நடிகர் வடிவேலு ஒரு தீர்க்கதரிசி !! உண்மையா !! இல்லையா ??
நடிகர் வைகை வடிவேலு ஒரு
தீர்க்கதரிசி!!
அன்புநிறைந்த உலகத் தமிழர்களே !!
முதற்கண் உங்கள் அனைவர்க்கும்
எனது நெஞ்சார்ந்த வணக்கம்.
இன்றைய தினம் ஒரு சிரிப்பு நடிகர்
நமது வைகை வடிவேலு அவர்களது
தீர்க்கதரிசனம் நிறைந்த எதிர்காலம்
அதனைக் கணிக்கும் சிறப்பு உள்ளம்
இதுபற்றிய ஒரு சிறு கருத்தோவியம்
ஒன்று நான் உங்கள் அனைவரின்
சீரிய சிந்தனைக்கு விருந்தாகப்
படைத்திட இந்த "உழைப்பாளர்
தினத்தில் "நான் முடிவு எடுத்து
அதை தருகிறேன் இப்போது.`
ஒரு திரைப்படத்தில்நடிகர்வைகை
வடிவேலு அவர்கள் கார் ஒன்றில்
அமர்ந்து உள்ள போது தெருவில்
இருவர் மிகவும் ஆக்ரோஷத்துடன்
சண்டை போட்டுகொண்டு இருப்பார்
அப்போது வடிவேலு குறிக்கிட்டு
அந்த இருவரையும் சமாதானப்
படுத்தும் வண்ணம், அண்ணன்,ஏன்
இப்படி இருவரும் இருக்கிறீர்கள்?
சண்டை போட வேண்டாம் என மிக
மன்றாடி கேட்டுகொள்வார். உடனே
சண்டைபோட்டுகொள்ளும் அந்த
இருவரில் ஒருவர் வடிவேலுவிடம்
அண்ணே நீங்களே சொல்லுங்க
நியாயத்தை.நான்தான் கஷ்டப்பட்டு
கோழிஅடிச்சுக்குருமாவைக்க நல்ல
இளங்கோழிவாங்கியாந்தா இந்தப்
பய,தலையைஅவன்வச்சுக்கிடுவே
ன் என அடம்புடிக்கிறான் சாமி என்று
சொல்வார். இப்படியே
ஒருவரைப்பற்றிமற்றொருவர்
மாத்தி மாத்தி கோளாறு
சொல்லிகிட்டே மீண்டும் ஒருவரை
ஒருவர் அடிக்க ஆரம்பிப்பார்கள்.
அப்ப வடிவேலு நல்லா இருவரையும்
சாத்து,சாத்துன்னு சாத்துவார்.
இப்போது இந்த இருவரும் ஒன்னு
சேர்ந்து கிட்டு டேய் மச்சான் நம்மள
இந்தப் பொடிப்பய வந்து என்னடா
இப்படி அடிச்சுட்டான்.என ஒருவன்
கேட்க அதற்கு மற்றொருவன் ஆமா
மாப்பிளை நீ சொல்வதுதான் சரி.
நம்மரெண்டுபேரையும்அடிச்ச இவன்
கையைநாம்இப்பஓடிப்போம் மாமு
என மற்றொருவனும் சொல்லி
வைகை வடிவேலுவை சேர்ந்து
நல்லா சாத்துசாத்துன்னு சாத்திடு
வோமா என இன்னொருவனும்
சொல்லி வடிவேலுவை இருவரும்
தாக்கி சட்டையை பேண்டை கிழிச்சு
விட்டு டேய்,நல்லா கேட்டுக்க அவன்
தங்கச்சியை நான் கட்டியிருக்கேன்.
அது மாதிரி என் தங்கச்சியை அவன்
கட்டி இருக்கான். ஏன்டா,டுபுக்கு !நீ
இப்பஎங்களபிரிச்சுடலாம்னு நினை
க்கிராயா. வாடா மாப்ளே.என்று
சண்டை போட்டுகொண்டிருந்த அந்த
இருவரும் ஒருவர் தோளில்ஒருவர்
கைபோட்டுஓர்அணியாகச் செல்வது
கண்டு வடிவேலு,முகத்தினை மிக
சோகமாக மாற்றி அடங்கப்பா!
என்னடா இது ஒரே மாயஜாலம்.
அடேங்கப்பா எனக்கு தலையே
சுத்துதுடாசாமி என்று நடிகர்
வடிவேல் கூறுவார் அந்த திரைப்ப-
டத்தில்.
சென்ற வாரம் தினத்தந்தி அதிபர்
சிவந்தி ஆதித்தன் மறைந்த போது
அவரது உடலுக்கு இறுதி வணக்கம்
செய்திடவந்தகலைஞரும் விஜய
காந்த் அவர்களும் நேருக்கு நேர்
சந்தித்து வணக்கம் கூறிய நிகழ்வு
அதை வடிவேலு பார்த்துகொண்டு
இருந்தால் மேலே நான் கட்டுரை
தலைப்பில் சொன்னது போல நடிகர்
வடிவேலு ஒரு தீர்க்கதரிசி என்று
சொல்வது உண்மை என்பது
இப்போது புரிகிறதா. பின்னாலே
நடக்கப்போவதை முன்னாலேயே
சொல்வதுதான் தீர்க்கதரிசனம்
என்பது !!
இது எப்படி இருக்கு !!
நன்றி.வணக்கம்.அன்புடன் மதுரை
T.R.பாலு.
No comments:
Post a Comment