தமிழர்களாக இருங்கள் !!
தமிழர்களிடமாவது தமிழில் பேசுங்கள் !!
இது இப்போது மிகவும் அவசியம் !!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் உயிரினும்
மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களுடன்
கூடிய வணக்கங்கள் பல.
அன்பர்களே பொதுவாக மனித இனத்தில் மட்டுமே
பல்வேறுகுணங்களும்பலவகையானஉணர்வுகளும்
வித்தியாசமான எண்ணங்கள்,சிந்தனைகள் உள்ள
பிறவிகளை நாம் காண முடிகிறது. ஆனால் ஏனைய
இறைவனின்படைப்பில் மிருகங்கள் பறவைஇனம்
நீர்வாழ்உயிரினங்கள்இவைகளுக்கெல்லாம்மூன்று
செயல்பாடுகள்மட்டுமே உள்ளது. அவை யாதெனின்
உண்ணல்,இனப்பெருக்கம் செய்திடல்,உறங்குதல்
இதனோடு அதனதன் வாழ்வு முழுமை பெற்று பின்
இயற்கை எய்திடல் நடந்திடுகிறது. ஆனால் நமது
மனித பிறப்பில் மட்டும் ஏன் இப்படி ? நாம் சற்று
ஆற அமர சிந்திப்போம்.
எனது சிந்தனைக்கு எட்டியவரை நான் யோசித்துப்
பார்த்ததில் எனக்கு கிடைத்த பதில் இதோ உங்கள்
கனத்திற்கு:-
ஆறாம் அறிவு செய்திடும் அற்புதமான வேலை. ஆம்
அன்பர்களே, பகுத்தறிவு என்று சொல்லப்படும் அந்த
ஆறாம் அறிவினை கெட்ட விஷயங்களுக்கு பயன்
படுத்தியதன் விளைவு. பொதுவாக மனிதனின்
இயற்கை அறிவு என்னவென்றால் எதை செய்யாதே
என்று நாம் சொல்கிறோமோ அதனைச் செய்து
பார்த்தால்மட்டுமே இவன் ஆத்ம திருப்தி அடைகி-
ன்றான். அதற்கு பைபிள் புத்தகத்தில் வரும் ஆதாம்
ஒரு சமீபத்தியஉதாரணம்.ஆகஇந்தகெட்ட எண்ணம்
படைத்த மனிதர்கள் அவர்களது மனம் அழுக்கு
ஆவதனால்தான்இந்தஎண்ணம்அழுக்காகவருகிறது
அப்படி மனம் அழுக்கு அடைந்திட்டாலே அது
முகத்தில்தெரிந்துவிடும்அதனால்தான்பெரியவர்
-கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று
சொல்வார்கள்.
இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர்கள்
நம்மோடு சராசரி மனிதர்கள் பழகுவது போல்
பழகிட மாட்டார்கள். ஏன் என்றால் அது அவர்களால்
முடியாது. இந்த சங்ககாலப் பாடலில் இந்தச்
சூழ்நிலையை எப்படி உதாரணத்துடன் விளக்கி
எழுதி உள்ளனர் என்பதை படித்து பாருங்கள்.
நஞ்சுடைமை தான் அறிந்து நாகங்கருத்து ஒழியும்.
அஞ்சாத் தனிவழியே புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு -
நெஞ்சில் கரவுடையார் தம்மை கரப்பர். கரவார்
கரவிலா நெஞ்சத்தவர்.
பாடல் விளக்கம் :- அதாவது எப்படி நாகப் பாம்பு
தம்மிடம் கொடிய விஷம் இருப்பதினை உணர்ந்து
சந்து பொந்துகளில் மட்டிலுமே வாழ்கிறது.ஆனால்
தம்மிடம் எந்த ஒரு விஷமும் இல்லாததனால்
நீர்ப்பாம்பு நமது கைகால்களில் புகுந்து விளையாடு-
கிறதோ அது போல கெட்ட எண்ணம் கொண்ட
மனிதர்கள் தம்மிடம் அந்த கெட்ட எண்ணம் உள்ளது
என்பதை அறிந்ததனால் யாரோடும் எவரோடும்
சிரித்து மகிழ்ந்து பேசுவது கிடையாது.எப்போதும்
முகத்தை உம் என்று வைத்து இருப்பார்களாம்.
ஆனால் எந்த கெட்ட எண்ணமும் இல்லாத நபர்கள்
அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் சிரித்துகொண்டே
இருப்பார்கள் என்று அந்தப்பாடல் நமக்கு தரும்
விளக்கம் உண்மையிலேலே நம்மை மெய் சிலிர்க்க
வைக்கின்றது. இந்தப் பாடலும் அதன் விளக்கமும்
எனது தந்தையார் அவர்கள் நான் சிறுவனாக இருந்த
போதுஎனக்கு சொன்ன பல்வேறு கதை,பாடல்களில்
இதுவும் ஒன்று அன்பர்களே. எனது இந்த அத்தனை
திறமையும் வளர்ச்சி நுண்ணறிவு இவை எல்லாமே
எனக்கு எனது தந்தை அளித்த பிச்சை என்றே நான்
கருதுகிறேன் அன்பர்களே. இப்போது உங்களுக்கு
கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களை இனம்
காணுதல் சுலபமாக ஆகி இருக்கும் என்றே நான்
கருதுகிறேன்.
மீண்டும் நாம் அடுத்த எனது "எண்ணத்தில்
தோன்றியவை " வலைதளத்தில் நாம் மீண்டும்
சிந்திப்போம் அன்பர்களே. அதுவரை அன்பு நன்றி,
வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அன்பு
மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment