தமிழர்களாக இருங்கள் !!
தமிழிலேயே பேசுங்கள் !!
(தமிழர்களிடமாவது)
அன்பு , அறிவு, இவைகளால் மட்டுமே தங்களது
வாழ்வினை இணைத்துக் கொண்டு வாழ்ந்துவரும்
உலகம் எங்கிலும் உள்ள எனது அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !! உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த நல்வாழ்த்துகளுடன் வணக்கத்தை
வாரி வழங்கிடும் உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு
இன்றைய தினம் ஒரு வித்தியாசமான தலைப்பில்
உங்களில் அனைவரையும் எனது "எண்ணத்தில்
தோன்றியவை " வலைதள பக்கத்தில் சந்திப்பதில்
மிகவும் பெருமைப் படுகிறேன்.
புதுமணத் தம்பதிகள் வாழ்த்து!!இதில் என்னT.R.
பாலு அய்யாவிற்கு வித்தியாசம் வேண்டி இருக்கு?
என நீங்கள் எண்ணி உங்களது புருவங்களை உயர்த்-
துவது எனக்கு புரிகிறது அன்பர்களே.
அங்கேதான் " பட்டினத்தார்"தனதுகவித்துவம்நிறை-
ந்த பாடல் ஒன்றினை இந்த இடத்தில் அரங்கேற்றி
உள்ளார்அன்பர்களே !முதலில்பாடல்என்னவென்று
பார்ப்போமா அன்பர்களே :-
நாப்பிளக்க பொய் உரைத்து நவநிதியும் தேடி !
நலன் ஒன்றுமே அறியாத நாரீயரைக்கூடி !!
பூப்பிளக்க வந்துதித்த புற்றீசல் போலப் !
புலுபுலெனக்கலகலெனப்புதல்வர்களைப்பெறுவீர்!!
காப்பதற்கும் வகையறியீர்!கைவிடவும் மாட்டீர் !
கவர் பிளந்த மரத்தினுடைக்கால் நுழைத்துக்-
கொண்டு !!
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைபோல !
அகப்பட்டீர் ! அகப்பட்டீர் !! கிடந்தது உழல
அகப்பட்டீர் ! அகப்பட்டீர் !!
(பட்டினத்தார் பாட்டு )
பாட்டின் பொருள் விளக்கம்:-
பேசுகின்ற பொய்யின் விழைவாக நாவே இரண்டாக
பிளந்துவிடுமாம்.அந்தஅளவுக்குப்பொய்சொன்னால்
மட்டுமே" நவ நிதி " என்று சொல்லப்படும் ஒன்பது
வகையான செல்வங்களும் சேருமாம். சரி அப்படி
கையில் நாலு பணம் சேர்ந்து விட்டால் இந்த ஆண்
வர்க்கம் சும்மாவா இருக்கும். உடனே என்ன செய்ய
முடிவு செய்யும் என்பார்கள் என்றால் திருமணம்
செய்திடத்தான் அதிலும் குறிப்பாக "இவர்கள் மணம்
செய்திட நினைக்கும் அந்தப் பெண்களினால்" இந்த
ஆண் இனத்திற்கு எந்த "நலனோ அல்லது நல்லதோ
கிடையவே கிடையாதாம்" (அய்யா. இது என்னோட
கருத்து கிடையாதுங்க.பட்டினத்தார் கருத்து) அப்படி
ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து ஆவலுடன்
இந்த ஆண்மகன் இருந்ததன் விளைவு, வேறு என்ன
பிள்ளைக.குட்டிகள் தான்.அதிலும் அட்சரம் பிசகு
இல்லாமல் ஐந்து வருடத்தில் ஆறு பிள்ளைகள்
என்பார்கள். அதுபோல வத,வத, என்று பிள்ளைகள்
பெற்றுத்தள்ளும் இந்த ஆண்/பெண் இணைந்த நல்ல
குடும்பம் எப்படி பிள்ளைகள் பெரும் என்றால் மழை
வருவதற்கு முன்னோடியாக ஈசல்கள் படைஎடுத்து
வருவதுபோலஇருக்குமாம்.சரிஅப்படிப் பிள்ளைகள்
பெற்றபிறகு என்ன ஆகும் ? அவர்களை சரிவர
கவனித்து காப்பாற்றவும் முடியாதாம். சரி அப்படி
முடியவில்லை என்பதனால் கைவிட்டு விட்டுச்
சென்று விடுவார்களா என்றால் அதுவும் முடியாது.
இந்த இடத்தில்தான் இந்தப் பாடல் எழுதிய கவிஞர்
இந்த சூழ்நிலைக்கு தருகின்ற உதாரணம்தான் மிக
மிக அருமை. ஆம். அன்பர்களே.
அந்தக்காலத்தினில் பெரிய பெரிய மரங்களை அதன்
அந்த மரத்தின் விட்டம் 1௦ அடி முதல் 16 அடிகள்கூட
இருக்கும். மரத்தின் நீளம் இருபது முதல் முப்பது
அடிகள் கூடஇருக்குமாம்.அதனை சிறு கூறுகளாக
அறுத்து எடுக்க ஒரு பெரிய ரம்பம் அதனை அங்கே
பயன்படுத்தி காலை முதல் மாலைவரை சேர
நாட்டுத் தொழிலாளிகள் அறுத்துக்கொண்டு
வந்திடும் போது மறுநாள் மரத்தினுள் ரம்பத்தை
செலுத்திடவேண்டும் என்பதற்காகஒரு ஆப்பு ஒன்று
அடித்து வைத்துவிட்டு செல்வது வழக்கம். இவர்
வேலைசெய்வதனை மரத்தின் உச்சியில் இருந்து
பார்த்துக்கொண்டே இருக்கும் நமது இனத்தின்
முன்னோடிகளான குரங்கு என்ன செய்திடுமாம்
அறுக்கப்பட்ட மரத்தின் நடுவே ஒரு காலையும்
வெளிப்புறம் மறுகாலையும் வைத்துகொண்டு அந்த
ஆப்பை அகற்றும் முயற்சியில் ஈடுபடுமாம்.
லேசாகஅந்தஆப்பு அசைவு கொடுத்தவுடன் இந்த
குரங்கு என்ன நினைக்குமாம் முதலில் அதன்
முகத்தில்தான் என்ன மகிழ்ச்சி!!. திருமணம் ஆன
புதிதில் மனைவியின் உறவினில் கணவன் சுகம்
பெற்றிடும்போது அந்தக் கணவன் முகத்தில் என்ன
மகிழ்ச்சிக்களை தாண்டவம் ஆடுமோ அதுபோல
ஆப்பு நன்கு அசைந்து அதனை வெளியே எடுத்த
வுடன் பிரித்துவைத்த மரமும் நன்கு இணைந்ததால்
கால் நடுவிலே மாட்டிகொண்டு குரங்கு "காள் காள்"
என்று கத்தி துடித்திடும். அதனை விட்டு வெளியில்
வரமுடியாமல் அதில் மாட்டி அங்கேயேதனது உயிர்
பிரியும்வரை மரப்பிரிவில் மாட்டிக் கொள்ளுமாம்.
அதுபோல மணமக்களே நீங்களும் இல்லறம்
என்னும்பந்தத்தில் இந்தக்குரங்கு மாட்டியது போல
நீங்களும் கிடந்து உழல அகப்பட்டுகொண்டீர்கள்
என பட்டினத்தார் வாழ்த்தியது எவ்வளவு உண்மை
என்பதனை இன்று மணமான அனைவரும் நன்கு
உணர்ந்திடுகிரார்கள். இதுதான் உண்மை. இதுதான்
உலகம். வாழ்க யதார்த்தங்கள். வாழ்க வாழ்வின்
உண்மை நிலைகள்.
நன்றி பல.வணக்கம் பல. அன்புடன்மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment