித்தது.

அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் நாட்டில் (தற்போதைய வங்க தேசம்)தற்போது இலங்கையில் நடைபெற்றுவருவது போல அன்னாட்டிலும் இனப் பிரச்சனை இன ப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்த காலம். அப்போதைய நம் நாட்டு பிரதமர்  மறைந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள் மிக துணிச்சலுடன் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்துடன் போரிட்டு அந்நாட்டு மக்களை காப்பாற்றி தனி நாடு அமைத்து தந்தார்.அந்த நாடு தான் இன்றைய வாங்க தேசம். ஆனால் இன்று அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் காங்கிரஸ் மத்திய அரசு ஏனோ தானோ என செயல்பட்டதினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு மண்ணோடுமன்னாகப் போனதுதான் உண்மை.
 மத்திய அரசே.அது என்ன வங்க தேசத்துக்கு ஒரு நீதி.இங்கே இலங்கைக்கு ஒரு நீதி. அப்போது எனது அரசில்  ஆலோசகர் நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை,அவர் என்ன  சொன்னார். கிழக்கு பாக்.மக்கள் பேசுவது இந்தி மொழி அதனால் அங்கே நீதி கிடைத்தது.இங்கே இலங்கையில்செத்த செத்து கொண்டு இருக்கிற,இனிமேல் சாகப்போகிற மக்கள் பேசுவது தமிழ் மொழிதானே.அவன் என்றும் இளிச்ச வாயன் தானே.சூடு சொரணை இல்லாதவன் தானே என்று மத்திய அரசு எண்ணியதால் இங்கே இலங்கையில் அந்த தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பிய தமிழ் ஈழம் கிடைக்கவில்லை. வங்கத்து மக்களுக்கு ஒரு நீதி.தங்க தமிழனுக்கோ கிடைப்பது அநீதி. காலம் இப்படியா போய் விடாது.என்றாவது ஒரு நாள் நீதி கிடைக்கும்.தனி தமிழ் ஈழம் மலரும் அந்த நாளும் விரைவில் வரத்தான் போகிறது.அதுவரை பொறு மனமே பொறு.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாராளுமன்ற இடம் கூட கிடைக்காது.இது தமிழன் மத்திய அரசுக்கு திருப்பி கொடுக்கும் தர்ம அடி.பாவம் தமிழக காங்கிரஸ்.பரிதாபம் அவர்கள் நிலை.ஆண்டவனால் கூட அந்த கட்சியை காப்பாற்ற முடியாது! நன்றி.வணக்கம்.

அளப்பது என்பது அப்படி?

குணம் எப்படி இருக்கும்? 

அனைவருக்கும் வணக்கம்.இன்றைய தினம் நான் உங்களில் அனைவரின் சிந்தனைக்கும் அளிக்கும் விருந்து! "குணம் எப்படி இருக்கும்" என்பதுவே!

பொதுவாக மனித இனத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணம் இருப்பது இயற்கை.அதை எப்படி அளப்பது?எப்படி எடை போடமுடியும்?இத்தகைய கேள்விகளுக்கு கீழ்க்கண்ட பாடல் தரும் விளக்கம் தான் என்ன?
முதலில் பாடலை பாப்போம்:-

                       நீரளவே ஆகுமாம் நீராம்பல்! 

                       தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு!!

                        மேலைத்தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்!!!
  
                        குலத்தளவே ஆகுமாம் குணம்!!

என்ன ஒரு அருமையான பாடல்.குளம் நிறைய தண்ணீர் உள்ளது.அந்த குளத்தில் நீர் எவ்வளவு உயரம் உள்ளதோ அந்த உயரம் வரை வளர்ந்து தாமரை பூ பூக்கும்.

அதுபோல நாம் எவ்வளவு கல்வி கற்று அதில் தேர்ச்சி பெறுகிறோமோ அந்த அளவு நமது மூளையில் நுண்ணறிவு இருக்கும்.

அதுபோல முந்திய பிறவியில் நாம் எவ்வளவு தானம்,தர்மம் புண்ணியம் செய்து உள்ளோமோ அந்த அளவுக்குத்தான் நமக்கு செல்வநிலை என்பது இந்த பிறவியில் இருக்கும்.

அதுபோல நாம் பிறந்துள்ள குலத்தின் அடிப்படையில் அந்த சிறப்பின் அடிப்படையில் அந்த பிரிவின் தகுதிப்படி மட்டுமே நமக்கு குணம் என்பது அமையும் என சங்க கால பாடல்கள் நமக்கு கூறி சென்றுள்ள கருத்துக்கள் மனித குலம் மறையும்வரை மாறுவது இல்லை என்பதே ஆன்றோர்கள் வாக்கு!மீண்டும் நாளை அடுத்த "எண்ணத்தில் தோன்றியவை"நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு. 
  
                       
                         




Monday 25 February 2013

குடிப்பழக்கம்

குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்!! 

வணக்கம்.இன்று திரைப்படங்கள் அனைத்திலும் முதலில் மேலேசொன்ன வாசகத்தை காண்பித்துவிட்டு பிறகு படம் முழுவதும் ஒரே குடிமயமே எல்லா காட்சிகளும்.இது என்ன நாகரீகமோ?தெரியவில்லை.
அரசாங்கம் விலை இல்லா (இலவசம் என்றால் கேவலமாம்)பொருட்கள் வழங்கி வருகிறது.அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும்.விபரம் பாருங்கள்:-
                          மிக்சி ,, ,, ,, ,,ரூ. 1,௦௦௦-௦௦
             கிரைண்டர் =====ரூ.  3,000-00
              மின் விசிறி ...........ரூ. 2,௦௦௦ -௦௦ ஆக மொத்தம் ரூ.6,௦௦௦-௦௦.
இலவச அரிசி மாதம் 
2௦ கிலோ x ரூ.8.00வீதம் 
ரூ.160-00x60 மாதம்............ரூ.9,600-00 ஆக மொத்தம் ஏறத்தாழ ருபாய் 16,000-00 அரசின் மூலமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க படுகிறது. இப்போது வேறு ஒரு 
கோணத்தில் பாருங்கள்.
ஒரு குடும்ப அட்டை உள்ள குடுமத்தில் ஒருவர் குடிக்கிறார் என்று வைத்து கொள்வோம்.ஒரு நாள் ரூ.1௦௦/-௦௦ வீதம் ஒரு மாதம் ரூ.3,௦௦௦-௦௦ ஒரு வருடம் ரூ.36,௦௦௦-௦௦ ஐந்து வருடங்களுக்கு ரூ.1,80,000-00.
மொத்தத்தில் வெறும் ருபாய் 16,௦௦௦-௦௦ கொடுத்து விட்டு அந்த குடும்பத்தில் இருந்து அரசாங்கம் எவ்வளவு சம்பாதிக்கிறது பாருங்கள் நேயர்களே!இந்த இலவசங்கள் நமக்கு தேவையா?  குடியும் அவசியமா?சிந்திப்பீர்.செயல்படுவீர்.                                  

Sunday 24 February 2013

MEANING FOR ISLAM

DO YOU KNOW THIS? 



Why the religion of Muslims called as 

"I S L A M"


Every my Muslim Friends are known their FIVE MUST DUTIES.
They are 
1) To pronounce   the  Laa Ilaaha Illalla-Mohammed Razoolilla.
2) Five time prayers every day.
3) Every year  FASTING during Ramzaan Month.
4) Giving donations to the poor who are suffering for food,cloths
    and homes at 2.5% of their annual income.
5) After completion of their life duties they must go to Saint Mekka.
For my Muslim Friends the day starting only in Night time.During that time prayer is called as:-
     
                Isshaa.     then
                Subbag     then
                 Lohar      then
                 Azzar       then
                 Maharib.
Now you regularize the first alphabet of each time prayer.
  I  S  L  A  M
Oh what a surprise! Now we got the Answer.
This is my own INVENTION. You all are requested to recognize the FACT.OK with kind regards. T.R.BALAKRISHNAN.