தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழிலேயே பேசிடுக !!
(தமிழர்களிடமாவது)
உலகெங்கிலும் அன்பு,பாசம்,உண்மை,
நேர்மை இந்த குணங்களுடன் மட்டும்
வாழ்ந்துவரும்எனது உயிரைவிடநான்
நேசித்திடும்நல்லதமிழ்நெஞ்சங்களே!!
முதலில் உங்கள் அனைவருக்கும் என்
இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன்
கூடிய வணக்கம்!!
இன்றையதினம்இந்தசமூகத்தில்
உள்ள ஒரு அவல நிலைபற்றி இன்று
எனது " எண்ணத்தில் தோன்றியவை "
வலைத்தளப் பக்கத்தில் ஒரு மிகவும்
முக்கியமான ஒரு கருத்தினை நான்
உங்கள் அனைவரின் சிந்தனைக்கும்
ஏற்றவாறு அதனைப் பற்றிய ஓரு
தெளிவானமுடிவுக்குநாம்எல்லோரும்
வந்தாக வேண்டும் என்ற காலத்தின்
கட்டாய முடிவு எடுக்கும் விதமாக
இப்போதுஓர்கருத்துப்போர் ஒன்றினை
நான் உங்கள் எல்லோரின் முன்னிலை
-யிலும் துவக்கிட விழைகின்றேன்.
சமூகநீதி என்பது இன்று மட்டும் அல்ல
என்றுமே அது இந்த ஆண் ஆதிக்க
சாம்ராஜ்யத்தினில் அவர்களுக்கு,
அவர்களால் , அவர்களுக்காக மட்டுமே
சாதகமாக உருவாக்கப் பட்டுள்ளது
என்றால் அதில் இருவேறு கருதுக்களு-
-க்கு இடம்இல்லை.அந்தகொடுமைகள்
காலம் காலமாகவே பெண் இனத்திற்கு
பேராபத்து விளைவிக்கும் வண்ணம்
இன்றுவரை நடைமுறைப் படுத்தபட்டு
வருவது என்பதுஎன்மனவேதனையின்
வெளிப்பாடுஅதுதான்யதார்த்தம்.அது
மட்டுமே உண்மையும் கூட. சரி அப்படி
எனில்உலகம்அழிந்திடும்வரையிலும்
பெண்கள் வாய்மூடி மௌனிகளாகவே
இருந்து மறைந்திட வேண்டியதுதானா
என பெண்கள் அமைப்பினர் கேட்கும்
கேள்விகளில் நியாயத்திற்கு புறம்பாக
ஏதும்இருப்பதாகஎன்போன்ற சிந்தனை
செம்மல்கள்கருதுவதற்கு இடமில்லை
என்பதனை நான் இந்த மக்கள் மன்றம்
முன்பாக அதில் எனது முதல் தகவல்
அறிக்கையாகப் பதிவுசெய்கிறேன் என்
அன்பு நெஞ்சங்களே. ஆனால் நாம்
இந்த தலைப்பினை அங்குலம்அங்குல-
மாக அலசி ஆராய முடிவு எடுத்தோம்
என்றால் அதற்கு இந்த ஒரு பிறவி
நமக்கு போதாது என்பதே எனது உள்
கருத்து. இந்த சமூக நீதி என்ற ஒரு
மகாமலையினில் நான் ஒரு சின்னஞ்
சிறு கல் ஒன்றினை மட்டுமே எடுத்து
அதனில் அதற்குள்ளாக எனது வாதப்
பிரதிவாதங்களை ஆராய்ந்து முடித்து
ஒர்தெளிவானசிந்தனைநீரோட்டத்தை
உங்கள் அனைவரது கருத்துப் பெட்ட-
கங்களில் கலந்து அது உங்களுக்கு மன
நிறைவினை அளித்துவிட்டது என்று
சொன்னால் அது ஒன்றே போதும் என்
உயிரிலும் மேலான அன்புத்தமிழ்
நெஞ்சங்களே நான் எடுத்த இந்த பிறவி
அதன் முழுப் பயனையும் அடைந்ததா-
கவே நான் எண்ணிஎனது ஆயுள்காலம்
முடியஇது மாதிரியான எழுத்துப்பணி
தனை நான் செயல்படுத்துவேன் எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சரி ! நாம் இப்போது தலைப்பு சம்பந்தப்-
-பட்ட விஷயத்தின் சரிபாதி முடிவுக்கு
வந்து விட்டோம் அன்பர்களே.
நான் அந்த மகா மலையில் இருந்து
தேர்ந்துஎடுத்துள்ள ஒருசிறுகல்என்பது
"மறுமணம்" என்ற ஒரு விஷயம்தான்
அன்பர்களே !!
அதாவது நம்மில்ஆதிக்காலம் தொட்டு
இன்றுவரை இந்த மறுமணம் என்னும்
விஷயத்தினில் பெண் என்பவளுக்கு
சமூக நீதி என்பதுசரியாகக்கிடைத்திட
வில்லை என்பதே எனது கருத்து. ஒரு
ஆண்தனதுமனைவியைஇழந்துவிட்
டால் அவர் எத்தனை வயது உள்ளவர்
என்றாலும் அதைப் பற்றி இந்த சமூக
நீதி கவலைப் படுவது இல்லை.மாறாக
இந்த ஆண் இனத்திற்கு ஊக்கம் தரும்
விஷயம் போல ஒரு பழமொழி வேறு:-
"பொண்டாட்டி செத்தா புருஷன் புது
மாப்பிள்ளை " என்று
அதே சமயம் மற்றும் ஒரு கருத்தும்
ஒன்று இந்த அவனியில் இன்றுவரை
நடைமுறையிலும்அனுபவ ரீதியிலும்
அமுலில் இருக்கத்தான் செய்கிறது
அன்பர்களே. அது :-
" பெத்தவ செத்துப்போய்விட்டால் அவ
பெத்த பிள்ளைகளுக்கு அவங்களை
பெத்த அப்பன் சித்தப்பன்" என்று
நான் இங்கே எல்லோரையும் எல்லா
ஆண் வர்கத்தினரையும் ஒருசேர ஒரே
கண்ணோட்டத்தில்கூறிடவரவில்லை.
சேற்றினில்மலர்ந்தசெந்தாமரைகளாக
அதிலும் நான்கு ஐந்து நல்லவர்களும்
குழந்தைகளுக்காகவே தனது எஞ்சிய
வாழ்நாளினைச் செலவிடும் உத்தமர்
களும்இங்கேஇருக்கத்தான்செய்கிறார்-
-கள் அன்பர்களே. ஆனால் எஞ்சிய 95
ஆண்வர்கத்தின்அயோக்கியசிகாமணி-
-களைப் பற்றிஎழுதவேண்டும் என்பதற்
-காகவே இந்தபக்கத்தினைநான் இன்று
பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்
அன்பர்களே. சரி அப்படி மனைவி
மரணித்து விடுகிறாள். பிறகு இந்த
ஆண் மகன் மறுமணம் செய்கிறானே
அதில்எத்தனைபேர்நிம்மதியாகஇங்கே
வாழ்ந்திடுகிறார்கள் என்றால் அது ஒரு
விழுக்காடு அல்லது இரண்டு அதற்கு
மேல் ஏதும் இல்லை. எனது ஆருயிர்
நண்பர் ஒருவர் இருந்தார் இப்போது
என்னோடு இல்லை. காலம் அவரை
தன்வசம் அழைத்துக் கொண்டு போய்
விட்டது. அல்ஹாஜ் முகமது யூனுஸ்
அவர் சொல்லுவார்:-
மனைவி என்றும் தாரம்என்னும்சொல்
அதற்கு அருகதை நிறைந்தவள்
முதலில் வரும் மனைவி/தாரம் அவள்
மட்டுமே.
முதலில் வருபவள் "தாரம்"
அடுத்து வருபவள் " கோரம் "
தொடர்ந்தும் வருபவள் என்றும்
பிறருக்கு " உப காரம் "
என்று வேடிக்கையாக சொல்லுவார்.
தயவு செய்து இந்த செய்தி யார்
மனதினையும் புண்படுத்தி இருந்தால்
அதற்காக நான்மானசீகமாக அவர்களி-
மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.இந்தக்
கருத்தினையே கவியரசர் வேறு ஒரு
கோணத்தினில் மற்றொரு கண்ணோ-
-ட்டத்தில் அழகாக கவி புனைந்து
இருப்பார். மனைவி இருக்க வேறு ஒரு
பெண் தொடர்பு என்பது எப்படிப்பட்ட
ஆபத்தினைத் தர வல்லது என்பதனை
இந்தப் பாடல் மிக அழகுற வெளிப்ப
-டுத்தி இருக்கும் அன்பர்களே.
"நெஞ்சில் ஓர் ஆலயம் " என்ற திரைப்-
படத்தில் அந்தப் பாடல் வரும்:-
" ஒருவர் மட்டும் குடி இருந்தால்
என்றும் துன்பம் இல்லை-ஒன்றிருக்க
ஒன்று வந்தால் என்றும் அமைதி
இல்லை"
என்று அருமையான வாழ்கையின்
உண்மை நிகழ்வுகளை அது அவரது
கற்பனையில் உதித்ததோ அல்லது
அவரது சொந்த/தனிப்பட்ட வாழ்வில்
கண்ணதாசன் பெற்ற அனுபவத்தின்
வாயிலாகவோநான்அந்தஇடத்திற்குள்
செல்ல விரும்பவில்லை.
ஆகநாம் இப்பொது இடுகையின் இறுதி
பகுதிக்குவந்து விட்டோம் அன்பர்களே.
பார்த்தார்கள். பெண்கள். இனிமேலும்
நாம் வாய்மூடி இருந்தோமென்றால்
இந்த ஆண் இனம் நம்மைபகடைக்காய்
-களாக மட்டுமே பயன் படுத்தும்என்று
முடிவெடுத்து அதன் எதிரொலியாக
இந்த" மறுமணம் " விஷயத்தில் பலர்
துணிந்து முடிவெடுக்க ஆரம்பித்து
விட்டார்கள்.இது தான் நான் இந்தப்
பெண் சமூகத்தில் எதிர்பார்த்தது. அது
இன்றைய தினம் அங்கிங்கு எனாதபடி
எங்கெங்கும் சீரோடும் சிறப்போடும்
நடைபெறத் தொடங்கிவிட்டது எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !
உங்களுக்கு மட்டும்தான் மனையாள்
இறந்துபோனாலோ அல்லது அவள்
உயிருடன் இருக்கும்போதிலோ வேறு
பெண்ணை மணம் செய்து கொள்ளும்
துணிவு வரும்?
எங்களுக்கும் அந்தத் துணிச்சல் உண்டு
என்ற கருத்தை இங்கேமுதல்முதலாக
பதிவு செய்த பெருமை திரைப்பட
நடிகை லெட்சுமிஅவர்களுக்கு உண்டு.
அவரைத் தொடர்ந்து அவர்வழி வந்த
மற்றும்ஒருசிறப்புகுணம்கொண்டவர்
தான் இயக்குனர் சிகரம் பாரதிராஜா
அவர்களால் கண்டெடுக்கப்பட்ட
நல்முத்துகிழக்கேபோகும் ரயில்
திருமதிராதிகா அவர்களே. இது போல்
துணிந்து பல சம்பவங்கள் இங்கே
தொடர்ந்து நடந்து வந்தாலே போதும்.
ஆண் இனத்தின்அந்த ஆதிக்கஎண்ணம்
என்றவழிவழிவந்தஅந்த காட்டுதர்பார்
நிகழ்வுகளுக்கு சாவுமணி ஒலிக்கத்
துவங்கி விட்டது என்று எண்ணி நாம்
அனைவரும்மகிழ்வுஅடைந்திடுவோம்
என்று சொல்லி எனது இந்த மிக நீண்ட
நெடிய அறிவு சார்ந்த கட்டுரைதனை
மிகவும் பொறுமையுடன் படித்திட்ட
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு
நான் மீண்டும் எனது நன்றிதனை
உங்களது பொற்கமல பாதங்களில்
வைத்து வணங்கி விடை பெறுகிறேன்.
நன்றி! வணக்கம் !!அன்புடன் மதுரை
T.R. பாலு.
No comments:
Post a Comment