Saturday 8 March 2014

பிறந்தவுடன் தாயைக் கொன்றுவிட்டு ஜெனிக்கும் இனங்கள் எவை ? எவை ?






துணிந்துநில் !!                                     தொடர்ந்துசெல் !!

 

                       தோல்வி கிடையாது தம்பி !!



உள்ளதைச் சொல் !!                         நல்லதைச் செய் !!  


                        தெய்வம் இருப்பதை நம்பி !!  




       பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்


  

                                ரஹீம் !!                                                                                         


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் 


திருப்பெயரை வணங்கி,தொழுது, 


மனத்தில் பூஜித்து, நான் இந்தக் 


கட்டுரையை  எழுதுகின்றேன்.





உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற எனது 


அன்புத்தமிழ்நெஞ்சங்களே/உடன்பிறப்புகளே !!



உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 


வாழ்த்துக்கள்.அந்த வாழ்த்துக்களோடு 


இணைந்த இதயம் கனிந்த நல்வணக்கங்கள் !!   


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணை 


மிகுந்த அன்பினால், இந்த கடலால் சூழப்பட்ட 


உலகமதில், படைக்கப்பட்ட அனைத்து ஜீவ


இராசிகளுள், பிறக்கும்போதே தாயை, தன்னை 


சுமந்து பெற்ற அந்த உத்தம குலத் திலகத்தை 


கொன்று இந்த உலகத்தைவிட்டே அனுப்பியபின் 


ஜெனிக்கும் இனங்கள் எவை ? எவை?                         



அன்பர்களே !!                                                                           


இதுதான் இன்றைய கட்டுரையின் தலைப்பு 


ஆகும்.                                                                                           



இந்த விஷயத்தை பற்றி விரிவாகவும் அதே 


சமயம் சற்று விளக்கமாகவும் ஆராய்ந்து தனது 


நூலான " சிலப்பதிகாரம் " என்ற ஐம்பெரும் 


காவியங்களுள் ஒன்றினில் இளங்கோஅடிகளார் 


மிகத் தெளிவாகவே குறிப்பிட்டு இருப்பார். இதை 


மாற்றான் ஒருவன் பெற்ற பெண்ணின்மேல்/


கன்னியின்மீது (ஏற்கனவே திருமணமாகி 


மனைவியோடு வாழ்ந்துவரும் ஒரு 


ஆடவனுக்கு) ஆசை/பிரேமம்/காதல் வரும்நேரம் 


எப்போது என்ற அந்த யதார்த்தமான 


சிந்தனையுடன் ஒப்பிட்டு இளங்கோ அடிகளார் 


மிக அழகாக சித்தரித்து எழுதி இருக்கும் அந்த 


வரலாற்றுச் சிறப்புமிக்க பாடலை முதலில் நாம் 


பார்ப்போமா அன்புத் தமிழ் நெஞ்சகளே !!             


 பாடல் இதோ உங்கள் பார்வைக்கு :-                           




நண்டு சிப்பி வேல்கதலி  !!                                                   


நாசமுறுங்கால் --  தான்                                                     


கொண்ட கருவே அழிக்கும்                                               


கொள்கையது போல்  !!                                                         


பண்டு தனம் கல்வி மனம்                                                 


பாழடையும் நாள் மனம்                                                       


பாவையர்மேல் நாடுமென   !!                                  


படித்து உணர்ந்தும்  நான்                                                     


கொண்டவளைத்தான் துறந்து                                         


மாதவி சதம் என நினைத்தேனே !!     



என அந்தப்பாடலில்தான் எவ்வளவு  உலகின் 



யதார்த்தமான விஷயங்களை உள்ளடக்கி 



அங்கே இளங்கோ அடிகளார் தம் கவித்துவத்தை 



வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை 



நாம் பார்த்து படிக்கின்றபொழுது நான் எல்லாம் 



அன்பர்களே !!சத்தியமாக உணர்ச்சி பொங்கிட 



வியர்வைக்கால்கள் விரைத்து நிற்க எனது 



(மயிர்கூச்செறிய) ஆழ்மனமதில் ஒரு உத்வேகம் 



பிறக்கின்றது என்று சொன்னால் அது ஒன்றும் 



மிகையான சொல் அல்ல அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே/உடன்பிறப்புகளே !!                               




பாடல் விளக்கம் இதோ உங்கள் பார்வைக்கு :- 



எப்படி, நண்டு அதன் குஞ்சு அது பிறக்கும் 


பொழுதில் தனது தாயின் வயிற்றைக் கிழித்து 


வெளிவருவதன் மூலமாக தாயைக் 


கொல்கிறதோ, அதுபோல ,                                               



எப்படி கடலில் வாழ்ந்திடும் பாசி இனங்களுள் 


ஒன்றான சிப்பி அது தனது வயிற்றினுள் சுமந்து 


கொண்டு உள்ள விலைமதிப்பற்ற 


போக்கிஷமாம் " முத்து " தாயின் 


வயிற்றிலிருந்து வெளிவரும்போது சிப்பியை 


அறுத்து எடுத்ததனால் தாயை மரணக்குழியில் 


தள்ளிடுகிறதோ அதுபோல,                                             



எப்படி, வாழை மரம் தனது கன்றினை அது 


ஈனுகின்ற பொழுது எப்படி தாய் மரத்தை 


அடியோடு வெட்டிவீழ்த்தி பின்னர் எடுத்து 


விடுகிறார்களோ, அதன் மூலம் தாயின் 


சமாதிக்கு கட்டிடம் கட்டுகிறதோ  அதுபோல                                                  


இந்த ஜீவ ராசிகள் செயல் படுகின்றது.


அது போலவே நான் (கோவலன்) எனது 


புகழ்,பெருமை, நான் சம்பாதித்த செல்வம், நான் 


கற்ற கல்வி,எனது அருமையான அமைதி 


தழுவிடம் நல்ல மனம் பாழடையும் நாள் எனக்கு 


எப்போது வருகிறது என்று சொன்னால் நான் 


எப்போது பிரபலங்களின் மேல் ஆசைப்பட்டு, 


காமமுற்று, அவளை அடைந்திடவேண்டும் 


என்கின்ற வெறியுடன் எவன் ஒருவன் 


செயல்படுகிறானோ, அதேபோலவே, நான், 


கொண்டவள், எனது அன்புமனைவி,இல்லத்தரசி 


கண்ணகியைத் துறந்து ஆடல் அரசி மாதவியை 


எனது உண்மையான் சொந்தம் என என்று 


நினைத்தேனோ அக்கணமே இந்தத் 


திருவிளையாடல் எண்ணங்கள் கோவலனின் 


உள்ளத்தில் இருந்து பீறிட்டுக் கிளம்புகிறது!!           


என்று அந்தப் பாடலில் வெகு அழகுற இளங்கோ 


அடிகளார் தனது கருத்துக்களைப் 


பதித்துஇருப்பது  இந்த உலகம் உள்ளவரையில் 


நடக்க இருக்கும்  இதுதான் உண்மை 


உண்மையிலும் உண்மை.                       



அன்பர்களே !!  ஒரு மிகவும் அருமையான 


நல்லதொரு கருத்துச் செறிவுள்ள ஒரு காவியப் 


பாடலை அதன் விளக்கத்துடன் இன்று உங்கள் 


அனைவருக்கும் வழங்கிய மனத்திருப்தியுடன் 


"எண்ணச்சிறகுகள் " பதிவு செய்த நல்ல 


மனதுடன் உங்கள் அனைவருக்கும் அன்பு 


வணக்கங்களை பதிவு செய்து நன்றி பாராட்டி 


விடைபெறுகின்றேன்.                                                         



நன்றி !! வணக்கம் !!                                                               



அன்புடன் மதுரை T.R. பாலு. 

No comments:

Post a Comment