Friday 14 March 2014

தம்பி !! " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் " இந்த வாசகத்தின் உண்மைப் பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?








     பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் 



                          ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!             



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய எல்லாம் 


வல்ல " அல்லாஹ்வின் " அன்புக் 


கருணையினால் மட்டுமே இந்தக் 


கட்டுரை உங்களுக்குப் படித்திடக் 


கிடைத்து உள்ளது அன்பர்களே !!       



நம் தாயகமாம் தமிழகத்தில் உள்ள 



அரசியல் கட்சிகளுள் தலைவர்கள் 



பலமும் தொண்டர்களின் சக்தியும் 



ஒருங்கே அமையப்பெற்றுள்ள ஒரே 



ஒரு இயக்கம்தான் திராவிட 



முன்னேற்றக் கழகம் ஆகும். அதன் 



நிறுவனர் தலைவர் பேரறிஞர் 



C.N.அண்ணாத்துரை ஆவார். ஒரு 



நாளைக்குஒரேஒருவேளைமட்டுமே 


உணவு உட்கொள்ளும் வழக்கத்தை 



இவர் வெகுபல ஆண்டுகளுக்கு முன்



தனது வாழ்வினில் கடைப்பிடித்து 



வாழ்ந்து வந்தவர். பகல் 



மணியிலிருந்து இவரது உறக்கம் 



ஆரம்பம் ஆகும். சரியாக இரவு எட்டு 


மணிக்கு விழித்திடும் பழக்கம்உள்ள 



இவர் அதன் பின்னர் தன்னைத்தயார் 



செய்து பொதுக்கூட்டங்களுக்குச் 



சென்று உரைநிகழ்த்தி அதன் பின் 



அறைக்குத்திரும்பும் இவர் இரவில்  



11 மணிக்குத் துவக்கிடும் சீட்டு 



விளையாட்டு (ரம்மி-32௦) என்பது 



மறுநாள் பொழுது விடிந்து அதன் 



பின்பும் நீடித்து பகல்12 மணி வரை 



சீட்டு விளையாட்டுத்தான். அப்படி 



விளையாடும்போது (ஒரு குழுவில் 6 



நபர் முதல் 9 பேர்கள் வரையிலும் 



இருப்பார்கள்) அப்படி விளையாடி 



வரும்போதுஒருகை கலைத்துப்



போட்டு அடுத்த கை அதனை எடுத்து 



விளையாடும் போது உடனே அடித்து 



விடுகிறார்  என்று  வைத்துக் 



கொள்ளுங்கள். இந்த அடியை சீட்டு 



விளையாட்டு நிபுணர்கள் என்ன 



சொல்வார்கள் என்றால் GATE TICK 



என்றே அழைப்பார். அப்படி ஒருவர் 



அடித்திடும் போது எஞ்சிய எட்டுப் 



பெரும் சுத்தமக full தான். அதாவது96 



பாயிண்டுகள் தந்ததாகக் 



கருதப்படும். அந்த நேரத்தில் 



எதிர்த்து விளையாடும் ஒருவர் 



போக ஏனைய வீரர்கள்  மன 


ரீதியாகச் சோர்ந்துவிடுவார். 



அப்போது தம்பி !!நீ !! கலங்கிடாமல் 



இரு !! இப்போது உனக்குத் தேவை --



உன்னிடம்இருந்திடவேண்டியதுஇது:



அதுதான் தம்பி !!                                     



         "  எதையும் தாங்கும் இதயம்  "  !!                 


இந்த மன நிலை இருக்கும் 



வரையில் நீ எந்தவிதமான 



இக்கட்டையும் சந்திக்கும் ஆற்றல், 



வல்லமை உனக்கு உண்டு.எனவே நீ



தொடர்ந்து முயற்சித்தால் எளிதில் 



எப்படியும் வெற்றி பெற முடியும். 



அதனால்தான் தம்பி நான் 



உங்களக்கு இந்தத் தாரக 



மந்திரத்தை உபதேசம் 



செய்கின்றேன் என்றாராம்பேரறிஞர் 



அண்ணா.அதன்படிநாம்வாழ்வோமா.                                        


நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment