தமிழனாக இருங்கள் !!
தமிழர்களிடமாவது "தமிழிலேயே" பேசுங்கள் !!
இது இப்போது மிகவும் அவசியம் !!
அன்புள்ள உலகம்முழுவதும் வாழ்ந்து வரும் எனது
அன்புத்தமிழ்நெஞ்சங்களே.உங்கள் அனைவருக்கும்
வணக்கம். இன்றைய தினம் நான் உங்களுக்கு தரும்
சிந்தனைவிருந்து:-நியாயம்தானாநீசொல்லு.கடந்த
௦7-04-2013 ஞாயிற்றுக்கிழமை இரவு " முரசு "
தொலைக்காட்சியில்ஒருபழைய திரைப்படம் பெயர்
"67ல் N.S.கிருஷ்ணன்" என்னும் அருமையிலும் ஒரு
அருமையான திரைப்படம் பார்த்தேன். அதில்
மறைந்த கலைவாணர் ஒரு பாடல் பாடுவார் தனது
சொந்தக்குரலில். அதையே தலைப்பாக நான் இந்தக்
கட்டுரைக்கு பெயர் இட்டு நம்மை எல்லாம் சிரிக்க
வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்திட்ட அந்த சிறந்த
நடிகருக்குஎனதுஅன்புக்காணிக்கைசெலுத்துகிறேன்
அட ஏனுங்க நடப்பது கலி காலம். இதுல போயிட்டு
நியாயம்,நீதி,நேர்மை ,சத்தியம்,உண்மை அப்படி
இப்படின்னு சொல்லிக்கிட்டு இது எங்கே எல்லாம்
எப்படிங்க செல்லுபடியாகும் ?
அப்படி சொல்லறீங்களா ?அதுவும்சரிதான்.
ஆனால் தர்மத்தின் வாழ்வு தன்னைசூது கவ்வும்.
இறுதியில் தர்மம் வெல்லும் என்னும் கீதை
உபதேசத்தில் நான் இன்னும் நம்பிக்கை
இழக்கவில்லை.காலம் ஒரு நாள் மாறும். நம்
கவலைகள் யாவும் தீரும்.வருவதை எண்ணி
சிரிக்கின்றேன் !வந்ததை எண்ணி அழுகின்றேன் !!
என்ற கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளை
என்றும் நம்புகிறவன் நான். சரி இப்பொது நாம்
தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு வருவோம்.
இறைவனால் படைக்கப்பட்டவன் மனிதன். அவன்
மனம் மிகவும் கஷ்டம் அடைந்திடும்போது அதனை
நீக்கி இன்பம் தர வேண்டி இறைவனிடம் கேட்பது
மனித இயல்பு. முதல் முதலாக லஞ்சம் என்பது
இந்த நாட்டினில் உருவாகிட முக்கியமான மூல
காரணமே இந்த மனிதன்தான். அதுவும் யாருக்கு ?
பக்தன் பரம்பொருளுக்கு.எப்படி தெரியுமா ? கீழே
குறிப்பிட்ட பாடலைப் பார்த்தாலே உங்களுக்கு
புரியும் :-
" பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத் தூமணியே-நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா "
இந்தப் பாடலில் இருந்துதான் இந்த லஞ்சம் எனும்
அன்பளிப்புஉலகினில்முளைக்க ஆரம்பித்துவிட்டது
என்றே நான் கருதுகிறேன் அன்பர்களே.அதாவது
பிள்ளையார் சாமிகிட்டே பக்தன் கேட்கின்றான் நான்
உனக்கு பால்,தேன்,சர்க்கரைப்பாகு,பருப்பு இந்த
நாலும் கலந்து தாரேன். அதுக்குபதிலா நீ எனக்கு
இயல்,இசை,நாடகத் தமிழ் ஆக இந்த மூன்று
தமிழும் தா என் பிள்ளையார் அப்பனே. நான் இதைத்
தாரேன்.நீஅதைத்தாஎன்றால்அதற்குப்பெயர்லஞ்சம்
தானே ?.என்ன நான் சொல்றது.
அய்யோடா சாமிமீண்டும்தலைப்பினைவிட்டுவேறு
இடம் போகுதுஅய்யா.
இப்பவிஷயம்என்னான்னாஆண்டவன் என்பவன்
எல்லாருக்கும் பொதுவானவன். உயர்ந்தவன்
தாழ்ந்தவன்,ஏழை,பணக்காரன், அறிஞர்,முட்டாள்
படித்தவன்,பாமரன் இந்தமாதிரி பாகுபாடு ஏதும்
இல்லாதவன். இன்று நீங்கள் உலகத்திலேயே மிகப்
பெரும் செல்வந்தர்கள் நிறைந்து வாழும் சவூதி
அரேபியா நாட்டினில் இறைவனை தொழும்போது
யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் முதல்
வரிசையில் இருக்கலாம். அந்த நாட்டு மன்னரே
ஆனாலும் இதே விதிப்படிதான். எல்லோரும்போல
வரிசையில்நின்றுதொழுதுவிட்டுப் போகவேண்டும்
ராசாவுக்கு சிறப்பு மரியாதை,முதல்வரிசை இட
ஒதுக்கீடு எதுவும் கிடையாது.அதேபோல இன்றைய
தினம் நீங்கள் கிறித்துவ சர்ச் சென்றாலும் இதே
முறைதான். ஏன் என்றால் அங்கே இறைவன் முன்
எல்லோரும் சமம் என்ற கொள்கை வலியுறுத்திக்
கடைபிடிக்கப் படுகிறது அன்பர்களே. ஆனால் நாம
எப்படி அன்பர்களே.
வெளியில் சொல்லவே வெட்கமாக இருக்கிறது.
மந்திரி சாமிகும்பிடவந்தாஇருக்கிறவன் எல்லாரும்
எந்திரி. அவருக்குமட்டும் விசேட பூசை புனஸ்காரம்
முதல் மரியாதை,தலைப்பாகட்டு இத்யாதி, ஏனுங்க
இதெல்லாம் நியாயம் தானா நீ சொல்லு!!
அதுபோலவே நூறு ரூபா தர்றியா உனக்கு பெசல்.
சாமிகிட்ட கூட்டிப்போவானுங்க இந்த ....................ப்
பயலுக. விபூதி தட்டிலே ஒரு அம்பது ரூபாவைப்
போடுங்க. சாமிகழுத்திலேஉள்ள பெரிய மாலையை
உங்க கழுத்திலே மாத்திடுவாய்ங்க இந்த ..............ப்
பயலுக. ஒரு ஐநூறு ரூபா கொடுங்க. சாமியையே
கொடுத்தாலும் கொடுத்துருவானுக இந்த .............ப்
பயலுக. இது
நியாயம் தானா நீ சொல்லு !!
சிந்திக்கணும் அன்பர்களே. அதுபோல செயல் பட
வேண்டும் அன்பர்களே. கடவுள் பிரேம் போட்ட
படத்திலயோ இல்லை கோவிலிலேயோ இல்லை
அன்பர்களே! நாம் செய்திடும் தொழிலில் இருக்கார்.
நல்ல உள்ளத்தில்,நாணயம் உள்ள பேச்சில் நல்ல
அறம்செய்திடும்விஷயங்களைஎண்ணிசெயல்படும்
உண்மைத்தொழிலாளியின்நெஞ்சமதில் இறைவன்
இருக்கின்றார்அன்பர்களே. அந்தக் காலத்தில் வெளி
வந்த "நல்லவன் வாழ்வான் " எனும்திரைப்படத்தில்
பேறிஞர் அண்ணா அவர்களது கதை,வசனத்தில்
உருவாகி புரட்சி நடிகர் M.G.R.நடித்த அந்த படத்தில்
T.M. சவுந்திரராஜன் பாடி ஒரு அற்புதமான பாடல்
வரும்.சீர்காழி S.கோவிந்தராஜன் தனது வெண்கலக்
குரலில் கணீரென்று பாடுவார் பாருங்க பாட்டு:-
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.நல்லவர்போல்
வெளிவேஷங்கள் அணிந்து நடிப்பவர் தம்மில்
இருப்பதில்லை. நாணயத்தோடும் நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை ....
என்று அந்த பாடல் வரும். அதனாலே நான் என்னா
சொல்றேன் அப்படீன்னா முதல்ல நம்ம இந்துக்
கோவில்களில் பணம்கொடுத்து பகவானை
தரிசிக்கும் முறையை ஒழிக்கவேண்டும். காசு
இருக்கிறவன் கொடுப்பான்யா இல்லாதவன்
என்னாசெய்வான்.உள்ளேஇருக்கும்சாமிசிலையாய்
இருப்பதனாலே பேச முடியல்லை. அதே மாதிரி
பெரிய மனுஷாள் வந்தால் பரிவட்டம் மரியாதை
இதெல்லாம் இருக்கக் கூடாது. இது பூராம் அந்த ....ப்
பயலுக பணம் பிடுங்க செய்ற சூழ்ச்சிங்கானும்.
புரிஞ்சுக்கணும். இதைநம்ம இந்துக் கோவில்களிலே
ஒழிக்காதவரை இந்த நிகழ்வுகள் எல்லாம்
" நியாயம் தானா நீ சொல்லு "
நன்றி. வணக்கம்.
அன்புடன் மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment