தமிழனாக இருங்கள் !!
தமிழிலேயே பேசுங்கள் !!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் உயிரினும்
மேலான அன்புத் தமிழ் நெஞ்சகளே !! உங்கள்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்பு
நிறைந்த வணக்கங்கள் பல. நிற்க.
இப்பவும் நான் நேற்றைய தினம் துவக்கி எழுதிய
புரட்சிநடிகர் M.G.R. நினைவு அலைகள் பற்றிய
கட்டுரை இன்று அதன் தொடர்ச்சி 2ம் பகுதியாக
பலஉண்மைகளைஇன்றையஇளையதலைமுறை
அறிந்துகொள்ள வேண்டும் என்ற மன உந்துதல்
காரணமாக நான் இந்தக்கட்டுரைதனைத் தொடர்ந்து
எழுதுகிறேன் அன்பர்களே.
1969ல்அறிஞர் அண்ணா புற்றுநோயினால் தாக்கப்
பட்டு, இங்குள்ளோர் அளித்த சிகிச்சை சரிவர
குணம் அளிக்காததால் அமெரிக்க நாட்டின் பிரபல
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அவர்
சேர்க்கப்பட்டு மருத்துவர் மில்லர் அவர்களது சீரிய
கண்காணிப்பில் அவரது நோய் ஓரளவு சீர்செய்யப்-
பட்டு பின் இந்தியா அழைத்துவரப்பட்டார். ஆனால்
மருத்துவர் மில்லர் அண்ணா அவர்களை மருத்துவ
மனையில் இருந்து அனுப்பிடும்போது கூறிய சில
முக்கியமான ஆலோசனைகள் இங்கே உள்ளோர்
"பலரால்" புறந்தள்ளப்பட்டு அந்த ஆலோசனைப்படி
அண்ணா அவர்களை மருத்துவத்திற்கு பிந்திய
அறிவுரைகளை ஏற்றுக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று அண்ணா அவர்களையோ அவரது
குடும்பத்தினரையோ வற்புறுத்தி நடக்க விடாமல்
செய்தது என்ன காரணமாக இருக்ககூடும் என்றால்
ஒன்றுதனக்கு அண்ணா அவர்கள் வகித்த முதல்வர்
பதவி வேண்டும் என்ற தணியாத நீண்ட நாள்
ஆசையின் விளைவாக" யார்"செய்த சதியோ நான்
அறிந்திலேன்.அவர் நமை விட்டுவலுக்கட்டாயமாக
மரணத்தைத்தழுவிடஉதவிசெய்ததாகவேஅமைந்தி
ருந்ததுஎன்றேஅந்தக்காலத்தில்பலரும்பலவிதமாக
பேசியதுஎன்காதுகளில்விழுந்ததுஎன்றால்அது
மிகையல்ல.அவர் மறைத்தவுடன் தமிழ் இனத்
தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்
அவர்கள் ஒரு நெஞ்சுருகும் கவிதை ஒன்றினை
இயற்றி அதை இசைத்தட்டு வடிவில் வெளியிட்டு
அவரது கரகரத்த குரலில் கேட்டு கண்ணீர் வடித்தி-
டாத தமிழர்களே அன்று இல்லை.அதில்கடைசியாக
அந்த கவிதை அஞ்சலியில் ஒரு வரிவரும். அது
என்னவென்றால் :-
" என் இதயம் கனிந்த அண்ணா! உமக்கு மவுன்ட்
சாலையில்சிலைஅமைத்திருந்துஅழகுபார்த்தோம்.
ஆள் காட்டி விரல் நீட்டி நீ நின்றிந்தாய் அண்ணா.
இன்னும் ஒரே ஒரு ஆண்டுதான் இருப்பேன் என்று
உரைத்தாயோ. அண்ணா உன் கனிந்த இதயத்தை
எனக்கு கடனாக தந்திடு அண்ணா. நான் அங்கே
வரும்போதுஅதைநிச்சயமாகத்திருப்பித் தந்திடு-
-வேன்அண்ணா "
என்று கண்ணீர் மல்க கலைஞர் பாடிய கவிதைகள்
இன்று கேட்டாலும் கல்லும் கரைந்திடும்.
அந்த நிகழ்வு நடைபெறும் போது என் வயது 15. ஆம்
அன்பர்களே. நானும் எனது 11 வயதினிலேயே நம்
தமிழக அரசியல் வரலாறுகளைப்பற்றி அறிந்து
கொள்ள,தெரிந்து கொள்ள,புரிந்துகொள்ள ஆற்றல்
உள்ளவனாக இருந்தேன் என்பதே உண்மை.
1965ல் இந்தி மொழி ஆதிக்க திணிப்பினில் தம்மை
தமது கட்சியை ஈடு படுத்திக் கொண்டதினாலேயே
இங்கே காங்கிரஸ் கட்சியும் சரி அப்போதைய
முதல்வராக இருந்த P. பக்தவச்சலம் அவர்களும்
சரி இரண்டுமே தமிழகத்தில் ஆட்சியை மட்டும்
இழந்திட வில்லை அன்பர்களே. தமிழ்நாட்டு
மக்களின் அன்பையும் சேர்த்து இழந்து விட்டது
காங்கிரஸ்பேரியக்கம்.அதன்பலன்காத்துக்கொண்டு
இருந்த திராவிட இயக்கத்தின் கைகளுக்கு இந்த
தூய்மையான தமிழ்நாடு வலுக்கட்டாயமாக
தாரைவார்கப்பட்டதே உண்மை அன்பர்களே.
1967ல் நடை பெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ்
படுதோல்வி அடைந்தது.மூதறிஞர் இராஜாஜி
அவர்களின் மனதில் கொழுந்து விட்டு எரிந்து
கொண்டிருந்த காங்கிரசை குழிதோண்டி புதைத்திட
வேண்டும் என்ற தணியாத தீபம் அந்த ஆண்டு தனது
பணி நிறைவு பெற்றதை எண்ணி மகிழ்ச்சி
அடைந்தது என்பதே உண்மை.
மூதறிஞர்இராஜாஜிஅவர்கள்அன்றுதனதுமுழுபலத்
தையும் உபயோகித்ததால் மட்டுமே அனைத்து
எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி முதல்
முதலாக இந்திய தேர்தல் அரங்கினில் கூட்டணி
உருவாக்கி அந்த கூட்டணியை 1967ல் நடைபெற்ற
பொதுத் தேர்தலில் வெற்றி அடையச் செய்த அந்தப்
பெருமை சக்கரவர்த்தி திரு C. இராஜ கோபால
ஆச்சாரியார் அவர்களையே சாரும். அவர் அப்படி
ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியை உருவாக்கிட
வில்லை என்றால் இன்று வரை திராவிட கட்சிகள்
கண்ட ஆட்சிமன்ற கனவுகள் நினைவாகிடாமல்
கனவாகவே இருந்திருக்கும் அன்பர்களே.
அப்போதும் கூட நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
.ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு ரூபாய்க்கு ஒரு படி
அரிசி போடுவோம் அதன் பிறகு ரூபாய்க்கு மூன்று
படி அரிசி போடுவோம் என்று சொல்லித்தான் ஆட்சி
பிடித்தனர் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி
கட்சியினர்.சத்யமேவ ஜெயதே!! வாய்மையே
வெல்லும் என்ற தாரக மந்திரத்தினை பின்தள்ளி
பொய்மையே அன்று வென்று ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து இடம் பிடித்தது அன்பர்களே. தேர்தல்
முடிவுகள் வெளிவந்தவுடன் அந்நாளைய முதல்வர்
P.பக்தவத்சலம் கூறிய அந்த தொலைநோக்கு
சிந்தனை மிகுந்த வார்த்தைகள் இன்று நினைத்தால்
கூட என் மெய் சிலிர்க்கிறது. அவர் சொன்ன அந்த
அர்த்தம் பொதிந்த வார்த்தை இதுதான் :-
" தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவ ஆரம்பித்து
விட்டது மக்களே. உஷாராக இருங்கள் "
கட்டுரை மீண்டும் நாளை தொடரும்..........
No comments:
Post a Comment