தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழில் மட்டுமே பேசிடுக !!
( தமிழர்களிடமாவது)
உலகெங்கிலும் உண்மை அன்புடனும்
நற்பண்புடனும் பாசத்தோடும் நல்ல
நேசத்தோடும் வாழ்ந்து வரும் எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த நல் வாழ்த்துக்களுடன் கூடிய
வணக்கங்கள் பலபல.
இன்றையதினம் மேலும் ஒரு உண்மை
நிகழ்வுதனை விளக்கும் விதமாக
தமிழ்ப் புலவர்களது குண நலன்கள்
அந்தக் காலம் தொட்டு இன்றுவரை,
எப்படி காலச்சக்கர பரிணாம வளர்ச்சி,
எப்படி இருந்தாலும், அவர்களது குணம்
ஏதாகிலும் மாறிஉள்ளதா அல்லது அது
அப்படியேதான், காலம் காலமாக எந்த
மாற்றத்திற்கும் தன்னைஆட்கொள்ளா
மல்அப்படி உள்ளது உள்ளபடியேதான்
வாழ்ந்துகொண்டும்வளர்ந்துகொண்டு
ம்தான்இருக்கிறதா என்பதனை இங்கே
பல்வேறு நிகழ்வுகள்மூலமாக உங்கள்
அனைவரின் சிந்தனைக்கும் விருந்து
ஒன்று படைக்க இருக்கிறேன். பார்த்து
படித்து இன்புற வேணுமாய்க் கேட்டுக்
கொண்டு விடைபெறுகிறேன்.
பொதுவாக புலவர்களுக்கு என்று ஒரு
இயற்கையான தனி குணம் என்று
ஒன்று உண்டு. அவர்கள் எப்போதும்
தங்களுக்கு என்று தனியாக ஒரு தனி
உலகத்திலே நீராடி மகிழ்வதுண்டு!!
கனவுலகம்தான் அவர்கள் களித்து
மகிழ்ந்திடும் தனி வீடு!! உலகினில்
யாராக இருந்தாலும் நூற்றுக்கு ஐந்து
பேர்கள் வார்த்தைகளுக்குக்கு அர்த்தம்
பார்ப்பவர்கள் என்றால், அந்த ஐவரில்
புலவர் என்பவர் தனி ரகம். எப்படி
என்றால் இவர் ஒவ்வொரு
எழுத்துக்கும் பொருள் பார்க்கும் குணம்
உள்ளவர்.அவர் யார்என்றால்புலவர்
என்பவர் மட்டுமே!! அப்படி ஒரு குணம்
இவரிடம் இருப்பதனாலேயே புலவர்
எவராக இருப்பினும் அவரது முகத்தை
உற்று நோக்கி பாருங்கள் சராசரியான
மனிதர்களது திருமுகத்தினை விட
இந்த புலவர்களது முகமோ சற்று
இறுக்கமாகவேஎன்றும் காணப்படுவது
உண்மையிலும் உண்மை.இந்தவகை
இறுக்கத்திற்கு காரணம் தாம் கற்று
அறிந்த " தமிழ்மொழி " தமக்கு பக்க
பலமாக என்றும் இருக்கும் ஆகவே
தம்மையாராலும் அசைத்திடமுடியாது
என தமிழ்மொழி மீது இவர்கள்
வைத்துள்ளஆழமானமொழிப்பற்று
தான்இங்கேஉண்மைகாரணம்என்பது
இச்சிறியவன்மதுரைபாலுவின்பல்
வேறு கண்டுபிடிப்புகளில் இதுவும்
ஒன்று அன்பர்களே !!
சரி!! அன்பர்களே !!நாம் தலைப்பிற்குள்
இப்போது செல்வோமா ?
மாசறு தமிழ்ப்புலவர்களுள்தலையான
-தொரு இடம் அதனைத் தக்கவைத்த
பெருமை என்றும் கவிச்சக்ரவர்த்தி
கம்பர் பெருமகனுக்கே உண்டு. அவர்
போல தமிழின் மீதும் அதன் சுவையின்
மீதும் அளவிடற்கரிய பற்று, பாசம் ,
கண்ட நல்லதோர் புலவர் காண்பது
என்றும் அரிதிலும்அரிது அன்பர்களே!!
அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்
கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமகன்
மன்னர் ஒருவரது அரசவைக் கவி-
ஞராக பணி புரிந்துகொண்டு வரும்
போது திடீரென்று ஒருநாள் என்ன
நடந்ததோ எது நடந்ததோ ஒன்றும்
புரியவில்லை. மன்னர்பிரான் நம்
கம்பரைப் பார்த்து உமது பேச்சும்
செயலும் எமக்கு பிடிக்கவில்லை
ஆதலால் உடனே நீர் எங்காவது
போய்த்தொலையும் என்று வெறுத்துச்
சொன்னவுடன் கம்பரும் புன்முறுவல்
முகத்தில் அரும்ப, மன்னரைப் பார்த்து
உடனே பாடினார் பாருங்கள் ஒரு மிக
அருமையான பாடல். அட,அட, அந்தப்
பாடலின் அருமை பெருமைதனைச்
சொல்லிட எனக்கு இந்த ஒரு பிறவி
போதாது அன்பர்களே. முதலில் நாம்
பாடலைப் பார்ப்போம் !!
" மன்னவனும் நீயோ !!
வள நாடும் உமதோ ?
உம்மை அறிந்தோ யாம்
தமிழை ஓதினோம் !
எமை ஏற்காத நாடும் உண்டோ ?
உண்டோ குரங்கேற்காக் கொம்பு !!
என்றுசொல்லிவிட்டு துண்டை உதறித்
தோள்மேல் போட்டுக் கொண்டு அந்த
நாட்டைவிட்டுக் கிளம்பினார். பிறகு
கம்பர் அந்த நாட்டை விட்டு விட்டு
வேறொரு நாட்டிற்கு சென்றதால்
இந்த நாடு நரகமாகியது.சோலைவன-
மெல்லாம் பாலைவனமாகியது.
தமிழை, தமிழனை,தமிழ்ப்புலவனைப்
பகைத்ததினால் என்னென்ன நடந்து
உள்ளது பார்த்தீர்களா. அதுபோல
இந்த உலகில் தமிழனை,விரட்டிய
நாட்டுக்கும் அவனை அந்த தமிழ்
இனத்தை அளித்த பக்ஷேக்கள் நாளை
பகல் "பிக்ஷாந்தேகி" களாக வலம்
வரப்போகும் நாள் வெகு தொலைவில்
இல்லை அன்பர்களே.
மற்றும் ஒரு உணர்ச்சிவசப்படும் தமிழ்
புலவனைப்பற்றிய கதைஇன்றுமாலை
இதே இடுகையில் உங்களுக்கு எனது
"எண்ணத்தில்தோன்றியவை"இணைய
தளத்தின் வலை பதிவில் நீங்கள்
பார்த்து,படித்து பின் ரசித்திடுங்கள்
அன்பர்களே !
அதுவரை பொருமை காத்துஇந்தக்
கட்டுரைதனைப் படித்த அத்துணை
தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது இதய
பூர்வ நன்றிதனைக் காணிக்கை செய்து
விடைபெருகிறேன்.
வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment