Tuesday, 30 April 2013

தாலி பெண்ணுக்கு வேலியாகுமா ? இது உண்மையாகுமோ ?




தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தமிழில் மட்டுமே பேசிடுக !!


( தமிழர்களிடமாவது )



அன்புமிக்க பெரியோர்களே !! இன்று 


நான் உங்கள் அனைவரையும் சற்று 


மாறுபட்ட, வித்தியாசம் நிறைந்த, 


நல்லதோர் சமூக சிந்தனயுள்ள, ஒரு 


விஷயத்தினை, நம் அனைவரது   


சிந்தனைக்கும், நல்லதோர் சுவை  


மிகு விருந்தேனவே, எண்ணி நான் 


உங்களுடன் விவாதித்திடவே இங்கு


வந்திருக்கிறேன் அன்பர்களே !!



பொதுவாக திருமணத்தின்போது  


மணமகன் தனது திருக்கரங்களால் 


மணமகளுக்கு அணிவித்திடும் ஒரு 


பவித்ரமான, வாழ்க்கை பற்றிய 


நல்லதொரு அறிவிப்பினை இந்த 


உலகுக்கு அறிவித்திடும் பொருட்டு 


அந்தப் பெண்ணின் கழுத்தினில் 


மஞ்சள் கயிற்றினால் கட்டப்படும் 


ஒரு புனிதமான அணிகலனே இந்த 


தாலி என்பது !! அது போலவே பெண்


அவளது சகோதரன் (மைத்துனன்) 


அவனது மச்சானுக்கு காலில் பெரு 


விரலுக்கு அடுத்து உள்ள விரலில் 


அணிவித்திடும் வெள்ளி ஆபரணம் 


மிஞ்சி என்பது. தாலிக்கு தரும் அதே 


முக்கியத்துவம் இந்த மிஞ்சிக்கும் 


தரப்பட்ட காலங்கள் முன்பு உண்டு. 


ஆனால் இப்போது எல்லாம் தாலி  


மிஞ்சி இவை இரண்டுக்குமே அந்த  


அளவு மதிப்பு இருபாலரும் தருவது 


இல்லை. காலங்கள்எல்லாம் ரொம்ப  


மாறிப்போச்சு அன்பர்களே !!ஆகவே 


யாரும் புனிதமானதாக இரண்டு 


பொருட்களையும்தற்போதுநினைப்ப


தற்கு தற்போது இடமும் இல்லை  


அதற்கு யாருக்கும் இங்கே நேரமும் 


இல்லை. ஏதோ ஒரு தங்க சங்கிலி 


ஒரு வெள்ளி ஆபரணம் என்றே 


இங்கு அனைவரும் நினைக்க துவங்-


கிஆண்டுகள்3௦க்குமேல்ஆகிவிட்டது


அன்பர்களே !! இதுஎல்லாம் ஒன்னும் 


எங்களுக்கு வேலியும் கிடையாது. 


ஒரு மண்ணும்  கிடையாது என்று 


புரட்சிகருத்துப் பெண்கள் தற்போது 


வெளிப்படையாகவே சொல்லத்  


துவங்கியாகி விட்டது அன்பர்களே 


சரி.அப்படீன்னா எதுக்கு இந்த தாலி 


இந்த மிஞ்சி என நீங்கள் கேட்பது 


உண்மையில் சரியான கேள்வி. 


சென்னையைப்போன்ற  நாகரீகம்  


முற்றியஊர்களில் வாழும் பெண்கள்  


குல தலைவிகளில் பலர் வேலைக்கு 


சென்றிடும்போது தாம் தமது இந்தப் 


பவித்ரமான தாலியை  சட்டைக்குள் 


மறைத்து திரிபவர்களையும் நான் 


ஆங்காங்கேகண்டுசிரிப்பதும்உண்டு.


பகுத்தறிவு பூர்வமாக நீங்களே சற்று 


சிந்தித்துப் பாருங்களேன்.இந்த தாலி 


என்பது அப்படியா பெண்களை வேலி 


இட்டு காத்திடும் ? ஒரு மண்ணும் 


கிடையாது. எல்லாமே சும்மாக்காச்சு 


க்கும்என்றேஆனபின்னர் நாம் என்ன  


சொல்ல முடியும்.சொல்லுங்கள் 


அன்பர்களே !! மனசாட்ஷி மட்டுமே 


நமது கூட கடைசி வரை வரும். 


பெண் என்பவள் மனதில் நினைத்து  


துணிந்து வீதியில் இறங்கிவிட்டால் 


இந்தத் தாலியால் ஒரு முடியைக்  


கூடப்பிடுங்கிடமுடியாதுஅன்பர்கள் 


அறிவாராக. சிறையில் வைத்துப் 


பூட்டினாலும் ஆண்களால் இந்தப் 


பெண்களைஎதுவும்செய்திடஇயலா-


-து என்பது வான்புகழ் வள்ளுவனின் 


கருத்து. ஒரு குறளில் கூறுகிறார்:-


சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்?  
 
மகளிர் நிறைகாக்கும் காப்பேதலை.        

இதற்கு மேலாக யாரும் எதுவும் 


சொல்லிட இயலாது அன்பர்களே !! 


ஆனால் எனக்கு தெரிந்த ஒரே ஒரு 


கருத்தினை நான் இந்த மன்றத்தில் 


பதிவு செய்துவிட்டு எனது கட்டுரை  


தனை நான் நிறைவு செய்கிறேன் 


அன்பர்களே.  

  

பொதுவாக ஆண்கள் நிமிர்ந்த நடை 


உள்ளவர்கள். பெண்கள் குனிந்த 


தலை கொண்ட நடை கொண்டவர்  


என்பது 3௦ ஆண்டுகளுக்கு முன்பு  


வரை பொருத்தமானதாக இருந்தது 


இன்றைய நிலை பற்றி நான் பேச வர 


வில்லை அன்பர்களே. 



அப்படி  நிமிர்ந்த நடைகொண்ட 


ஆண்கள் கண்களில் இவள் 


திருமணம் ஆனவள். வேறு ஒரு 


ஆண் மகனுக்கு உடமைப் பட்டவள் 


என்பதையும் அதேபோல கால்விரல் 


மிஞ்சி கண்ட பெண்கள் இந்த 


ஆடவன் வேறு ஒரு பெண்ணுக்கு 


சொந்தக்காரன் என்பதை அறிந்திட 


மட்டுமே இந்த தாலி, மிஞ்சி இங்கே 


நமது முன்னோர்களால் அறிமுகப் 


படுத்தப்பட்டு அமல் செய்யப் பட்ட-    


தாகவே நான் கருதுகிறேன் அன்பு  


நண்பர்களே !!      

                           

 நன்றி!! வணக்கம்!!


அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment