தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழில் மட்டுமே பேசிடுக !!
( தமிழர்களிடமாவது )
தேவை !பாதுகாப்பு !!உஷார் !உஷார் !!
அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த
வணக்கம்.
இன்றையதினம் நாட்டில் நடைபெற்று
வருகின்றபல்வேறுகொலைகளில் மிக
அதிகம் நிகழ்ந்திடுவது காலை வேளை
சம்பந்தபட்ட(கொலைசெய்யப்டுபவர்)
நபர்மர்மமாககொலைசெய்யப்படுவது
அவர் காலை நடைபயிற்சி செல்லும்
போதே குறிவைத்து தாக்கப்பட்டு பின்
கொலைசெய்யப்படுவதுஎன்பதுஇன்று
வழக்கமானநிகழ்வுகளில் ஒன்றாகவே
ஆகி விட்டது. ஏன் என்றால் ஒருவரை
ஒரு கும்பல் கொலைசெய்வது என
தீர்மானித்துவிட்டால்,அது தனி நபரோ
அல்லது கூலிப்படையோ அவர்களது
முதல்வேலைகண்காணிப்பதுமட்டும்.
அப்படி கண்காணிப்பு பணி துவங்கிடும்
போது அவர்களது முதல் வேலை இந்த
கொலை செய்யப்படுபவர் எப்போது
எழுந்து வெளியில் வருகிறார்.அவரது
அன்றாடநடவடிக்கைகள் என்னென்ன?
எத்தனை மணிக்கு எங்கெங்கு
செல்கிறார் ?எப்போது வீட்டுக்கு அவர்
திரும்புகிறார்? இது பற்றியஒருதொடர்
கணக்கெடுப்பு (இரகசிய சர்வே) எடுத்து
ஒரு 1௦ நாட்கள்இந்தசர்வே நடைபெற
அதன் பிறகே அவரை எந்த இடத்தில
வைத்து எப்படி " போடுவது "என்று
தீர்மானிப்பார்களாம். இதனை எனது
உதவியாளர் ஒரு கூலிப்படை தளபதி
சொல்லியதாக மறைந்த ஒரு கூலிப்
படை செயல்வீரர் சொன்னதாக ஒரு
பொதுக்கருத்து இந்த நாட்டிலே
இன்றும்அமலில் உள்ளதுநெஞ்சமே!!
அன்பர்களே இந்த முறைப்படி இங்கே
கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம்
ஏராளம். அந்த வரிசையில் முதலில்
கொலை அரங்கேற்றப்பட்ட நபர்தான்
முன்னாள் பொதுப் பணித் துறை
அமைச்சரும் ,அந்நாள் அந்த மாவட்ட
கழகசெயலாளருமான தா.கிருஷ்ணன்
அவர்கள்தான். கடந்த 2௦௦3ம் ஆண்டு
"தாகியார்" காலைநடைபயிற்சிசென்ற
போது தான்கயவர்கள் கூட்டதினரால்
கூலிப்படை அதோடு கூட ஏவல்படை
இவர்களது துணையுடன் " வேலை "
மிகக் கச்சிதமாக முடிக்கப் பட்டது.
உடன் பிறந்தே கொல்லும் வியாதி
என்பார்கள் நமது முன்னோர்கள்.அது
போல நமது உடலுக்கு ஏதாவது சீக்கு
வந்து மனிதன் இறந்துபோகும்போது
அவர்கள் என்னசொல்லுவார்கள்எனில்
வெளியில் இருந்து நோய்த் தாக்கம்
வந்து/ஏற்பட்டு அவர் மரணம் அடைய
வில்லை. அவரது உடலில் இருந்து
வந்த வியாதியே அவரை கொன்று
விட்டது என்று சொல்லுவார்கள்.
இந்த நடைபயிற்சிக் கொலையில்
நெல்லை மாநகரில் பிரபல கல்விக்
கட்டளை அதிபர் ஒருவர், அதுபோல
நெல்லை மாநகரில் நடைபயிற்சியில்
அதிகாலை வேளையில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஆலடி
அருணாஅவர்களும்இதேபோலத்தான்
மர்மக்கூலிப்படை உதவியுடன் மேலே
அனுப்பப்பட்டதாகப் பலத் தகவல்கள்
இங்குள்ள காவல்துறை அலுவலகத்-
திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதே வரிசையில் தான் திருச்சி புகழ்
முன்னாள் அமைச்சர் இந்நாள்
மாவட்டக் கழகச் செயலாளருமான
திருச்சி திரு K.N.நேரு அவர்களதுஉடன்
பிறப்பு,KNநேரு அவர்களது வலது
கரம்போல செயல்பட்டவரும்,"செயல்"
வீரருமான "இராம ஜெயம் " கயவர்
கூட்டத்தினரால் காலைவேளை
நடைப்பயிற்சி சென்றபோது பகல் 12
மணிவரை வீடுவரவில்லையாதலால்
தேடிடும் போதுதான் அவர் கொலை-
செய்யப்பட்ட விபரமே வீட்டோருக்கு
அங்கே தெரிவிக்கப்படுகிறது.இதே
முறையிலே நேற்று நாகர் கோவிலில்
மாநில செயற்குழுஉறுப்பினர்B.J.P.யின்
அன்பிற்குரிய திரு M.R.காந்தி அவர்கள்
காலைவேளை நடைபயிற்சி செல்லும்
போது ஏவல்படையினரால் கொலை
முயற்சி நடைபெற்ற போதிலும் கூட
அதனின்று தப்பித்துவந்தாரையா!!
பாவம் பல்நோக்கு மருத்துவமனை
சென்று படுத்தாரையா !!
ஆகவே நான் இறுதியாக முக்கியமான
அரசியல் தலைவர்களுக்கு சொல்ல
விரும்புவது என்னவென்றால் நீங்கள்
இந்த சமுதாயத்திற்கு மிகவும்
வேண்டப்பட்டவர்கள். ஆகவே இனி
முதல்கொண்டாவது காலையில்
நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டி
யது மிகவும் அவசியமானது
என்றாலும் அதனை நீங்கள் வீதியில்
வைத்துகொள்ளாமல்இதே பயிற்சியை
வீட்டு மொட்டை மாடியில் வைத்து
செய்தீர்களேயானால் உங்கள் உடல்
நலத்திற்கு மிகவும் நல்லது என்று
சொல்லி தரப்பட்ட வாய்ப்புகளுக்கு
நன்றி பாராட்டி விடை பெறுகிறேன்.
நடை பயிற்சி செல்பவரா நீங்கள் ?
அது இன்று மிகத் தொல்லைதரும்
பயிற்சி!! ஆதலால் கவனம் அதிகம்
தேவை ! உஷார் !!உஷார் !!
No comments:
Post a Comment