Monday 10 March 2014

மனித மனம் !! அதன் உள்ளேதான் எத்தனை வகையான குணங்கள் அடங்கி உள்ளது ? மறைந்த பொதுவுடமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பார்வையிலே !!






பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் 



                          ரஹீம் !! 



அஸ்ஸலாமு அலேக்கும் !!                   



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய 


அல்லாஹ்வின் கருணையால் 


இந்தக்கட்டுரை இங்கே உங்கள் 


அனைவருக்கும் எழுதிடப் 


படுகின்றது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                             



குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 


என்றொரு கருத்து இங்கு வெகு 


காலமாக உலவிக்கொண்டுதான் 


உள்ளது. ஆனால் அவனிடம் இந்த 


குரங்கு குணம் மட்டும் அல்ல, 


இன்னும் எத்தனைவகையான 


குணங்கள் இந்த மனிதனுள் அடங்கி 


இருக்கிறது என்பதனை மறைந்த 


பொதுவுடமைக் கவிஞர் 


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 


தனது இந்த பாடலில் வெகு அழகாக 


சித்தரித்துள்ளார். இதோ அந்த 


பாடல். இடம் பெற்ற படம் புரட்சி 


நடிகர் என்று முத்தமிழ் அறிஞர் 


தலைவர் கலைஞர் அவர்களால் 


பட்டம் சூட்டப்பட்ட மறைந்த M.G.R. 


நடித்து அந்தக்காலம் வெளிவந்த 


" சக்கரவர்த்தித் திருமகள் "  என்ற 


திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் 


பாடல் இங்கே கீழே தரப்பட்டு 


உள்ளது. அதனை நீங்கள் படித்து 


மகிழ்ந்திடலாம் அன்பர்களே !!         




உறங்கையிலே பானைகளை 


உருட்டுவது பூனைக் குணம் !!       


காண்பதற்கே உருப்படியாய் 


இருப்பதெல்லாம் கெடுப்பதுவே 


குரங்கு குணம் !!                                         


ஆற்றில் இறங்குவோரைக் கொன்று 


இறையாக்கல் முதலைக்குணம்.              


                            ஆனால்                                 


இத்தனையும் மனிதரிடம் 


மொத்தமாய் வாழுதடா !!                     



மனிதன் பொறக்கும்போது பொறந்த 


குணம் போகப் போக மாறுது !!             


எல்லாம் இருக்கும்போது பிரிந்த 


குணம் இறக்கும்போது சேருது !!


                                 (மனிதன் பொறக்கும்)


பட்டப்பகல் திருடர்களை 


பட்டாடைகள் மறைக்குது !! -ஒரு 


பஞ்சையைத்தான்  எல்லாம் சேர்ந்து 


திருடன் என்றே உதைக்குது !!


                                (மனிதன் பொறக்கும்) 


காலநிலைய மறந்து சிலது 


கம்பையும் கொம்பையும் நீட்டுது !!


புலியின் கடுங்கோபம் 


தெரிஞ்சிருந்தும்  வாலைப் புடிச்சு 


ஆட்டுது !!


வாழ்வின் கணக்குப் புரியாம ஒன்னு 


காசைத்தேடிப் பூட்டுது !!


ஆனா காதோரம் நரைச்ச முடி கதை 


முடிவைக்காட்டுது !!                           


 

                             (மனிதன் பொறக்கும்)



புரளிகட்டிபொருளைகட்டும்சந்தை!! 


பச்சைப் புளுகை விற்று  சலுகை 


பெற்ற மந்தை !!


இதில் போலிகளும் காலிகளும் 


பொம்மலாட்டம் ஆடுகின்ற 


விந்தை!! 


சொன்னால் நிந்தை !!



உப்புக்கல்லை வைரம் என்று 


சொன்னால் 


நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு 


முன்னால் !!


நாம் உளறி என்ன ?கதறி என்ன ?


ஒன்றுமே நடக்க வில்லை !!


தோழா !!  ரொம்ப நாளா !!                                             


அன்பு உள்ளங்களே !! எப்படி நமது 


பொதுஉடமைக் கவிஞர் அன்பர் 


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 


இந்த சமூகத்தை, அதில் ஒளிந்து, 


மறைந்து,கிடக்கின்றஉண்மைகளை 


வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார் 


இந்தப் பாடலில் என்று பார்த்தீர்களா 


நேயர்களே !!                                           



மீண்டும் நாம் அடுத்த "எண்ணத்தில் 


தோன்றியவை " பதிவில் 


அனைவரும் சந்திப்போம்.                 


நன்றி !! வணக்கம் !!                                 



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment