Friday 30 August 2013

பிழைமொழியாகிப்போன பழமொழிகள்--பாகம் 2. (மறு பதிப்பு)




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!




இதை உரக்கச் சொல்வோம் 




உலகுக்கு !!                           



இனம் ஒன்றாக, மொழிவென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!



நம் வெற்றிப்பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து படைப்போம் 



விண்ணுக்கு !!





பழமொழிகளா அல்லது 





பிழைமொழிகளா?


அனைவருக்கும் வணக்கம். 


மேற்சொன்ன தலைப்பில் 


ஏற்கனவே நான் அளித்த 


விளக்கத்தை நேயர்கள் படித்து 


இருப்பீர்கள் என்று 


கருதுகிறேன்.அந்த வரிசையில் 


மேலும் ஒன்று.


 "பந்திக்கு முந்து! படைக்கு பிந்து" !!


இந்த பழமொழிக்கு பொதுவாக 


நம்மில் அநேகர் நினைக்கும் 


அர்த்தம் என்னவென்றால்திருமண 


மற்றும் சுப விசேடங்கள் நடக்கும் 


வீட்டில் உணவு அருந்தும் நேரம் 


வரும்போது முதல் பந்தியில் 


அமரவேண்டும், அதுபோல 


சண்டையிடும் சூழ்நிலை வந்தால் 


கடைசி வரிசைக்கு பிந்தவேண்டும் 


என்றே நாம் இதுகாறும் பொருள் 


கொண்டு வருகிறோம்.ஆனால் 



இந்த வாசகத்திற்கு,பொருள் 


அதுவன்று. உண்மை அர்த்தம் 


என்னவென்றால், பந்திக்கை 



முந்து!! படைக்கை பிந்து! 

அதாவது பந்தியில் அமர்ந்து 


உணவு உண்ணும்போது 


கைமுந்தவேண்டும்.அப்போதுதான் 


உணவு வாய்க்கு செல்லும். 


படைக்கு (போருக்கு) 


செல்லும்  கை பிந்தவேண்டும் 


அப்போதுதான் நம்மால் 


எறியப்படும் ஈட்டியானது வெகு 


வேகமாக சென்று எதிரியை 


தாக்கும் என்று சொன்ன 


பழமொழியை நாம் இதுவரை 


தவறாக பொருள் கண்டுவந்தோம். 


இனிமேலாவது சரியான 


பொருள்கொண்டு 


புரிந்துகொள்வோம். பிழைமொழி


ஆகிப்போன பழமொழிகளின் 


பட்டியல் இன்னும் தொடரும். 


நன்றி !! 


வணக்கம் !!. 


அன்புடன் மதுரை T.R.பாலு.

 



Thursday 29 August 2013

வழுக்கைத் தலையும் பிறர் நகைக்கும் நிலையும் --ஒரு சிந்தனைக் கண்ணோட்டம்-(மறுபதிப்பு)





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் ஒன்று எடுப்போம்


விடிவுக்கு!!


நம் வெற்றிப்பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு !!


உலகெங்கிலும்வாழ்ந்துவரும்எனது 


உயிரினும் மேலாக நான் போற்றி 



வணங்கி வரும் என் அன்புத் தமிழ் 


உடன் பிறப்புகளே !!


உங்கள் அனைவருக்கும் எனது 


சிரம் தாழ்ந்த, கரம் குவிந்த, 


இதயம்கனிந்தகாலை வணக்கங்கள் 


இன்று நான் உங்கள் அனைவரின் 


பார்வைக்கும் படைக்கும் விருந்து 


"வழுக்கை தலையும் பிறர் 

நகைக்கும் நிலையும்" என்னும் 

தலைப்பினில் வெளி வருகிறது.

இந்தக் கட்டுரை நான் ஏற்கனவே 

இந்த ஆண்டு ஏப்ரல் திங்கள் 2ம் 

தேதி உங்களுக்கு வழங்கிய 

ஒன்றுதான். இருந்தாலும் கூட 

கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள 

விஷயங்கள் நல்ல சிந்தனைக்கு 

உரிய ஒன்று என்பதாலும் மேலும்

இதுவரை இந்தக் கட்டுரையை 

படிக்காமல் இருக்கும் அன்புத் 

தமிழ் நெஞ்சங்களுக்காக இதனை 

நான் உங்கள் அனைவரின் 


பொதுவான அனுமதியோடு 


மீண்டும் படைப்பதில் மட்டட்ற 


மனமகிழ்ச்சி அடைகிறேன் என் 


அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!


இப்போதுநாம்கட்டுரையின்உள்ளே 


செல்வோமா ? . 


பொதுவாக ஆண்களில் நூறு 



பேர்களை எடுத்துகொண்டால் 



அவர்களில் முப்பது வயது முதல் 



நாற்பது வயதிற்குள்ளாகவே 



நாற்பது ஐம்பது 


விழுக்காடுகளுக்குமேல்தலையில் 

 

வழுக்கைவிழுவது என்பது


தவிர்க்க முடியாத ஒன்று  


என்னும்நிலைதான் இன்றுநாட்டில் 


காணப்படுகிறது. இதற்கு மூல 


காரணம் என்னவென்று ஆராய்ந்து 


பார்த்தால் அதற்கு மூல காரணம் 


பரம்பரை என்பது தொண்ணூறு 


சதவிகிதம்  மற்றும் பூச்சி 


தாக்குதலால் முடிகொட்டி 


அதன்காரணமாக வழுக்கை 


விழுவது என்பது எஞ்சிய பத்து 


சதவிகிதம் என்று 


ஆராய்ச்சியாளர்கள் எடுத்த 


ஆய்வுகளின்  முடிவில் 


சொல்லப்பட்டுள்ளது.


இந்த வழுக்கைநிலையை பற்றி 


சம்பந்தப்பட்டோர் யாரும் 


கவலைப்படத்தேவை இல்லை.


ஏன் என்றால் ஆங்கிலேயர்கள் 


வழுக்கை பற்றியும் நரைத்த நிறம் 


கொண்ட முடியை பற்றியும் 


கூறியுள்ள கருத்து மிகமிக 


முக்கியமானது மட்டும் அல்ல 


அன்பர்களே !! கருப்பு முடி 


கொண்டோரும், சுருட்டை முடி 


கொண்டோரும், தலையில் 


வழுக்கை என்பது சிறிதுஅளவுகூட 


இல்லாது முழுக்க முழுக்க முடி 


நிறைந்து உள்ளோரும் படிக்க 


வேண்டிய ஒன்று :-

1)       BOW THE BALD HEAD !!

2)      RESPECT THE GREY HAIRS !!

மேலே சொன்ன வாசகத்துக்கு 


அர்த்தம் என்னஎன்றால் வழுக்கை 


தலைக்கு, தலைவணங்கு.நரைத்த 


முடிக்கு மதிப்பு கொடு என்று 


பொருள். ஏன் ஆங்கிலேயர்கள் 


இந்த அளவிற்கு 


வழுக்கைதலையர்களுக்கும் 


நரைத்த முடிஉடையோர்களுக்கும் 


முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் 


என்று சொன்னால் அதற்கு 


காரணம் வேறு ஒன்று இல்லை 


அன்பர்களே. வழுக்கைதலை 


உடையவர்களிடம் எதையும் 


சாதிக்கும் அனுபவம் இருக்கும். 


நரைத்த முடி உடையோர்களிடம் 


எப்பேர்பட்ட செயலையும் செய்து 


முடிக்கின்ற ஆற்றல் இருக்கும் 


என்ற காரணத்தை 


ஆங்கிலேயர்கள் ஆராய்ந்து அதன் 


பின்னரே நான் மேலே குறிப்பிட்ட 


வாசகங்களை பதிவு 


செய்திருக்கிறார்கள் என்று 


சொன்னால் அது 


மிகைப்படுத்தப்பட்ட 


வாக்கியம்அல்ல எனது அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!


எனக்கு தெரிந்த  ஒரு டயர் 


புதுப்பிக்கும் நிறுவன விளம்பரம் 


என்ன சொல்கிறது என்று 


சொன்னால் :-


உங்கள் தலையில் வழுக்கை 


இருந்தால் அறிவு அதிகம் !!


உங்கள் டயரில் வழுக்கை 


இருந்தால் ஆபத்து அதிகம்.!!


உலகின் மிகச் சிறந்த 


சிந்தனையாளர்கள், பழுத்த 


அரசியல்வாதிகள் (நம் தமிழ்இனத் 


தலைவர் திரு மு.கருணாநிதி 


அவர்களைப் பற்றி இங்கே 


என்னால் குறிப்பிடாமல் இருக்க 


முடியாது)மேதைகள்,அறிவுஜீவிகள், 


இவங்க எல்லாருக்குமே ஒன்று 


தலை வழுக்கையாக இருக்கும் 


இல்லை என்றால் நரைத்த முடி 


உடையவர்களாக அவர்கள் 


இருப்பார்கள்..அதனாலே நம்மில் 


உள்ள வழுக்கைத் தலையர்களும் 


நரைத்த முடி உடையவர்களும் 


எந்த காலத்தும் எந்த 


சூழ்நிலையிலும் இந்த குறைகளை 


நினைத்து நம்மில் யாரும் எவரும் 


கவலைப்படக்கூடாது இந்த அம்சம் 


தானாக வருவது !!.இயற்கைநமக்கு 


சீதனமாகத்  தருவது !!. 


சரி கடைசியாக ஒரு கருத்து.


ஏன் சார்.மதுரை T.R.பாலு சார் 


உங்களுக்கு ஏன் இவ்வளவு 


அக்கறை ? வழுக்கைதலையை 


பற்றியும் நரைத்த முடிதனை 


உடையவர்களை பற்றியும் 


உங்களுக்கு என்ன ?  என நீங்கள் 


கேட்பது எனது செவிகளில் 


விழாமல் இல்லை .ஏன் என்றால் 


நான் திராவிட இனத்தின்தலைவர் 


முத்தமிழ் அறிஞர்  தமிழக 


அரசியல் வரலாற்றில் இப்போது 


உள்ள மூத்த முதுபெரும் தலைவர் 


திரு கலைஞர் மு.கருணாநிதி 


அவர்களின் அடிச்சுவட்டில் நெறி 


பிறழாமல் எனது தமிழ் 


கருத்துக்களை பதிவு செய்திடும் 


பழக்கம் உள்ளவன். அது மட்டும் 


அல்ல. தலைவர் வசனம் எழுதிய " 


" பராசக்தி " திரைப்படத்தில் 


நீதிமன்ற காட்சியில் நடிகர்திலகம் 


சிவாஜி ஒரு வசனம் பேசுவார். 


"ஆகாரத்திற்காக தடாகத்தில்உள்ள 


அழுக்கை சாப்பிடுகிறதே, மீன், 


அதனுடைய பொது நலத்திலும் 


சுயநலம் கலந்து உள்ளது,என்று 


தலைவர் கலைஞர் அவர்கள் 


அதில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க 


வசனம் ஒன்றினைப் பதிவு செய்து 


இருப்பார்கள். 


அது போலவே :-



எனக்கும் தலை வழுக்கை தான். 


(இது எப்படி இருக்கு)


(16 வயதினிலே ரஜினி ஸ்டைல்)


நன்றி!!வணக்கம்.!.


அன்புடன் மதுரை TR. பாலு.